நடைபாதை இட்லிக்கடையும் நானும் - ஒரு நிமிடக்கதை
நள்ளிரவைக்கடந்தும் விழித்து இருந்து, டான் பிரவுனின் ஏஞ்சல் அண்ட் டெமொன்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டு அப்படியேத் தூங்கிப்போன நான், எழுந்தபோது மணி எட்டரை. கூன்பாட்டியின் நினைவு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு நான் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் உணவகத்தை நோக்கி வண்டியை விரட்டினேன். என்னை என் அலுவலக மக்கள் கஞ்சன் என அழைப்பதற்கு இந்த உணவகத்தில் சாப்பிடுவதும் ஒரு காரணம்.
நடைபாதையின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டி. அதில் ஒரு பக்கம் மண்ணென்னெய் அடுப்பு, இட்லிப்பானை , வண்டியை சுற்றி, மரப்பெஞ்சுகள் காலை ஏழரை மணியில் இருந்து 10 வரை படு சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும். சாம்பார், காரச்சட்னி. தேங்காய் சட்னி உடன் தோசை நாலு ரூபாய் ,4 இட்லி ஆறே ரூபாய்தான்.
ஒரு வாரத்திற்கு முன்னால் இப்படி 10 ரூபாயில என் காலை சாப்பாடை முடித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த கூன் பாட்டியை முதன் தடவையாக பார்த்தேன். கையில் மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நின்றார். எதுவும் பேசவில்லை ஆனால் கண்களில் பசி தெரிந்தது,
“அண்ணே, அந்தப் பாட்டிக்கு நாலு இட்லி கொடுங்க, அதுக்கும் சேர்த்து இந்தாங்க காசு”
மறுநாள் சாப்பிடப்போகும்போது அந்த தள்ளுவண்டி இருக்கும் இடத்தில் இருந்து பத்தடி தள்ளி இருந்த மரத்தினடியில் உட்கார்ந்திருந்த. அந்தப் பாட்டி நான் கடையில் வண்டியை நிறுத்தியவுடன் மெதுவாக எழுந்து என்னருகே வந்து நின்றார். அன்றில் இருந்து கடைசி ஒரு வாரமாக தினமும் நான் சாப்பிடப்போகும்பொழுது அந்த பாட்டிக்கும் சாப்பாடு வாங்கித் தருவது வழக்கமாகிவிட்டது.
இப்பொழுது ”அந்த பாட்டி. நான் வருவேன் இட்லி வாங்கித்தருவேன்னு காத்திருக்குமே!!.. அந்தக் கடைக்காரர் பாட்டியை விரட்டி இருப்பாரோ,” என நினைத்துக் கொண்டே அரை மணிநேரம் தாமதமாக அந்தக் கடைக்கு வந்துசேர்ந்த பொழுது ,
பாட்டியை ஓரமாக உட்கார வைத்து, இட்லி வைத்து பரிமாறிக்கொண்டிருந்த அந்த நடைபாதை
இட்லிக்கடைக்காரர் என்னைப்பார்த்ததும்.
“வாங்க தம்பி, என்ன லேட், கிழவி நீங்க வருவீங்களான்னு எல்லா பைக்கையும் பார்த்துக்கிட்டே இருந்துச்சு, பார்க்கவே மனசு கஷ்டமாஇருந்துச்சு, அதான் நானே சாப்பிடக்கூப்பிட்டுட்டேன்”
----------
19 பின்னூட்டங்கள்/Comments:
super kathai...
thodarpukal enrum arupadathu enpatharkana sirantha utharanam.
antha patti sappittathukku kadaikkarar kasu vanginara?
நல்லாருக்கு நண்பா
விறுவிறுப்பா கதை சொல்றீங்க வினையூக்கி.
அருமையான கதை.....
வாழ்த்துகள் வினையூக்கி!!!!!
பாம்பின் கால் பாம்பு அறிவது போல் இந்த ஏழைகள் பற்றி ஏழைகளே அறிந்துதவுவார்கள். நடைமுறை
உண்மையை தங்கள் கதை அழகாகச் சொன்னது.
வினையூக்கி,
அருமையான கருத்தாழம் மிக்க கதை.
@யோகன் பாரிஸ்
//இந்த ஏழைகள் பற்றி ஏழைகளே அறிந்துதவுவார்கள்.//
உண்மைதான்...!
உங்கள் பேய்க்கதைகள் அல்லாத கதைகளில் மனிதநேயம் அடியோடுவதைக் காண முடிகிறது. நல்ல கதை. வாழ்த்துகள்.
நல்லா இருக்கு.
டச்சிங் டச்சிங்
கதை அருமை வினையூக்கி...
அருமை! வேரென்ன சொல்ல :)
பறவைகளுக்குப் போட ரொட்டி வீட்டில் தீர்ந்து போச்சுன்னு இப்பத்தான் அரக்கப் பரக்க ஓடிப்போய் வாங்கியாந்து போட்டேன்.
எதிர்பார்த்துக் காத்திருக்கும் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நல்லா இருக்கு...
வினையூக்கி,
எதுக்குமே ஒரு 'வினையூக்கி' வேனும்கிறதை சொன்ன கதை :)
நல்ல கதை. கொடுப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் இருக்கும் தனிப்பட்ட அன்பு, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, நிறைவேறுவதில் நெகிழ்ச்சி - ஆகா ஆகா
நல்வாழ்த்துகள்
Nice
இப்படிப்பட்ட மனிதநேயக்கதைகள் இருக்க அப்பப்ப பேய்பிடிச்சு அலைவதேன்?
அழகானகதை அளித்தமைக்கு நன்றி
மிக அருமையான கதை வினையூக்கி!!
உங்கள் கதைகூறும் திறன் மிகவும் மேம்பட்டிருக்கிறது, வாழ்த்துக்கள் வினையூக்கி!!
சனிகிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை எல்லாம் கூடவா பாட்டிக்கு இட்லி வாங்கி கொடுப்பீங்க ...
இனிமேல் குழந்தைகளுக்கு பாட்டி சுட்ட வடை கதையோட இதையும் சொல்லலாம் ...
வாழ்த்துக்கள் .... அப்புறம் இது ஒரு நிமிட கதைதானே ?
arumiyana kadhai.. indha kadhaiyai padithadhum mei silirthu ponean..
Post a Comment