தொலைபேசி எண் - ஒரு நிமிடக்கதை
குழந்தை அஞ்சலியுடன் விளையாடிக்கொண்டே இருந்த கார்த்தி, வீட்டு வேலைகளை முடித்து அருகில் வந்து உட்கார்ந்த ரம்யாவிடம்
"ரம்யா, என்னோட புது மொபைல் நம்பரை குறிச்சுக்கோ!”
“கார்த்தி, என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, ஸ்டோர் பண்ணிடுறேன்”
ரம்யா சொன்னவாறே செய்துவிட்டு குழந்தை அஞ்சலிக்கு தனது உலாபேசியின் எண்ணை மனனம் செய்யவைத்த கார்த்தி அஞ்சலிபாப்பாவிடம்.
“கார்த்திபா வோட போன் நம்பர் சொல்லுடாக்குட்டி”
“98407...”
”ம்ம் அடுத்த அஞ்சு நெம்பர் சொல்லுடா செல்லம்”
அதையும் அஞ்சலிபாப்பா சரியாகச் சொல்ல வாரி அணைத்துக் கொண்டான்.
“கார்த்தி, யூகேஜி படிக்கிற குழந்தைக்கு போன் நெம்பர் எல்லாம் ஞாபகம் வச்சுக்கனும்னு என்ன அவசியம்?”
“ நினைவு சக்தியை அதிகமாக்கிக்கொள்ள இது கூட ஒரு பிராக்டிஸ் ரம்யா.. அது இருக்கட்டும் நாளைக்கு ஈவ்னிங் மோகன் சார் வீட்டுல சின்ன கெட்டுகெதர்... அஞ்சலியைக் கூட்டிட்டு நேரா அங்க வந்துடு”
மறுநாள் புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த மோகனின் வீட்டிற்கு ரம்யா அஞ்சலிப்பாப்பாவுடன் வண்டியில் போகும்பொழுது அவளது ஸ்கூட்டி பாதி வழியில் நின்று தகராறு செய்தது. சரி கார்த்தியை உலாபேசியில்கூப்பிடலாம் என்றால் அதை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்திருந்தாள். வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு அருகில் இருந்த ஒரு கடைக்கு வந்து கார்த்திக்கு தொலைபேச நினைத்தபொழுதுதான் கார்த்தியின் புது எண் அவளுக்குத் தெரியவில்லை. அஞ்சலிப்பாப்பாவிடம்
“குட்டிமா, கார்த்திபாவோட போன் நம்பர் சொல்லு”
“9..8.. ..4... 0 7” என தனது மழலை மொழியில் கார்த்தியின் உலாபேசி எண்ணை அஞ்சலிப்பாப்பா சொல்லி முடித்தவுடன் அதை இறுக்க அணைத்த படி, இரவு போனதும் தனது எண்ணையும் அஞ்சலிப்பாப்பாவிற்கு மனப்பாடம் செய்ய வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கார்த்தியை, தொலைபேசியில் அழைத்தாள்.
-----
11 பின்னூட்டங்கள்/Comments:
புத்திசாலிகள்
புத்திசாலித்தனமா
சிந்திக்கிறாங்க...
வித்தியாசமாத் தான் இருக்கு :)
தலைவா... கலக்கல்... :))
பேய் கதைய புளிய மரத்துல தொங்க விட்டுட்டு நீங்க இப்படியே கன்டினியு செய்ங்க
ஒரு குழந்தைய நடமாடும் டெலிஃபோன் டைரக்டரி ஆக்கிட்டீங்க. நல்லாயிருங்க. :)
கதை நல்லாயிருக்குது.
அருமை!!!
இந்தக் காலத்து குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்!!!
//இந்தக் காலத்து குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்!!!//
அப்படீன்னா... நம்மளோடு அப்பா,அம்மாக்கள் எல்லாம் மண்டுகளா? :)))
நல்லா இருக்கு...! நியாயமாக எல்லார் வீட்டு குழந்தைகளுக்கும் தங்களின் அம்மா அப்பா பெயரோடு, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களை சொல்லிக்கொடுத்தல் அவசியம். ஒரு வேளை குழந்தைகள் தொலைந்து போனால்.. அப்போது இதுபோன்ற பயிற்சிகள் கைகொடுக்கும்!
அது சரி... உலாபேசி.... அசத்துறியே மாப்பு!
சில நேரங்களில் முக்கிய எண்கள் ஞாபகத்தில் இல்லாமல் நமக்கு ஏற்படும் ஒரு தவிப்பு!!
short and நச் வினை :)
அழகான கதை, பாராட்டுக்கள் வினையூக்கி!!
\\“கார்த்திபா வோட போன் நம்பர் சொல்லுடாக்குட்டி”\\
கார்த்திபா????
கார்த்தி அப்பா வோட ஃபோன் நம்பர்.....ஓகே ஒகே, புரிந்தது!!
this s already publishd in kumudham....யார ஏமாத்துறீங்க ??
// this s already publishd in kumudham....யார ஏமாத்துறீங்க ?? //
தமிழ் சினிமா செய்திகளே !!
கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் (posted by வினையூக்கி at 10:49 PM on Apr 9, 2008)
இணையத்தில் பதியப்பட்டக் கதை !! நீங்கள் கேள்விக் கேட்க வேண்டியது குமுதத்தை :)
Post a Comment