Tuesday, April 01, 2008

”பிடிச்சிருக்கு” அசோக், வளர்ந்து வரும் தமிழ் கதாநாயக நடிகர்



மத்திய 90களில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீகிருஷ்னா தொலைக்காட்சித்தொடரில் சிறுவயது கிருஷ்ணாவாக நடித்தவர் தான் தற்பொழுது முருகா, பிடிச்சிருக்கு ஆகிய படங்களின் மூலமாக தமிழ்ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்து இருக்கும் அசோக் என்ற இளம் கதாநாயக நடிகர். அந்த தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதையும் பெற்றவராம்.

திருவையாறில் பிறந்து இருந்தாலும், மும்பையில் படித்து வளர்ந்த அசோக், முறையாக பரதம், மேற்கத்திய ஜாஸ் பாலே நடனமுறைகளைப் பயின்றதோடு மட்டுமல்லாமல் கிஷோர் நமித் கபூர் நடிப்பு பயிற்சி மையத்தில் நடிப்புக்கானப் பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டவர் என விக்கீபிடியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




ஆர்.டி.நடேசனின் இயக்கத்தில் முருகா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அசோக், பிடிச்சிருக்கு படத்தின் வாயிலாக ஒரு நல்ல அறிமுகம் தமிழுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லவைத்தார். விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அழகான பாடலின் காணொளி கீழே




“பிடிச்சிருக்கு” படத்தைப்பற்றி சிஃபி யின் விமர்சனத்தைக் காண இங்கே சொடுக்கவும்

ரீடிப் இணையதளத்தின் விமர்சனம் இங்கே


லால்ஜோஸின் இயக்கத்தில் திலீப் நடித்த முல்லா என்ற மலையாளப்படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

நல்லத் தோற்றமும் குரல் வளமும் கொண்டுள்ள அசோக், தனது நடிப்புத்திறமையால் தமிழ் திரையுலகில் நல்ல பேரையும் புகழையும் அடையவேண்டும் என்று வாழ்த்துவோம்


1 பின்னூட்டங்கள்/Comments:

said...

அவருக்கு வாழ்த்துக்கள்