Friday, March 07, 2008

ஒரு வார இதழில் படித்து ரசித்தக் கதை

பத்து, பணிரெண்டு வருடங்களுக்கு முன்னர், ஒரு வார இதழில் படித்தக் கதை இது. கதையின் கரு அப்படியே நினைவில் இருக்கிறது. மிகவும் பாதித்த அந்த கதைக்கருவை மறு
உருவாக்கம் செய்து தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அருமையான கருவுடன் முன்பு கதையாகத் தந்திருந்த கதாசிரியருக்கு நன்றிகள்.
---------------------------
மோகனும் ரம்யாவும் சொன்ன நேரத்தில் மதிய விருந்திற்காக கார்த்தியின் வீட்டிற்கு காரில் வந்திறங்கினார். மோகனின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்தியும்,அவனது
மனைவி ஜெனியும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தனர். மோகனின் மனைவி ரம்யா கையோடு கொண்டு வந்திருந்த பரிசு பொட்டலத்தை , கார்த்தி , ஜெனி தம்பதியினரின் மூன்று வயதுக் குழந்தை அஞ்சலிக்கு கொடுக்க “தாங்க்ஸ் ஆண்ட்டி” சொல்லி வாங்குவதற்குள்ள ரயில் வரும் சத்தம் கேட்க வெளியே ஓடிப்போனாள்.

“எப்படி கார்த்தி இந்த ட்ரெயின் சத்தத்துல நைட்ல தூங்க முடியுமா?” என மோகன் கேட்க அதற்கு கார்த்தி சிரித்துக்கொண்டே

“பழகிடுச்சு சார், இப்போ இந்த சத்தம் இல்லைன்னா தான் தூங்க முடியாது ”

அஞ்சலிப்பாப்பா கொஞ்சம் டல்லடித்த முகத்துடன் உள்ளே வந்து மோகன் கொடுத்த பரிசு பொட்டலத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு சிரித்த சின்னப்புன்னகை உற்சாக
மனநிலைக்கு அஞ்சலிபாப்பா வந்துவிட்டாள் என்றுக் காட்டியது.“தாங்க் யூ சார், எங்க வீட்டுக்கு நீங்க வந்தது எங்களுக்குப் பெருமை”

“கம் ஆன் கார்த்தி.. நீ எவ்வளவு நாளாக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க, எங்களால் தான் வரமுடியுறதுல்ல”

மீண்டும் ரயில் சத்தம் கேட்க அஞ்சலிப்பாப்பா வெளியே ஓடினாள். திரும்ப உள்ளே சோகமாக வந்து கார்த்தியிடம் வந்து “கூட்ஸ் டிரெயின் பா” என சொல்லி அவன் மடியில்
படுத்துக்கொண்டாள். ஜெனி அவளை எழுப்பி டீவியில் போகோ சேனலை பார்க்க வைத்து விட்டு கார்த்திக்கும் மோகன் தம்பதியினருக்கும் சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள்.

அருமையான விருந்திற்குப் பின் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்த பொழுது சாய ஆரம்பிக்க மோகனும் ரம்யாவும் புறப்பட்டனர். இருவரும் காரில் ஏறும்போது மீண்டும் ரயில் சத்தம் கேட்க, பாசஞ்சர் ரயில் என அதைப்பார்த்ததும் அஞ்சலிப்பாப்பா உற்சாகமாக குதித்து குதித்து டாட்டா சொன்னாள். மோகனும் ரம்யாவும் குழந்தையின் குதுகலத்தை ரசித்துப்
பார்த்துக்கொண்டிருந்தனர். ரயில் போனதும் திரும்ப டல்லடித்தது முகம். ரம்யாவுடன் வீடுதிரும்பிய

மோகன் மறுநாள் வழக்கத்தை விட சீக்கிரம் கிளம்புவதைப்பார்த்த ரம்யா

“எங்கப் போறீங்க”

“ தஞ்சாவூர் வரை போயிட்டு வரேன், டிரெயின்ல போறேன் ரம்யா, ” கிடைத்த பதிலைப் புரிந்து கொண்டாள்.

தஞ்சாவூர் செல்லும் ரயிலில் கார்த்தி வீடு வரும் பக்கமாக அமர்ந்து கொண்டார். 20 நிமிடத்தில் கார்த்தி ரயில் கார்த்தி வீட்டைக் கடக்க, வேலிக்கு அப்பால் அஞ்சலிப்பாப்பா
ரயிலுக்கு டாட்டா காட்ட, ரயிலில் இருந்து மோகன் திரும்ப டாட்டா காட்டினார். ரயில் போனதும் குஷியாக வீட்டுக்குள் ஓடி வந்த அஞ்சலிப்பாப்பாவின் சந்தோசத்தை கார்த்தியோ ஜெனியோ கவனிக்கவில்லை.
-----------------------------

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

அஞ்சலியின் உணர்வைப் புரிந்துகொண்ட மோகன்
பாராட்டுக்குரியவர்
அதைவிட, குழந்தைமனத்தைப்
புரிந்து எழுதிய மூலக்கதை ஆசிரியருக்கும்,
உங்களுக்கும்
பாராட்டுதல்கள்

said...

இந்த கதையை நான் படித்திருக்கிறேன் வினையூக்கி.

தினமும் ட்ரெயினில் செல்பவர்களுக்கு டாட்டா காட்டி, யாரும் பதிலுக்கு டாட்டா காட்டாததால் குழந்தை சோர்ந்துப் போயிருக்கும். குழந்தையின் சோர்வைப் போக்க மறுநாளே தந்தை எந்த விசேஷ காரணமுமின்றி ட்ரெயினில் பயணித்து தன் வீடு வரும்போது டாட்டா காட்டும் குழந்தைக்கு பதில் டாட்டா காட்டுவார்.

குமுதத்தில் வந்த சிறுகதை என்பதாக நினைவு :-)

said...

Cute story, very nice Vinayooki!!

[sorry tamil font ileenga]

said...

சின்னதானாலும் படிச்சி முடிச்சதும் ஒரு மாதிரியான சந்தோஷம். ஷேர் பண்ணதுக்கு நன்றிங்க.

said...

பொதுவாக பேருந்திலோ, இரயிலிலோ அல்லது வேறு வாகனத்திலோ போகும் போது குழந்தைகள் டாட்டா காட்டினால் மறக்காமல் டாட்டா காட்டுவதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன். சில சமயம் வெறுமனே வேடிக்கைப்பார்க்கும் குழந்தைகளுக்கு டாட்டா காண்பிக்கையில் அவர்களது முகத்தில் வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சியை காண்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தயக்கத்துடன் அவர்களும் பின் டாட்டா காட்டுவது இன்னும் மகிழ்ச்சி.
கள்ளங்கபடமில்லாத கிராமத்து சிறார்கள் கையசைப்பதை அனுபவிப்பதில் ஒரு சுகம்.

நன்றி.

said...

நெகிழ்வாக இருந்தது. :)

said...

இது ரொம்ப நிஜமான உணர்ச்சிங்க! என் சிறுவயதில் இப்பிடி அஞ்சலி பாப்பா மாதிரி அழுத நிகழ்வுகள் நிறைய உண்டு
அன்புடன் அருணா

said...

உண்மையிலேயே ரொம்ப நல்லாயெழுதியிருக்கீங்க வினையூக்கி..

மூலக்கதை ஆசிரியரும் பாராட்டுக்குரியவர்..

சென்ஷி

said...

அருமையான கதை!!!!
வினையூக்கி....

said...
This comment has been removed by the author.
said...

சின்ன சின்ன சந்தோஷங்கள் விலை மதிப்பற்றவை. அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. வளர்ந்தவர்களுக்கும் கூட. அருமையான கதை வினையூக்கி

said...

நல்ல கதை.

said...

தம்பி!
அழகான கதை, எனக்கு வண்டிகளில்
உள்ள குழந்தைகளுக்குக் கைகாட்டும் பழக்கம் இப்போதும் உண்டு.சில சமயம் பைத்தியக்காரத்தனம் போல இருந்தாலும், அவர்கள் பதிலுக்குக் கை காட்டி மகிழும்போது சந்தோசமாக இருக்கும்.
படத்தில் உள்ள புன்னகை, கொள்ளை
அழகு. இதை மே 2006 ல் ஜோக்-காடு
எனும் பதிவில் பார்த்து, இன்றும் என் விருப்பமான பட்டியலில் வைத்துள்ளேன்.

said...

Simply WOW... I decided to do the same, if i get chance.