ஜெனி கண்டிப்பா வருவாள் - ஒரு நிமிடக்கதை
”புதன்கிழமை என் பேத்தி ஜெனி வரா, திரும்பபோறப்ப என்னை பாம்பே கூட்டிட்டுபோறேன்னு சொல்லி இருக்கா” என கடைசி நான்கு நாட்களாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்த பெரியவர் வேதநாயகத்திடம் விபத்தொன்றில் ஜெனி இறந்து போன விசயத்தை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என அவரது கிராமத்து வீட்டில் உறவினர்களிடையே ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
கடைசி சில மாதமாகத்தான் எழுந்து நடமாடும் அளவுக்கு உடல்நிலை தேறி இருக்கும்பொழுது இது போன்ற அதிர்ச்சி செய்தியை சொல்ல என்னை வேத நாயகத்திடம் அனுப்பினார்கள்.
“தாத்தா, நம்ம ஜெனி ஒரு ஆக்ஸிடெண்ட்ல கர்த்தர் கிட்ட போயிட்டாங்க”
எந்த சலனமும் இல்லாமல் ஒரு கணம் பார்த்துட்டு “போடா, போய் வேலை இருந்தா பாரு”
சிறிது நேர மௌனத்திற்குப் பின், அறையை விட்டு வெளியே வந்த வேதநாயகம், உறவினர்களிடம்
“என்ன இங்க கூட்டம், ஜெனி வரேன்னு சொல்லி இருக்கா, கண்டிப்பா வருவா, யாரும் தேவையில்லாம எதுவும் பேசவேண்டாம்” சொல்லிவிட்டு உள்ளே போய் போனமுறை ஜெனி அவருக்கு கொடுத்திருந்த பைபிளை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
அடுத்த இரண்டு நாட்களும்,வழக்கம்போலவே அதிகாலையில் எழுந்து குளித்து , சர்ச்சுக்குப் போய் விட்டு வரும்வழியில் கோமதிவிலாஸில் காபி, இட்லி சாப்பிட்டுவிட்டு என மிகச்சாதரணமாகவே வேதநாயகம் நடந்து கொண்ட விதம் எனக்கு புதிராய் இருந்தது.
இத்தனைப் பெரிய துக்கத்தை இவரால் எப்படி
தாங்கிக் கொள்ள முடிகிறது. தாங்கிக் கொள்கிறாரா இல்லை அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டாரா என்றக்குழப்பத்தில்,
“தாத்தா,உன்னால எப்படி இப்படி இருகக முடியுது, நிஜமாவே ஜெனி செத்துப் போயிட்டாங்க,”
“போடா பைத்தியக்காரா, ஜெனி நாளைக்கு கண்டிப்பா வருவா, நீ பார்த்துக்கிட்டே இரு” கையில் பைபிளுடன் உள்ளே உறங்கப் போன வேதநாயகம் மறுநாள் காலை எழுந்திருக்கவேவில்லை.
-----------
8 பின்னூட்டங்கள்/Comments:
உண்மை கற்பனையைவிட வினோதமானது(facts are stranger than fiction)
இப்படி எங்கோ நடந்திருக்கக் கூடும்; ஆனால் அது உங்களுக்கு மட்டும் புலப்படுவது எப்படி? ஆவி விளையாட்டோ!!
ஜெனியிடமும் ரம்யாவிடமும்
கருப்புக்கொடி போராட்டத்தைக் கைவிடச்சொல்லுங்க
வருகைக்கு நன்றி சிவஞானம்ஜி. ஆமாம் நீங்க சொல்லுவது மிகச்சரி. நிஜமான சம்பவங்கள் கற்பனையிலேக் கூட நிகழ்ந்திராத வகையில் சில சமயங்களில் நடக்கும். “ஆவி” விளையாட்டல்ல, இந்த “பாவி” விளையாட்டு...
ஏன் இந்த கொல வெறி??
sariya puriyalla!!:-(
@மங்களூர் சிவா
:)))
@யோசிப்பவர்
ஜெனி சொன்னபடியே , தாத்தாவை வந்து அழைத்துச் சென்றுவிட்டாள்.
கற்பனை வளம் நல்ல இருக்கு அதுக்கு ஏன் ஜெனியை கொலை செய்தீங்க!!!
கதை நல்லாயிருக்கு!!!
பாவம் என தோன்ற வைக்கும் கதை!
ஜெனிய ஒருதடவையாவது சாகடிக்காம சிரிக்கவையுங்களேன் please... :)
நல்லாயிருக்கு வினையூக்கி:))
Post a Comment