பதிவர் சந்திப்பு - 30/03/2008, ஞாயிறு மெரினா கடற்கரை
குசும்பன் தனது திருமணத்திற்கு பதிவர்களை அழைக்கவும், அமீரகத்தில் இருந்து விடுப்பில் வந்து இருக்கும் அபிஅப்பா பதிவர்களை சந்திக்கும் முகமாகவும் இந்த பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே, மா.சிவக்குமாருடன் மெரினா கடற்கரை, காந்தி சிலை வளாகத்திற்குச் சென்ற போது அங்கே உண்மைத்தமிழன் எல்லோரையும் வரவேற்க கையில் வேர்க்கடலைப் பொட்டலத்துடன் காத்துக்கொண்டிருந்தார்.
மா.சிவக்குமாரும் உண்மைத்தமிழனும் வலையுலக வசிஷ்ட மாமுனி யார் என விவாதித்துக்கொண்டிருந்த போது அதியமானும் அவர் பின்னயே பாலபாரதி,லக்கிலுக்,நந்தா ஆகியோர் வந்து சேர பதிவர் சந்திப்புக்கான களைக் கட்டியது நடுமையமாக அமைந்திருந்த தண்ணீரற்ற குளத்தில் அமர்ந்து பரஸ்பரம் நலம் விசாரிப்புக்களுக்கு ஊடாகவே குப்புசாமி செல்லமுத்து,பைத்தியக்காரன்,ஆடுமாடு,ஜியோவ்ராம்சுந்தர்,நித்யகுமாரன்,கடலையூர் செல்வம்,இரட்டைப்பதிவர்கள் அதிஷா ,ஆழியூரான்,சுகுணாதிவாகர்,வரவனையான்,டோண்டு,ஊற்று,முரளிக்கண்ணன்,
சந்தோஷ்,ஜேகே,வெங்கட்ரமணன், NHM எழுதி வடிவமைத்த நாகராஜன்,சௌந்தரராஜன்,பாரி வந்தமர்ந்து சந்திப்பின் நாயகர் குசும்பனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபொழுதே அவர் ஆர்குட் புகைப்படங்களில் காணப்படும் தோற்றத்தைவிட மென்மையாக, கல்யாணபூரிப்புடன் வந்து சேர்ந்தார்.
துணைநாயகர் அபிஅப்பாவிடம் இருந்து பாலபாரதிக்கு போன் வர, இவர் எங்கே இருக்கீங்க எனக்கேட்க, ஏதோ அடுத்த ஸ்டாப்பில் இருப்பது போல, கிண்டியில இருக்கேன் ஒரு ஆட்டோவையும் காணோம் என்று சொல்ல, சரி 5 லிட்டர் கேன் எங்கே எனக்கேட்டதும் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லக்கிலுக்கும் 5 லிட்டர் கேனைப் பற்றி விசாரித்தபோதும் அதே போல் போன் கட் செய்யப்பட்டதாம்.
எல்லோருக்கும் குசும்பன் தனது திருமண அழைப்பிதழ்களை தனிப்பட்ட முறையில் கொடுத்தார். சென்னைப்பதிவர்கள் சார்பாக பதிவர்கள் பைத்தியக்காரன் மற்றும் குப்புசாமி செல்லமுத்து ஆகியோர் குசும்பனுக்கு திருமணப்பரிசளித்தனர்.
தட்டுத்தடுமாறி[ஆட்டோக்கிடைக்காமல்] வந்து சேர்ந்த அபிஅப்பா உற்சாகத்துடன் வந்து சேர்ந்தார். சந்திப்பு முடியும் தருவாயின்போது ஓகையாரும், மரபூர் சந்திரசேகரும் வந்து சந்திப்பில் தங்களின் வருகையைப் பதிவு செய்து கொண்டனர்.
* லக்கிலுக் தமிழ்மணம் டீசர்ட்டை அணிந்து வந்து இருந்தார்.
* நித்யகுமாரன் என்றபதிவர், வலைப்பதிவர் பட்டறைக்காக தயாரித்து யூடியுப் தளத்தில் வலை ஏற்றப்பட்டிருந்த வீடியோவைப்பார்த்து திரட்டிகளில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.
* பதிவர் வவ்வாலும் வந்திருப்பதாக வந்திருந்த தகவலை ஒட்டி, இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ரகசியமாக அலசப்பட்டது.
* சுண்டல் விற்க வந்த சிறுவர்கள் அனைவரையும் அரைமணி நேரம் கழித்து வா என அனுப்ப, எல்லோரும் ஒரு சேர அரை மணி நேரத்திற்குப்பின் வந்துசேர சுண்டலை பதிவர்களிடம் விற்பதற்கு சிறுவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுக்களை உண்மைத்தமிழன் சமாளித்து அனைவருக்கும் சுண்டல் தர ஏற்பாடு செய்தார்.
* அபிஅப்பா எல்லோரும் எதிர்பார்த்திருந்த 5 லிட்டர் கேனை கண்ணில் காட்டவே இல்லை.
*சுகுணாதிவாகர் சற்று இளைத்திருந்தார். வரவனையான் பிரெஞ்சு தாடி வைத்து,வழமைப்போலவே மினுமினுப்பாக இருந்தார்.
* தமிழ்99 கீபோர்டு ஸ்டிக்கர்களும் NHM எழுதிக்கான குறுந்தகடுகளும் விநியோகிக்கப்பட்டன. நாகராஜன் எழுதியில் புதுப்பதிவர்களுக்கான சந்தேகங்களை விளக்கினார்.
*வெங்கட்ரமணன் பீச் ஸ்டேஷன் வரைப் போய், திரும்ப அதே டிரெயினில் வியர்த்து விருவிருக்க திரும்பிய அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டார்.
* மெக்காலே கல்விமுறை சிறப்பான ஒன்று என்றும், கல்வி ஆடம்பரம் என்ற நிலையை மாற்றி அத்தியாவசியம் என ஆக்கியவர் மெக்காலே என்றத்தகவலை அதியமான் பகிர்ந்து கொண்டார்.
* பின்நவீனத்துவப்பதிவர்கள் அனைவரும் அரைமணிக்கொருதரம் காணாமல் போனார்கள்.
*டோண்டு, பாலபாரதியின் தொழில்நுட்பவியல் பதிவை வெகுவாகப்பாராட்டினார்.
*முரளிக்கண்ணன் சகபதிவர்களின் பதிவுகளை நினைவுகூர்ந்து பதிவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
*நந்தா வலைச்சரப்பதிவிற்காக விடியற்காலை வரை விழித்து தட்டச்சு செய்வதாகக்கூறினார்.
*பதிவர் ஜேகேவிற்கு அலுவலகத்தில் ஆணி அதிகமானதால் தேன்கிண்ணம் தவிர வேறுபதிவுகள் எழுத நேரமில்லை என வருத்தப்பட்டார்.
*ஊற்று கலாபன் தனித்தளம் வாங்கியும்,தனது நிறுவனத்தில் பணி உயர்வு கிடைத்தமையால் நிறையப் பதிவுகள் எழுத இயலவில்லை எனத் தெரிவித்தார்.
*கடலையூர் செல்வம், அதிஷா ஆகியோர் முதன்முறை சந்திப்புக்கு வந்திருந்தாலும், எல்லோரிடமும் எளிதாக நட்புப் பாராட்டினர்.
*போன பதிவர் சந்திப்பைப்போலவே, இந்த முறையும் ஆழியுரானின் பைக் ரிப்பேர் ஆகி பாதி வழியில் நின்று, சரிசெய்துவிட்டு தாமதமாக வந்தார்.
*குப்புசாமி செல்லமுத்து எல்லோரையும் வளைத்துக்கட்டி புகைப்படங்களை எடுத்து தள்ளினார்.
பதிவர்கள் தனித்தனிக்குழுக்களாகப் பிரிந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு ,மா.சிவக்குமாருடன் வீடு வரும் வழியில் "டட்ச்" முறையில் கோடம்பாக்கத்தில் எது கேட்டாலும் இல்லை என்று சொன்ன உணவகத்தில் சாப்பிட்டு , சகப்பதிவர்களை நட்புரீதியில் சந்தித்த மகிழ்ச்சியுடன் நல்லதொரு மாலைப்பொழுது நிறைவானது.
45 பின்னூட்டங்கள்/Comments:
சுடச்சுட ரிப்போர்ட்டா..சூப்பர் :)
கடைசி வரைக்கும் அந்த 5 லிட்டர் கேன் வரலையா...அவ்வ்வ் :))
புகைப்படம் எதும் எடுக்கலையா ?
@கப்பிபய
ஆமாம் கப்பி. அந்த ஐந்து லிட்டர் கேன் விவாகரம் என்னவென்று கடைசிவரை யாருமே சொல்ல வில்லை.
@கோவி.சார்
குப்புசாமி செல்லமுத்து படங்கள் எடுத்திருந்தார்.விரைவில் வலையில் ஏற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
சூடான இடுகைக்கு நன்றி வினையூக்கி!
சூப்பர் ரிப்போர்ட்...!!!
புகைப்படங்களை வேறு யாராவது போடுகிறார்களான்னு பாக்கணும்...
நல்ல தகவல்கள்.
நன்றி அண்ணா.
பதிவினை படித்தேன் ரசித்தேன்!
ஒரு வரி மட்டும் விட்டுப்போயிருந்தது :)
தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்! - என்ற வரி
(இந்த பதிவுல இருக்கிற மேட்டரை வைச்சே நிறைய பேர் மீட்டிங்க் பத்தி சொல்லுவாங்கல்ல :)))
வினையூக்கி...மிக அருமையாய் தொகுத்துத் தந்துள்ளீர்கள்.மனதிற்கு நிறைவான சந்திப்பு.விரைவில் பதிவிடுகிறேன்.நன்றி
சுடச்சுட இடுகைக்கு நன்றி :)
//கப்பி பய said...
சுடச்சுட ரிப்போர்ட்டா..சூப்பர் :)
கடைசி வரைக்கும் அந்த 5 லிட்டர் கேன் வரலையா...அவ்வ்வ் :))
///
:)))))))))))
இனிய நண்பருக்கு வணக்கம்...
வீட்டுக்கு வந்து சிஸ்டம் திறந்து பார்த்தால் அதற்குள் பதிவர் சந்திப்பு குறித்து பதிவிட்டிருக்கிறீர்கள்.
இதுதான் சூடான இடுகை.
இந்த சந்திப்பு மனதிற்கு மிக இதமாகவும், புதிய நண்பர்களுடன் அறிமுகப்படுத்திக்கொண்டதில் உபயோகமாகவும் அமைந்தது.
சந்திப்பு நாயகர் குசும்பனுக்கும், சந்திப்பு ஏற்பாடு செய்த பாலபாரதி அவர்களுக்கும் மிக்க நன்றி...
பேரன்புடன் நித்யகுமாரன்.
:))
//கப்பி பய said...
சுடச்சுட ரிப்போர்ட்டா..சூப்பர் :)
கடைசி வரைக்கும் அந்த 5 லிட்டர் கேன் வரலையா...அவ்வ்வ் :))//
ரிப்பீட்டே :))
உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேச முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், எல்லாரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
அதுக்குள்ள பதிவு போட்டு கலக்கறீங்க... :)
படத்தைப் போடுங்கப்பா...
கடைசி வரைக்கும் 'அஞ்சு லிட்டர்' வராததைக் கேள்விப்பட்டேன் .. என் ஆழ்ந்த அனுதாபங்கள் :)
மாப்ளே... அதுக்குள்ள போட்டோ... அப்டேட் பண்ணியாச்சா? அசத்து?
புகைப்படங்கள் வலையேற்றப்பட்டுள்ளன.
:-)
அநியாயத்துக்கு சூடான பதிவு
அடப்பாவி.. நான் வீடு வந்து சேர்ந்ததே பத்து மணிக்குத்தான். அதுக்குள்ள பதிவா..? சூப்பர் பாஸ்ட்தான் போ..
கலக்கல் கவரேஜ். பின்னவீனதுவத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான கட்டுடைத்தலை செய்யவே அவர்கள் அரைமணிக்கொருமுறை காணாமல் போனார்கள்
தல,
ரொம்ப பாஸ்டா தான் இருக்கீங்க.. கலக்கல் பதிவு....
வினையூக்கி மெரீனாவா?
ஏற்கனவே சென்னையை மறக்கமுடியாமல் உள்ளேன். படம் வேற போட்டுட்டீங்க.. ம்ம்ம்ம்..
//சரி 5 லிட்டர் கேன் எங்கே எனக்கேட்டதும் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லக்கிலுக்கும் 5 லிட்டர் கேனைப் பற்றி விசாரித்தபோதும் அதே போல் போன் கட் செய்யப்பட்டதாம்.//
இதுக்கு அபிஅப்பா எங்கிருந்தாலும் பதில் சொல்லியே ஆகணும்!
தன்னிலையில்லாத வெளக்கம் கொடுத்தே ஆவணும்! :-)
அபி அப்பா !!! ஒரு தரம் !! இரண்டு தரம் !!! மூனு தரம்
தம்பி!
நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வரவில்லை. ஏன்? என்பது புரிந்தது.
படங்களுடன் சுடு பதிவுக்கு நன்றி!
நல்ல தகவல்கள்.
நன்றி அண்ணா.
/
ஆயில்யன். said...
பதிவினை படித்தேன் ரசித்தேன்!
ஒரு வரி மட்டும் விட்டுப்போயிருந்தது :)
தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்! - என்ற வரி
/
ஆயிலு நாங்கதான் ஒரு குருப் கூர்க் போயிட்டோம் மிஸ்ஸிங் இல்ல அப்புறம் எப்பிடி அனைவரும்னு வரும் !?!?
அருமையான தொகுப்பு...:)
....நல்லா இருங்க... :(
//மங்களூர் சிவா said...
/
ஆயில்யன். said...
பதிவினை படித்தேன் ரசித்தேன்!
ஒரு வரி மட்டும் விட்டுப்போயிருந்தது :)
தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்! - என்ற வரி
/
ஆயிலு நாங்கதான் ஒரு குருப் கூர்க் போயிட்டோம் மிஸ்ஸிங் இல்ல அப்புறம் எப்பிடி அனைவரும்னு வரும் !?!?
///
யோவ் சிவா!
சொல்லிட்டு போனாத்தான் தெரியும் சொல்லாம மறைஞ்சுப்புட்டு
நாங்களும் போனேம்
நாங்களும் போனேம்னா என்னய்யா அர்த்தம் :))))))????
அபி அப்பாவை போட்டோவில் காணேமே.....? :(
அட நம்ம மாப்ள ரெண்டு சுத்து கூடிப்போய்த்தான் இருக்காரு :))
/
ஆயில்யன். said...
//மங்களூர் சிவா said...
/
ஆயில்யன். said...
பதிவினை படித்தேன் ரசித்தேன்!
ஒரு வரி மட்டும் விட்டுப்போயிருந்தது :)
தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்! - என்ற வரி
/
ஆயிலு நாங்கதான் ஒரு குருப் கூர்க் போயிட்டோம் மிஸ்ஸிங் இல்ல அப்புறம் எப்பிடி அனைவரும்னு வரும் !?!?
///
யோவ் சிவா!
சொல்லிட்டு போனாத்தான் தெரியும் சொல்லாம மறைஞ்சுப்புட்டு
நாங்களும் போனேம்
நாங்களும் போனேம்னா என்னய்யா அர்த்தம் :))))))????
/
அடப்பாவிகளா,
இந்த ப்ரொக்ராம் ஒரு மாசமா போட்டு எத்தனை இடம் மாத்தி எத்தனை மெயில் அனுப்பி கடைசில கூர்க்னு முடிவு செஞ்சு
ஹும்
அமீரக எல்லா பதிவர் சார்பாகவும் அபி அப்பாவுக்கு மெயில் அனுப்பினோமே !!
வினையூக்கி,
//* பதிவர் வவ்வாலும் வந்திருப்பதாக வந்திருந்த தகவலை ஒட்டி, இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ரகசியமாக அலசப்பட்டது.//
இப்படிப்போட சொல்லி உண்மைத்தமிழர் சொன்னாரா? :-))
இதெல்லாம் ஓவரா இல்லையா?
//சரி 5 லிட்டர் கேன் எங்கே எனக்கேட்டதும் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.//
அந்த 5 லிட்டர் கேன் வரவே வராதுனு ஒரு நைற் ஆந்தை எனக்கு சொன்னார் அதான் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கலை :-))
@வவ்வால்,
அப்பாடா!! இங்கயாவது வந்தீங்களே!! மகிழ்ச்சி. :)) உங்க கிட்ட சொன்ன நைற் ஆந்தை எங்ககிட்ட சொல்லி இருந்தால் காத்துக்கிடக்காமலாவது இருந்து இருப்போம்.
உண்மைத்தமிழர் பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்பொழுதே ஒருவரை போய் சந்தித்துவிட்டு வந்தார். அது நீங்களா?!!!
:))))
//அந்த 5 லிட்டர் கேன் வரவே வராதுனு ஒரு நைற் ஆந்தை எனக்கு சொன்னார் அதான் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கலை :-))//
அதானே, அப்புறம் அங்கே என்ன வேலை? :)
வினையூக்கி,
சந்திப்புக்கு வராதவர்களுக்கும் வந்த உணர்வை தந்துவிட்டீர்கள்.
//உண்மைத்தமிழர் பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்பொழுதே ஒருவரை போய் சந்தித்துவிட்டு வந்தார். அது நீங்களா?!!!
:))))//
ஆகா உண்மைத்தமிழர் ஒவ்வொரு அசைவுக்கும் இப்படி ஒரு அர்த்தம் கண்டுப்பிடிக்கிறீர்களா, பாவம் அவர் யாரை சந்தித்தாரோ,,, நான் நேற்று ஊரில் இல்லை, இருந்திருந்தால் ஒரு அனானியாக வந்து ஒட்டுக்கேட்டிருப்பேன் :-))
//அப்பாடா!! இங்கயாவது வந்தீங்களே!! மகிழ்ச்சி. :)) உங்க கிட்ட சொன்ன நைற் ஆந்தை //
உங்கள் பதிவைப்படிப்பது ஒரு மகிழ்ச்சி அதை இழப்பேனா :-))
நைற் ஆந்தை எல்லாம் பட்சி பாஷை பேசும், எனக்கு மட்டும் தான் புரியும் :-))
//மா.சிவக்குமாரும் உண்மைத்தமிழனும் வலையுலக வசிஷ்ட மாமுனி யார் என விவாதித்துக்கொண்டிருந்த போது///
அந்த மாமுனி மா.சி தானே :-))
விருப்ப ஓய்வுப்பெற்ற பின்னும் சந்திப்புக்கு வரும் மாசியின் கடமை உணர்ச்சியை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))
-----------------------
தஞ்சாவூரார்,
//அதானே, அப்புறம் அங்கே என்ன வேலை? :)//
சரியாக புரிந்து வைத்துளீர்கள் "'பா.கா.பா" அறியுமாவா :-))
வினையூக்கி அண்ணே,
பதிவு நறுக்த்தெரிந்தாற் போல் இருக்கு..
படங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் போட்டு இருக்கலாம்.
முகங்களா இருக்கு..யாருன்னும் தெரியல்ல.
பதிவுலக சரித்திர நிகழ்வு இது :))))
(மங்களூரானுக்கு நீங்க அண்ணா என்றால், எனக்கும் அண்ணா தான்.)
@வவ்வால்
மிக்க நன்றி. பதிவுலகை விட்டு தற்காலிகமாக விலகியபோதும் நிதியாண்டின் இறுதியில் இருந்தபோதும், பதிவர் சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித் தந்த மா.சிவக்குமார் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.
@மங்களூர் சிவா,
அங்கிள் எனக்கூப்பிடும் வயதில் இருந்து கொண்டு நான் உங்களுக்கு அண்ணனா!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
@டிபிசிடி சார்,
நன்றி சார். :))) மேலே இருக்கும் மங்களூர் சிவாவுக்கான பதிலையும் வாசிக்கவும்.
@ஏபிசீடி
/
(மங்களூரானுக்கு நீங்க அண்ணா என்றால், எனக்கும் அண்ணா தான்.)
/
ஏன் இந்த கொலவெறி???
/
வினையூக்கி said...
@மங்களூர் சிவா,
அங்கிள் எனக்கூப்பிடும் வயதில் இருந்து கொண்டு நான் உங்களுக்கு அண்ணனா!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
/
toooooooooo bad செல்வா கண்ணாடில மூஞ்சிய பாருங்க !!!
:)
மெக்காலேதான் உயர்கல்வியில் சமஸ்கிரதமா, அரபி மொழியா அல்லது ஆங்கிலமா என்ற சர்ச்சை வந்த போது உயர்கல்வி ஆங்கிலத்தில்தான் என்பதற்கு வித்திட்டு மெட்ராஸ், பாம்பே மற்றும் பெங்கால் பல்கலைகழகங்கள் உருவாக வித்திட்டார்.
ஜாதிக்கொரு நீதி என்றிருந்த (மனு) நிலைமையை முதன் முதலாக சி.பி.சி கிர்மினல் சட்டம் இயற்றி மாற்றினார். ஆனால் பாவம் மெக்காலே அவரை இடதுசாரிகளும், வலது இந்துத்வ வெறியர்களும், மற்றும் பலரும் ஏசுகின்றனர்.
பார்க்க :
http://tamilopinion.blogspot.com/2007/05/macaulays-minute-on-education.html
l.comஇதில் பதிவர் பைத்தியக்காரன் யார்?
///வினையூக்கி,
//* பதிவர் வவ்வாலும் வந்திருப்பதாக வந்திருந்த தகவலை ஒட்டி, இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ரகசியமாக அலசப்பட்டது.//
இப்படிப் போட சொல்லி உண்மைத்தமிழர் சொன்னாரா? :-)) இதெல்லாம் ஓவரா இல்லையா?///
வவ்வால்ஜி.. வருவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். வராதது எனக்கு வருத்தமளிக்கிறது.. இந்தத் தம்பியிடம் நான் இப்படி எதையும் சொல்லவில்லை. ஆகவே உங்களுடைய ஓவரா இல்லையா என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லை..
///வினையூக்கி,
சந்திப்புக்கு வராதவர்களுக்கும் வந்த உணர்வை தந்துவிட்டீர்கள்.
//உண்மைத்தமிழர் பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்பொழுதே ஒருவரை போய் சந்தித்துவிட்டு வந்தார். அது நீங்களா?!!! :))))//
ஆகா உண்மைத்தமிழர் ஒவ்வொரு அசைவுக்கும் இப்படி ஒரு அர்த்தம் கண்டுப்பிடிக்கிறீர்களா? பாவம் அவர் யாரை சந்தித்தாரோ,,, நான் நேற்று ஊரில் இல்லை, இருந்திருந்தால் ஒரு அனானியாக வந்து ஒட்டுக்கேட்டிருப்பேன் :-))///
வவ்ஸ்.. ஊரில் இல்லை என்றாலும் எங்களில் பலரது தொலைபேசி எண்கள் அவரவர் தளங்களில் கொடுக்கப்பட்டுள்ளனவே.. தொடர்பு கொண்டு பேசலாமே..?
உண்மைத்தமிழர்,
//வராதது எனக்கு வருத்தமளிக்கிறது.. இந்தத் தம்பியிடம் நான் இப்படி எதையும் சொல்லவில்லை. ஆகவே உங்களுடைய ஓவரா இல்லையா என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லை..//
நான் என்னமோ வரேன்னு சொல்லிட்டு வராம போய்ட்டேன்னு மக்கள் நினைச்சுக்கப்போறாங்க :-))நான் வருவதாக இருந்தால் கண்டிப்பாக உங்கக்கிட்டே சொல்லிட்டு தான் வருவேன்.
என்ன பண்ண சொல்றிங்க , என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு எல்லாம் எதையும் திட்டம் போட்டு செய்ய முடிவதில்லை. எப்படியோ ஒரு மார்க்கமா போய்க்கிட்டு இருக்கு.என்றாவது தற்செயலாக நிகழ்ந்தால் தான் உண்டு.
//ஊரில் இல்லை என்றாலும் எங்களில் பலரது தொலைபேசி எண்கள் அவரவர் தளங்களில் கொடுக்கப்பட்டுள்ளனவே..//
ஹி..ஹி அதுலாம் தொலைப்பேசி எண்களா, இது நாள் வரைக்கும் அதுலாம் பிலாக்கர் புரோபைல் எண் என்று நினைத்திருந்தேன் :-))
உங்க ""பகிஷ்கரிப்பு"எச்சரிக்கையை உங்க பதிவில் பார்த்தேன், நன்றி! :-))
(அது எப்படி யார் பேசினதும் நியாபகம் இல்லைனு சொல்லிக்கிட்டே 10 பக்கத்துக்கு பதிவு போடுறிங்க :-)))
அடடா - நான் அன்னிக்கு அங்கே தானே சுத்திக்கிட்டு இருந்தேன் - மிஸ் பண்ணிட்டேனே - அடடா
Post a Comment