Thursday, March 20, 2008

வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை

குறுந்தகவலுக்கான சத்தம் அடிக்க, கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ஜெனியிடம் இருந்து ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“எனக்கு வேறு ஒரு பெயர் வைக்க உனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த பெயரை எனக்கு சூட்டுவாய்...” என அச்செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.. பதில் கட்டாயம் எனவும்
குறிப்பிடப்பட்டிருந்ததால் கல்லூரிக்காலங்களில் நான் காதலித்த ரம்யா வின் பெயரைப் பதிலாக அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் சின்ன குறுகுறுப்பில் அதே குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு என்ன பெயர் கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த 30வது வினாடியில் . “பெர்ணாண்டஸ்” என்று பதில் வந்தது.

விளையாட்டுத்தனமாய் அதுவரை இருந்த மனது, சற்று உணர்ச்சிவசப்பட்டது. உடனே ஜெனியை அழைத்தேன்.

“ஹலோ ஜெனி தாங்க் யூ ஸோ மச்”

“யெஸ் கார்த்தி, தட்ஸ் ட்ரூ, என் அப்பா பெயர் தான் உனக்குக் கொடுப்பேன்,நட்பு மட்டுமில்ல, என் அப்பா என்னிடம் காட்டின வாஞ்சையான பாசமும் வேண்டும்டா, பிளீஸ் தருவியா”

ரம்யாவை விட ஜெனியை அதிகமாக நேசிக்கப்போகிறேன் என்ற உறுதியுடன் “ஸ்யூர் ஜெனி” என்றேன்.

------ *** -------

16 பின்னூட்டங்கள்/Comments:

said...

ரம்யா, ஜெனி, கார்த்தி வரிசையில் அடுத்த ஒரு கதை.... நல்லா தான் இருக்கிறது.. :)

said...

நல்ல வேளை! பேய்க்கதை இல்லை...
பயமில்லாமல் படிக்க முடிந்தது.

said...

கதை அருமை, ஒரு பெரிய உண்மையை உள்ளடக்கிய கதை. அதாவது தாயைப்போல மனைவி வேண்டுமென்று ஆணும், தந்தை குணம் கொண்ட கணவன் வேண்டுமென பெண்ணும் நினைப்பது.

ஒரே நெருடல், ஆரம்பத்தில் சுத்தத் தமிழில் ஆரம்பித்துவிட்டு தொடராமல் விட்டது ஏன்?

said...

@தமிழ்பிரியன்
மிக்க நன்றி

@சிவஞானம்ஜி
:)) உங்களுக்காகாவே ஒரு பேய் கதை தயார் செய்கிறேன்.

@இளா
மிக்க மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த உண்மையை சொல்ல வருவதுதான் கதையின் நோக்கம்.
கடைசியில் சில வரிகள் உரையாடல்களாக இருப்பதால், இயல்பு மொழியிலேயே விட்டுவிட்டேன்.

said...

blogin super star neenga.. really nice...

said...

\\விளையாட்டுத்தனமாய் அதுவரை இருந்த மனது, சற்று உணர்ச்சிவசப்பட்டது. உடனே ஜெனியை அழைத்தேன்.\\

உணர்ச்சிவசப்பட்டது எதனால்.......பெர்னாண்டஸ் ஜெனியின் அப்பா பெயர் என்று தெரிந்தா? இல்லை......கார்திக்கு ரம்யா மாதிரி ஜெனிக்கு ஒரு பெர்னாண்டஸ் இருந்திருப்பானே என்ற ஐயமா??

அழகான கதை.......ஆழமான கருவுடன்!


\\யெஸ் கார்த்தி, தட்ஸ் ட்ரூ, என் அப்பா பெயர் தான் உனக்குக் கொடுப்பேன்,நட்பு மட்டுமில்ல, என் அப்பா என்னிடம் காட்டின வாஞ்சையான பாசமும் வேண்டும்டா, பிளீஸ் தருவியா”\\

மிக மிக ரசித்தேன் ஜெனியின் இந்த பதிலான உரையாடலை!!

பாராட்டுக்கள் வினையூக்கி!

said...

சூப்பர்... ட்விஸ்ட்...

:)) ரசித்தேன்.. வாழ்த்துக்கள்

said...

@tharaniya thurai
thank you so much.
@திவ்யா
கார்த்திக்கு, ஜெனியின் அப்பா பெயர் “பெர்னாண்டஸ்” என்பது முன்னமே தெரியும்.

நன்றி நன்றி பாராட்டுக்களுக்கு
@சென்ஷி
மிக்க மிக்க நன்றி

said...

அவள் பழைய காதலன் பெயர் வருமோ, என்றால்...தமிழ்ப்பண்பாட்டை
நாசூக்காகத் தொட்டு விட்டீர்கள்.
(கதையில் தான்..)

said...

நல்ல கதை செல்வா!!!

எல்லா பெண்களுக்கும் தன் தந்தை போல் ஒரு கணவன் வர வேண்டும் என்ற ஆசை
இருக்கும்... இதை அழகா உங்க ஜெனியின் மூலம் சொல்லிடீங்க!!!!

வாழ்த்துகள்!!!!!

said...

குறுந்தகவல்...குறுஞ்செய்தி இரண்டும் ஒன்றுதானே? SMS? Message rite? புது தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டேன் நன்றி
அன்புடன் அருணா

said...

நன்றி யோகன்பாரிஸ் மற்றும் எழில்பாரதி.

@அருணா
குறுந்தகவல்,குறுஞ்செய்தி இரண்டுமே எஸ்.எம்.எஸ் தான். மிக்க நன்றி

said...

ஆழமான ஒரு செய்தியை ஒரு சிறிய கதைக்குள் அழகாக கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
வாழ்த்துகள் வினையூக்கி...!

said...
This comment has been removed by the author.
said...

மிக அருமை வினையூக்கி. தங்களின் அனைத்து 1 நிமிட கதைகளிலும், மிக அழத்தமாக மனதில் பதிந்ததும், பிடித்ததும் இதுவே.
வழக்கம் போல மாற்றி என் முடிவினை எழுதலாம் என்று தோண்றினாலும், ஏதோ ஒன்று வேண்டாம் என தடுத்துவிட்டது. இந்த 1 மினிட் கதையை மாற்றி எழுத / தொடர ஏனோ மனம் வரவில்லை.

வீ எம்

said...

நன்றி நாடோடி இலக்கியன்.
-----
வாங்க வீ.எம்
எப்போழுது குட்டிக்கதை எழுதினாலும் உங்க வரவு ஆவலோடு எதிர்பார்க்கப்படும். உங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சியை அளிக்கிறது