DEAR RAMYA - சிறுகதை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விசயங்கள் எதிர்பாராத சமயத்தில் நடந்தால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு முன் தொடர்பைத் துண்டித்துக்கொண்ட பின்னர் திடிரென ஜெனி என்னை தொலைபேசியில் அழைத்தபோது எனக்கு அப்படித்தான் இருந்தது. நடுவில் இந்த 7 மாதங்கள் பேசவில்லை என்ற சுவடே இல்லாமல் , மிகவும் இயல்பாகப் பேசினாள். நானும் இயல்பாகவே பேசினாலும் ஏன் இத்தனை நாள் அவள் என்னிடம் பேசவில்லை என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது.
“ஜெனி, ஏன் இத்தனை நாள்? நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணேன்...புரபோஸ் பண்ணது தப்பா?”
“நான் தப்புன்னு சொல்லலியே!!, நீ புரபோஸ் பண்ண அடுத்த நாள் கூட நான் தானே உன்னைக் கால் பண்ணேன்”
“ம்ம்ம்ம்”
“கார்த்தி, நல்லா யோசிச்சுப்பாரு, நீயும் நானும் போகப் பிளான் பண்ணி இருந்த மூவி டிக்கெட்ல நீ யார் கூட போன?”
“நீ வரலேன்னு சொன்னே, அதனால உன் பிரண்டு ரம்யா கூட போனேன், இதுல என்ன இருக்கு ?”
“எனக்கு அதுப் பிடிக்கல, ஸோ , உன்கிட்ட பேசவேண்டாம்னு இருந்தேன்.. நான் வரலேன்னு சொன்ன பிறகு என் இடத்தில இன்னொரு பொண்ணை நீ கூட்டிட்டுப்போனது உனக்கு சாதாரணமா இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை” என்று ஜெனி சொன்னபோது, இத்தனை தூரம் ”பொசசிவ்” ஆ இருப்பாள் என்று நினைக்கையில் ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், இந்த பொசசிவ்னெஸ் என் மேலே இருந்திருக்கிறது எனும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளிடம் அந்த நிகழ்வுக்காக மன்னிப்புக்கேட்டுக்கொண்ட பிறகுகுடும்பம், வேலை, கிரிக்கெட் என பேச்சு நெடுநேரம் தொடர்ந்தது.
பேச்சு முடிந்தவுடன் கடந்த சில மாதங்களில் எனது தோழியாகவும் ஆகிப்போன ஜெனியின் தோழி ரம்யாவிற்கு “ஜெனியுடன் நான் பேசினேன்” என்று ஒரு வரியில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
ஜெனி முன்பு போல ரம்யாவிடம் இப்பொழுது நெருக்கமாக பேசுவது இல்லை என்றாலும், அவ்வப்போது மின்னஞ்சல் பரிமாற்றம் இருக்கு என ரம்யா சொல்லக் கேட்டு இருக்கேன். என்னைப்போல ரம்யாவும் நான் ஜெனியிடம் காதல் சொன்னதால் தான் ஜெனி என்னுடன் ஆன தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
சில நினைவுகளை அசைபோட்டுவிட்டு, ஜெனிக்கு , என்னுடைய அவளுக்கான நினைவுகள், இன்னமும் உயிர்த்து இருக்கும் காதல், பிரிவின் வலி, பாதிப்புகள் என ஜெனி நான் சம்பந்தபட்ட உணர்வுப்பூர்வமான விசயங்களை பெரிய மின்னஞ்சலாக ஆங்கிலத்தில் தயார் செய்து அனுப்பிவைத்தேன். ஜெனியிடம் இருந்து பதிலுக்காக காத்திருந்து இரண்டு , மூன்று நாட்கள் ஓடி ஒரு வாரமும் ஆனது. ஜெனியின் எண்ணுக்கு அழைத்துப்பார்த்தேன். எடுக்கவில்லை தொடர்ந்து முயற்சி செய்தேன். அழைப்பு எடுக்கப்படவில்லை.
"Why no reply for my mail?" என்ற கேள்வியை மட்டும் குறுந்தகவலாக அனுப்பிய அடுத்த நொடி, "Read the mail that you had sent” என பதில் வந்தது.
அவளுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலை மூன்றாவது முறை வாசித்தபோது, காரணம் புலப்பட்டது. ஜெனிக்கான மின்னஞ்சலில் “Dear Ramya" என முதல் வரி இருந்தது.
-------முற்றும்---
18 பின்னூட்டங்கள்/Comments:
அட பாவமே.. விதி யார விட்டது... பாவம் வினையூக்கி.. சாரி சாரி, கார்த்தி
விதி..... வலியது. :)
மாத்து கிடைச்சுதா........
பாவம்!
கார்த்திக் .;; அனுப்பும் கடிதத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமெனும் பழக்கமில்லாதவர் போலும்.
hahahahahaha :-))))))))))))))
அருமையான கதை செல்வா!!!
இல்ல மக்களுக்கு நல்ல பாடம்!!!
நீங்களும் திவ்யா மாதிரி கதை மூலம் பசங்களுக்கு நல்லா டிப்ஸ்
கொடுகப்பதற்கு வாழ்த்துகள்!!!!
இனியாவது கார்த்திய தெளிவா படிச்சுட்டு மடல் அனுப்ப சொல்லுங்க!!!!!
திடீர் திருப்பம்..நச்சென்று இருந்தது!!
அன்புடன் அருணா
@ வீ.எம்
ஆமாம் வீ.எம் கார்த்தி ரொம்ப பாவம்..
@தமிழ் பிரியன்
விதி வலியது :)))
@சிவஞானம்ஜி
அடுத்து பேசினால் தான் தெரியும் மாத்து கிடைச்சதா இல்லையான்னு
@யோகன்பாரிஸ்
கார்த்தி,இனிமேல் சரிபார்த்து தான் மின்னஞ்சல் சரிபார்த்து தான் அனுப்புவார்.:)))
@யாத்திரீகன்
நன்றி
@எழில்பாரதி
நன்றி, திவ்யா அளவுக்கு எல்லாம் நம்மால் வரமுடியாது எழில்பாரதி.
@அருணா
மிக்க நன்றி
அட... இப்ப என்ன கெட்டுப் போச்சு.
மறுபடியும்... ஒரு தன்னிலை விளக்கம்.
அம்புட்டுத்தான்.
கடைசியில் வரும்...
O'Henry Twist அருமை.
வாழ்த்துக்கள்.
சும்மா 'நச்'சுன்னு இருக்கு வினையூக்கி!
ரொம்ப பிடித்திருந்தது கதை!
பாராட்டுக்கள் வினையூக்கி!!
finishing sooper selva!!!
முடிவு 'நச்' செல்வா!
:)))))))))))))))))))))))))))))))))
நான் வேற முடிவு வருமென்று நினைத்தேன்...
ஆனா..இது கலக்கல்....
its all fate,wat to do:)
nice cute story!
natpodu
Nivisha.
summa nachunnu irukku!!
எதிர்பாராத திருப்பம்! ஆனா எனக்கு சில சந்தேகம்
1.முக்கியமான மெயில் அனுப்பும் போது ஒரு முறை திரும்ப படிக்க மாட்டோமா?
2.கார்த்தி அப்போ யாரை தான் உண்மையாக காதலிக்கிறார்?
கொஞ்சம் எனக்கு புரியும் படி சொல்லுங்களேன்!
superb , eppdi thaan irukanum ,
i love jenni
நல்லா இருக்கு வினையூக்கி...
பாவம் கார்த்தி :-)
Post a Comment