Wednesday, February 20, 2008

அஞ்சாதே படத்தில் இருந்து கத்தாழை கண்ணாலே , கண்ணதாசன் காரைக்குடி பாடல்களின் வீடியோ

சில பாடல்களை முதல் முறைக் கேட்கும்பொழுதே அப்படியே மனதில் உட்கார்ந்து கொண்டு , நம்மை முணுமுணுக்க வைத்துவிடும். சித்திரம் பேசுதடி, “வாழைமீனு” பாடலுக்குப்பின் மீண்டும் இயக்குனர் மிஷ்கின் , இசையமைப்பாளர் சுந்தர் . சி. பாபு கூட்டணியில் இரண்டு பாடல்கள் அந்த வகையில் அமைந்துள்ளன.

கண்ணதாசன் காரைக்குடி பாடல் கிழே:கண்ணதாசன் காரைக்குடிப் பாடலைப் பாடியவர் இயக்குனர் மிஷ்கினே தான்.

பாண்டியராஜன் மீசை இல்லாமல் , வித்தியாசமாக காட்சியளிக்கும் கத்தாழை கண்ணாலே பாடல் கீழேஇந்தப்பாடலைப் பாடியவர் நவீன்.இந்தப்பாட்டில் கவர்ச்சி இல்லாமல் குத்தாட்டம் போட்டிருப்பவர் மும்பை இறக்குமதி “ஸ்னிக்தா”

பாடலை யுடியூப் வலைத்தளத்தில் ஏற்றி வைத்திருந்த அருண் துரைராஜ்007 அவர்களுக்கு நன்றி

அஞ்சாதே திரைப்படத்தைப் பற்றிய பார்வைகள்

“நந்தா வின் பார்வை”

உண்மைத்தமிழனின் நீண்ட நெடிய விமர்சனம்

கடலையூர் செல்வத்தின் விமர்சனம்

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

கத்தாழை கண்ணாலே பாட்டுக்கு
பெண்வேடத்தில்
பாண்டியராஜன் ஆட்டம் ப்ரமாதம்

said...

பகிர்விற்கு மிக்க நன்றி...

எளிமையான நடனம், இசை...

கண்ணதாசன் பாடல் முதல் முறை கேட்கும் போதே நன்றாக இருக்கின்றது

said...

சன் மியூசிக்கில் பார்த்த முதல் முறையே பிடித்துப் போனது "கத்தாழை கண்ணால" பாட்டு. இணையத்தில் எங்கேயாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். நான் தேடிக் கொண்டிருந்த இப்பாடலைத் தங்கள் பதிவில் இட்டதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற யூடியூப் வீடியோக்களைப் போல் அல்லாமல் இவ்விரண்டு வீடியோக்களும் நல்லத் தெளிவோடு உள்ளது.

நன்றி.

said...

@சிவஞானம்ஜி,
தெரியலியே அந்தப்பாட்டில் நடனமாடும் பெண் யாரென்று.
@பேரரசன்
நன்றி பேரரசன். ஆமாம் இந்த இருப்பாடல்களுமே முதன் முறைக் கேட்கும்பொழுதே ரசிக்க வைத்துவிட்டன.
@கைப்புள்ள
நானும் யுடியூப் ல தேடிட்டு இருந்தேன். நேற்றிரவு தான் கண்டெடுத்தேன். கில்லி, ல ஒரு பாட்டோட வீடியோவுக்கு லிங்க் இருந்துச்சு. அதை அப்படியே பிடித்து இன்னொரு பாட்டையும் எடுத்தாச்சு.
பாடலின் தெளிவிற்கு காரணம் அதிகாரப்பூர்வமாகவே பாடலை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று என்னுகிறேன்.

said...

கத்தாழை கண்ணாலே பாட்டுக்கு அருமையான ஆட்டம் ஆடி இருப்பவர் ஸ்னிக்தா

said...

தம்பி.. வாளமீன் அளவுக்கு இந்தக் டகத்தாழை கண்ணாலேட ஹிட் ஆகவில்லையென்றாலும் ஆடிய நடிகையின் அனுக்கிரகமான அசைவுகளால் பாடல் காட்சி பேசப்படும். பட்டிருக்கும்.

ஆனால் படத்தில் பார்க்கும்போது ஏற்கெனவே உரலுக்குள்ள வைச்சு கும்முன மாதிரி நாங்கள்லாம் உக்காந்திருந்தோம்.. எங்களுக்கு இந்த பாட்டு முடிஞ்சவுடனே என்ன நடக்கப் போகுதேன்னு பயத்துல இருந்தோம். அதுனால இந்தப் பாட்டோட 'மகத்துவம்' சரியாத் தெரியல..

இப்பத் தனியா டிவில பார்க்கும்போதுதான் புரியுது..

'கண்ணதாசன் காரைக்குடி' பாட்டுலேயும் ஸ்டெப்ஸ் மிக வித்தியாசமாக அமைத்துள்ளார் மிஷ்கின்.

இந்தப் பாடல் காட்சிகளின் தொடர் ஓட்டமே.. படத்திற்கு இலவச விளம்பரம் என்று நினைக்கிறேன்.

தம்பி வினையூக்கி கனெக்ஷன் கொடுக்கிறேன்னு சொல்லிப்புட்டு அந்த இடத்துலகூட ஒரு குத்து வைச்சிருக்க பாரு.. 'நீண்ட நெடிய விமர்சனம்'னு..

ம்.. என்ன பண்றது.. நன்றின்னு சொல்லிக்கிறேன்..

said...

உண்மைத்தமிழன் உள்குத்தொன்றும் இல்லை சார். நிஜமாகவே அது ஒரு நீண்ட ஆனாலும் நல்லதொரு திரைப்பார்வை.