ஹவா ஹவா , பழைய இந்தி பாப் பாடல்
கானா பிரபாவின் “றேடியஸ்பதி” வலைப்பூவில் சிறப்பு நேயரான துர்காவின் விருப்பங்களில் ஒன்றான மலேசியாவில் பிரபலமான பழைய ஆல்பப் பாடலான “அக்கா மக” பாடலைக்கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கடை 80களில் ஆரம்ப 90களில் சக்கைப்போடுபோட்ட ஹவாஹவா பாடல் சட்டென நினைவுக்கு வந்தது.
ஹசன் ஜஹாங்கீர் என்ற பாகிஸ்தானி பாடகரின் தொகுப்புப்பாடல்களின் ஒன்றான அதை யூடியுப் தளத்தில் தேடியபோது சிக்கியது.
அந்தக்காலக்கட்டங்களில் இந்தப்பாடல் ஒலிக்கப்படாத கல்லூரிவிழாக்களோ , சமுதாய விழாக்களோ இல்லை எனலாம். தேசாப், கயாமத் சே கயாமத் தக் ஆகியப்படப்பாடல்களுடன் இந்தப்பாடலும் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டது.(சேரன் பாண்டியன் படத்தில் செந்தில் இந்தப் பாடலை முணுமுணுத்தபடி ஒரு காட்சியில் வருவார்) இந்தப்பாடலின் மூலவடிவம் ஒரு பெர்சிய பாடல் என்று இணையத்தில் தேடியபோது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் கிடைத்தது. ஹசன் ஜஹாங்கிர் இந்த தொகுப்புக்குப்பின் பெரிய அளவில் பேசப்பட்ட பாடல்களைத் தராத நிலையில் மக்களின் நினைவில் இருந்து மறைந்தாலும், இந்தப்பாடல் மக்களின் நினைவில் என்றும் இருக்கும்.
5 பின்னூட்டங்கள்/Comments:
ஆமாங்க,
ஹவா, ஹவா பாட்டெல்லாம் மறக்க முடியாத பாடல் லிஸ்டில் எப்பவும் இருக்கும்.
கலக்கல் பாட்டு, செந்திலின் நகைச்சுவையும் ஞாபகத்துக்கு வருது.
மறக்க முடியாத பாட்டு. அதை நகலெடுத்து தமிழிலும் சில பாடல்கள் வந்தன.
வினையூக்கி,
இந்தப் பாட்டுக்கு நான் கல்லூரி விழாவில் மேஜையில் தாளம் போட என் நண்பன் பாடியது நினைவுக்கு வருகிறது :)
இப்பத்தான் முதல்முறையாக அதன் வீடியோ பார்க்கிறேன் ... :)
அக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே... இது அப்போ (90களில்) எல்லா சிங்கப்பூர், மலேசிய டிஸ்கோக்களில் பிரபலம் :)
Post a Comment