Sunday, February 17, 2008

டெண்டுல்கரின் கடைசி ஓவரும் 93' ஹீரோ கோப்பை அரை இறுதிப்போட்டியும்

நாள் : நவம்பர் 24, 1993 இடம் : கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்.

18/3 என்ற நிலையில் இருந்து அசாரும் பிரவின் ஆம்ரேவும் மீட்டெடுத்தும் தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பீல்டிங்கினாலும் பந்துவீச்சினாலும் இந்திய 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றிக்கு அருகேவே இருந்தது.
கடைசி ஓவர், 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை முதன்மை பந்துவீச்சாளர்களான கபில்தேவ், பிராபகர், ஸ்ரீநாத் மற்றும் அனில்கும்ப்ளே ,அஜய் ஜடேஜா , சலில் அங்கோலா என அனைவருக்கும் ஓவர் பாக்கி இருக்க , ஆட்டத்தில் அதுவரை பந்து வீச அழைக்கபடாத டெண்டுல்கரிடம் கடைசி ஓவர் தரப்படுகிறது

விக்கெட் கீப்பர் விஜய் யாதவின் பரிந்துரையின் பேரில் அசார் டெண்டுல்கருக்கு அந்த ஓவரைக் கொடுத்தார் என்று சொல்வார்கள். வெறும் மூன்று ரன்களை மட்டும் கொடுத்து இந்திய அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் சச்சின் டெண்டுல்கர்.



ஆட்டவிபரம் இங்கே

3 பின்னூட்டங்கள்/Comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு கடைசி ஓவர்.ரொம்ப நாள் கழித்து கபிலை பார்க்கமுடிந்தது.

ILA (a) இளா said...

சீட்டின் நினியில் உட்கார வெச்ச ஆட்டம். நினைவூட்டலுக்கு நன்றி!!!!

பிரேம்ஜி said...

மறக்க முடியாத ஆட்டம். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி