மேற்கிந்திய தீவுகள், வாழ்ந்து கெட்ட அணி
ஒரு காலத்தில பெரிய மதிப்போடு வாழ்ந்த குடும்பங்கள் கால ஓட்டத்தில் நொடித்துப் போய், வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற அடைமொழியுடன் வலம் வரும்பொழுது பார்க்க மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். கிரிக்கெட்டில் வாழ்ந்து கெட்ட அணியாக தற்பொழுது வலம் வருவது மேற்கிந்திய தீவுகள் அணி தான். ஆரம்ப 90கள் வரை ”வெஸ்ட் இன்டீஸ்” என்றாலே எதிர் அணியினருக்கு அடிவயிற்றைக் கலக்க வைத்த அணியாக திகழ்ந்த அணி , கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கடை 90களில் மொத்தமாக தன் பலத்தை இழந்தது. அவ்வப்போது எதிரணியினருக்கு ஷாக் (Mini world cup win, World Record Test chase) கொடுத்தாலும் , இன்னமும் காலிப்பெருங்காய டப்பாவாகத்தான் இருக்கிறது.
தன்னை நம்ப மறுத்தவன் தாழ்ந்து போவான் என, வலுவான நிலையில் இருந்து எப்படி ஒரு முக்கியமான ஆட்டத்தில் வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி தாரை வார்த்துக் கொடுக்கிறது என்பதை , 1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மொகலியில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரை இறுதிப் போட்டியை ஒரு மீள் பார்வை செய்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
15/4 என்ற அபாயகரமான நிலையில் இருந்து ஸ்டூவர்ட் லாவும், மைக்கெல் பேவனும் அணியை மீட்டு ஆடிய ஆட்டத்தினால் கவுரவமான 207 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது.
தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி ,165/2 , 53 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலகுவான நிலையில் இருந்து தோல்வியை நோக்கி அவ்வணி சரிகின்ற நிகழ்வுகளின் காணொளி கீழே
ஆட்ட விபரம் இங்கே
கிரிக்கெட்டிலும் வாழ்க்கையிலும் "No ifs and buts" என இருந்தாலும் ஒரு வேளை, ஷேன்வார்னே அவுட் கேட்டபோதெல்லாம் வெங்கட் ராகவன் கையைத் தூக்காமல் இருந்திருந்தால்,ரிச்சி ரிச்சர்ட்சன் தேவை இல்லாமல் அந்த ஒரு ரன் ஓடாமல் இருந்திருந்தால், வால்ஷ் வந்த உடனே ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் கிரிக்கெட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட்டு இருக்குமோ?!!!!
ம்ம்ம்.... கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தோல்விக்குப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி பெரிய அளவில் எழவில்லை. எழவேண்டும்..மீண்டு(ம்) வரவேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ஆர்வலர்களின் பேராவல்.
9 பின்னூட்டங்கள்/Comments:
அந்த கால வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடி வரும் போது,பார்க்கும் நமக்கே குலை நடுங்கும்.
யார் கண்டா? அங்கும் செலக்ஷன் கமிட்டி பிரச்சனையோ என்னவோ?
இளைஞர்கள் உள்ளே வந்து சீக்கிரமே புத்துயிர் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.
குமார்,
//அங்கும் செலக்ஷன் கமிட்டி பிரச்சனையோ என்னவோ?
இளைஞர்கள் உள்ளே வந்து சீக்கிரமே புத்துயிர் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.//
மேற்கிந்திய தீவுகளில் தற்போதெல்லாம் கிரிக்கெட் ஆட இளைஞர்கள் முன்வருவதில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்னரே செய்திகள் வந்ததே.
இப்போதெல்லாம் அமெரிக்காவிற்கு போய் பேஸ்கட் பால் ஆடி சம்பாதிக்க தான் மேற்கிந்திய தீவு இளைஞர்கள் விரும்புகிறார்களாம். சாதாரணமாக லீக் போட்டிகளில் ஆடினாலே ஆண்டுக்கு சில கோடிகள் நிச்சயம். அப்படி இருக்க கிரிக்கெட்டில் 11 பேருக்கு தானே வாய்ப்பு, அதை நம்பி வாழ்க்கையை வீனாக்க இப்போது அங்கே யாரும் தயாரில்லை.
மேலும் அங்குள்ள தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு நாடு, எனவே தேர்வு செய்வதிலும் பயங்கர சிக்கல்கள் வரும். இந்தியா போல அதிக தொலைக்காட்சி வருமானமும் அங்கே இல்லை.
மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் போர்டு கடனில் இருந்தது, அதை அடைக்கவே உலக கோப்பையை பயன்படுத்திக்கொண்டது, அதிலும் பெரிதாக சாதிக்கவில்லை.
கிரிக்கெட் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் போட்டு நாம தான்! இந்திய கிரிக்கெட் வாரியம் நினைச்சா , இந்திய அணியை சூப்பர் அணியாக மாற்ற முடியும். இப்போ ipl மூலம் மட்டுமே 6000 கோடி 4 வருஷத்திற்கு கிடைத்து இருக்குனா பார்த்துக்கோங்க!
அதனால் தான் இப்போலாம் கிரிக்கெட் போர்டின் மீது அரசியல்வாதிகள் கண் வைத்து கைப்பற்றுகிறார்கள்.
மைதானத்திற்கு உள்ளும் வெளியேயும் நாகரிகமாக நடந்து கொள்ளும் ஒரு அணி.
மீண்டும் புயல் போல் வரவேண்டும் என்பதே அனைவரின் ஆவலாகும்
//தன்னை நம்ப மறுத்தவன் தாழ்ந்து போவான் //
சரியாக சொன்னீங்க, ஆஸ்திரேலியாவின் பலமே நம்பிக்கைதான்!!!
//அங்கும் செலக்ஷன் கமிட்டி பிரச்சனையோ என்னவோ?
இளைஞர்கள் உள்ளே வந்து சீக்கிரமே புத்துயிர் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.
பேஸ்பால் விளையாடப் போய்ட்டாங்கன்னு சொன்னாங்க?!
இப்படித்தான் நடக்க வேண்டும் என்று என் அப்பன் முருகன் முடிவு கட்டிவிட்டான்.. பின்பு அதனை யாரால் மாற்ற முடியும்..?
ஒருவரே பல காலத்திற்கு தொடர்ந்து உச்சாணியில் இருக்க முடியாது. இருக்கவும் என் அப்பன் முருகன் விடமாட்டானாக்கும்..
வாலு போய் கத்தி வந்த மாதிரி.. வெஸ்ட் இண்டீஸ் போய் இந்தியா வந்து பின்பு srilanka வந்து பின்பு தென்ஆப்ரிக்கா வந்து.. பின்பு ஆஸ்திரேலியா வந்து..
எல்லாம் கடிகார முள் மாதிரிதான்.. இறங்கும், ஏறும்..
அம்புட்டுத்தான்..
எங்கே இருந்து ஸ்வாமி இவ்வளவு
தகவல்களைத் தேடிப் பிடிக்கிறீங்க?
அந்த அணியின் சரிவிற்கு கிரிக்கெட் போர்டு தான் காரணம். இளம் வீரர்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்தாமல், ஸ்பான்சர்களை பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மேலும், இளைஞர்கள் எல்லாம் கூடைப்பந்து போட்டிகளில் ஆட அருகில் உள்ள அமெரிக்காவிற்கு சென்றுவிடுகின்றனர். அதில் நல்ல வருமானமும் கூட...
கவாஸ்கர் சொல்வது போல, என்ன தான் வெற்றி பெற்றாலும் எதிர் அணியை கேவலமாக பார்க்கும் மனோபாவம் கிடையாது. எப்பொழுதும் முகத்தில் ஒரு பின் முருவல் இருக்கும் என்பார். எப்படி இருந்த அணி இப்படி ஆகிப்போச்சு...
Post a Comment