Saturday, February 09, 2008

താളവട്ടം - மனசுக்குள் மத்தாப்பு - क्योंकि

One Flew Over the Cuckoo's Nest என்ற ஆங்கிலப்படத்தை மேலாகத் தழுவி பிரியதர்சனின் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால், கார்த்திகா, லிசி நடிக்க 1986 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தாளவட்டம். எம்.ஜி.சோமன், நெடுமுடி வேணு ஆகியோரும் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பனர்.

கதையின் படி கதாநாயகனின் விளையாட்டுத்தனத்தால், அவனின் காதலி விபத்தொன்றில் உயிரிழக்க அதனால் மனநலம் பாதிப்படைந்த நாயகனை மனநல காப்பகத்தில் சேர்க்கின்றனர். அங்கு கடுமையான முறைகளினால் மட்டுமே நோயாளிகளைக் குணமாக்க முடியும் என்ற அபிப்ராயம் உள்ள தலைமை மருத்துவரின் மகள் நாயகனின் மேல் வைக்கும் பிரியத்தினால் நாயகன் குணமடையும் சூழலில் , அடுத்தடுத்து திருப்பங்களுடன் கனமான முடிவுடன் படம் நிறைவு பெறும். தலைமை மருத்துவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கருணை உள்ள மருத்துவராகக் காட்டி இருக்கும் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

படத்தில் மிகமுக்கிய காட்சியான விபத்திற்கு முன்னால் வரும் பாடல் மலையாளத்தில் இன்றும் பலராலும் விரும்பிக்கேட்கப்படும் பாடல்களுள் ஒன்றாகும்.

ரெகுகுமாரின் இசையில் எம்.ஜி.ஸ்ரீகுமார், கே.எஸ்.சித்ரா குரல்களில் அமைந்த அந்தப் பாடலின் காணொளி இங்கே


1988 ஆம் ஆண்டு தாளவட்டம் படம், மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. பிரபு,சரண்யா,லிசி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ராபர்ட்ராஜசேகரனின் இயக்கத்தில் வெளிவந்தது.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ஜெயச்சந்திரன் , சுனந்தா பாடி இருக்கும் இந்த பாடல் காட்சியில் பிரபு எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பாருங்கள்.



இந்தியில் ஷாருக்கானை வைத்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு , பின்பு இயக்குனர் பிரியதர்சனுக்கும் அவருக்கும் ஏற்பட்டக் கருத்து மாறுபாடுகளால் ஷாருக் நீக்கப்பட்டு சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க, கரீனாகபூர் அக்கறைக் காட்டும் மருத்துவராகவும், ரிமி சென் காதலியாகவும் நடித்து க்யோன் கி என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு படம் வெளியானது.

ஹிமேஷ் ரேசமய்யாவின் இசையில் உதித் நாரயண், அல்கா யாக்னிக் குரல்களில் மலையாளம் தமிழ் வடிவங்களில் வந்தபோது கிடைத்த அதே வரவேற்பை இந்தி வடிவத்திலும் பெற்றது.


மூன்று வடிவங்களுமே கிட்டத்தட்ட 20 வருட இடைவெளிகளில் வந்திருந்தாலும் இன்றும் கேட்கும்பொழுது மனதை இளமையாக்குகிறது என்பது நிச்சயமான உண்மை.

3 பின்னூட்டங்கள்/Comments:

துளசி கோபால் said...

தாளவட்டம் ஞான் கண்டு.


அது இரிக்கட்டே......

நிங்கள்டெ கத 'னானும் இண்டியன்' வாயிச்சு.

கொள்ளாம்!!!!

துளசி கோபால் said...

அய்யோடா...தெற்றுபற்றியல்லோ...

'நானும் இண்டியன்' வாயிச்சு.

வினையூக்கி said...

துளசி மேடம்,
ஞான் நிங்களுக்கு தாங்ஸ் பரையது..
:)))))