Wednesday, February 06, 2008

கொசுக்களும் அதைச்சார்ந்த சில நினைவுகளும், பதிவர் அப்பாவிக்காக
ஙேஏஏஏஏஏஏஏஏஏஏ,, நல்லா துங்கிட்டு இருக்கிறப்ப காது பக்கத்துல வந்து மியுசிக் போடுற கொசுவை அடிக்க நினைச்சா, அது ஸ்லிப் ஆகி நம்ம மூக்குல அடிச்சு தூக்கம் கலையுறப்ப வர்றா ஆத்திரம் இருக்கே அது சொல்லி மாளாது.

உலகத்தில எந்த உயிரினத்தோட இறப்பைக் கண்ணால பார்த்தாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதுக்கு ஒரே ஒரு எக்ஸப்ஷன் இந்தக் கொசுதான். கொசு ஜம்முன்னு நம்ம மேல உட்கார்ந்து ஜூஸ் குடிக்கிறாப்ல ரத்தத்தை இஞ்செக்ஷன் போட்டு உறிஞ்சுட்டு இருக்கிறப்ப படீர்னு ஒரு அடி போட்டு அதைத் தட்டி விடுறது ஒரு போர்க்களத்தில் ஏதோ வெற்றியை சாதித்தது மாதிரிதான்.கொசுவலை இருந்தும் , சின்ன வயசுல சாம்பிராணி போட்டு கொசுவை விரட்டி இருக்கோம். சின்ன பேப்பர்ல எண்ணெய் தடவி, டியுப்லைட்ல தொங்க விட்டு கொசு பிடித்தக் காலம் போய் பின்ன சுருள்வர்த்தி வந்தது. நடுவில ஓடோமாஸ் அப்படின்னு ஒரு க்ரீம் அதற்கடுத்து எலக்ட்ரிக் மெஷின்ல கொசுவை விரட்டுற பட்டிகள் வந்தது.
Banish தான் முதல்ல வந்தது என்று நினைவு... மாசக்கடைசியில உபயோகப்படுத்தின பேனிஷ் பட்டிகளை (வாசம் கொஞ்சம் இருக்கும்) லேசாக நெருப்பில் காட்டி கொசுவை விரட்டியக்காலமும் உண்டு. சுருளு போய், பட்டி போய், இப்போ திரவ வடிவிலும் கொசுவை மக்கள் விரட்டத்தான் முயற்சி செய்கிறார்கள். என்ன டெக்னாலஜி போட்டு கொசுப்பரம்பரையைக் காலி செய்ய நினைத்தாலும் டைனசோர் காலத்தில் இருந்து இருக்கும் இந்தக் கொசுக்கூட்டத்தை மட்டும் ஒன்ன்னும் செய்ய முடியல.

தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்ககூடிய கொசுக்களின் வேகம் 1-2 கிமீ/ஒரு மணி நேரம். உலகத்தில நிறைய பேரைக் காலி பண்ணி இருக்கிற வியாதிகளை எல்லாம் அதிகமாக ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தி வருகிற வேலை செய்யுறது இந்தக் கொசுக்கள் தான். இவ்வளவு வேலை பண்ணி இருந்தாலும் எய்ட்ஸ் கொசுக்கள் மூலமாகப் பரவாது என்று சொல்றாங்க


Studies with HIV clearly show that the virus responsible for the AIDS infection is regarded as food to the mosquito and is digested along with the blood meal.
Mosquitoes Do Not Ingest Enough HIV Particles to Transmit AIDS by Contamination
An AIDS-free individual would have to be bitten by 10 million mosquitoes that had begun feeding on an AIDS carrier to receive a single unit of HIV from contaminated mosquito mouthparts.


கொசுக்களைப் பற்றிய “கொசு”றுத்தகவல்கள் :

1. 2700 வகையான கொசுக்கள் உலகத்தில் உள்ளன.
2. வாழைப்பழம் சாப்பிடுறவங்களை கொசுவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
3. கொசு உண்மையில் கடிப்பதில்லை. ஒரு விதமான திரவத்தை நம் தோலின் மேல் செலுத்துவது நம்மைக் கடிப்பது போல இருக்கிறது.
4. பெண் கொசுக்கள் தாம் நம்மைக் கடிப்பது (கொசுக்களிலுமா?!!!!)...ஆண் கொசுக்கள் பியூர் வெஜிடேரியன்ஸ்.
--------------

பதிவர் “அப்பாவி” அழைத்ததின் பெயரில் எழுதப்பட்டது.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

smiles................

said...

....//கொசுக்களிலுமா?//........

நச்!

said...

....//கொசுக்களிலுமா?//........

நச்!

said...

இப்படி எழுதியதற்காக கொசுப்படைகள் உன்னைத் தூக்கிப் போக கடவட்டும்..

said...

//4. பெண் கொசுக்கள் தாம் நம்மைக் கடிப்பது (கொசுக்களிலுமா?!!!!)...ஆண் கொசுக்கள் பியூர் வெஜிடேரியன்ஸ். //

ரசித்தேன். சீண்டலை

said...

//பெண் கொசுக்கள் தாம் நம்மைக் கடிப்பது (கொசுக்களிலுமா?!!!!)...ஆண் கொசுக்கள் பியூர் வெஜிடேரியன்ஸ். //

ஆண்கள் எப்பவுமே பாவம்தான் இல்ல :-)