கடைசி பந்து சிக்ஸர்கள்
கடைசிபந்தில் சிக்ஸர் என்றாலே சேதன்சர்மா, ஜாவித் மியாண்டட் , ஷார்ஜா அத்துடன் கொஞ்சம் ஆதங்கம் இவைதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தோன்றும். எத்தனைதடவைப் பார்த்தாலும் அந்த மேட்சை நினைத்தாலும் ஒரு இனம்புரியாத சோகம் மனதைக்கவ்வும். மியாண்டட் அடித்த அந்த சிக்ஸரினால் பாகிஸ்தானின் ஆதிக்கம் கங்குலி பாகிஸ்தானில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித்தொடரை வெல்லும் வரைத் தொடர்ந்தது.நாலு வருடங்களுக்கு முறை உலகக்கோப்பை போட்டியில் மட்டும் வென்று ஆறுதல் அடைந்துகொண்டிருந்தோம்.
சேதன் சர்மாவின் அந்தக் கடைசி ஓவரின் வீடியோ இங்கே
ஆட்டவிபரம் இங்கே
மேலதிக தகவல் சேதன்சர்மா ஒருநாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனையும் ஒரு சதமும் அடித்துள்ளார். குறிப்பிடத்தக்க சாதனைகளான அவை இரண்டும் மக்களுக்கு மறந்து போய் இந்த கடைசிப் பந்து சிக்ஸர் மட்டும் நினைவில் இருப்பது அவரின் துரதிர்ஷ்டமே.
ஆஸ்திரேலியாவுடன் ஆன ஒருநாள் ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்டெடுத்து கடைசிபந்தில் ஆறு ரன்கள் அடித்தால் ஆட்டம் சமன் என்ற நிலையில் பாகிஸ்தானின் ஆசிப் முஜிதபா அடித்த சிக்ஸரின் வீடியோ இதோ
ஆட்டவிபரம் இங்கே
2006 ஆம் ஆண்டி பங்களாதேஷ் அணிக்கெதிராக ஜிம்பாப்வே அணியின் பிரண்டன் டெயிலர் கடைசிபந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தக் காட்சிகள் கீழே
ஜிம்பாப்வே பெரிய அணிகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அந்த வைத்தியங்களுள் இந்த சிக்ஸரும் ஒன்று.
ஆட்டவிபரம் இங்கே
தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் குலூஸ்னர் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் நியுசிலாந்தின் டியோன்நாஷ் பந்தை சிக்ஸருக்கு அடித்து வெற்றித் தேடி தந்துள்ளார்.
கொசுறு: நான்கு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியாவின் ராஜேஷ் சவுகான், பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக்கின் பந்தை சிக்ஸருக்கு தூக்கி வெற்றி பெறச்செய்தார்.
ஆட்டவிபரம் இங்கே
3 பின்னூட்டங்கள்/Comments:
நம்மை பொருத்த வரை அந்த சேத்தன் சர்மா கடைசி பந்தை full toss ஆக போட்டதாக ஞாபகம்.படத்தில் அவ்வளவு சரியாக தெரியவில்லை.
தேடிப் பிடித்து போட்டிருக்கீர்கள்.
மிக்க நன்றி
Old Golden Days :)
@வடுவூர் குமார்,
ஆமாம் சார்.யார்க்கர் போட நினைத்து வாட்டமான புல்டாஸாக மாறிப்போனது அந்த பந்து.
@இளா,
நிச்சயமாக பழம் நினைவுகளை அசை போடுவதில் இருக்கும் அலாதி சுகம் தனி அனுபவம்
Post a Comment