Saturday, January 19, 2008

எங்களுக்குப் பிடிக்காத ஒரே நெம்பர் பதினேழு

"When you least expect it, it (cricket) comes back and bites you." இது ஸ்டீவ் வாவ்,அவர் தலைமையிலான அணி, தொடர்ச்சியாக 17 டெஸ்ட் ஆட்டங்களை வெற்றிபெறும் வாய்ப்பை கோல்கத்தாவில் இழந்ததை நினைவுகூறும்போது சொல்லிய வாசகம்.

”History repeats itself" கோல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டில் வைத்த ஆப்பு மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வைக்கப்பட்டது. கும்ப்ளே தலைமையிலான அணி மூன்று நாட்களில் சுருண்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களுக்கு தண்ணி காட்டி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் , மீதம் ஒரு நாள் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.


இந்த வெற்றிக்கு மிகப்பெரும் காரணம் நிச்சயமாக சிட்னி ஆட்டத்தின் தோல்வியும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள்தாம் இந்திய அணியை மனதளவில் ஒருங்கிணைத்தது. ”போராளி” கும்ப்ளே "Diplomatic" ஆக பிராட் ஹாக் மீதான புகாரை திரும்பபெற்றுக்கொண்டதும், துணிச்சலாக சேவாக்கை ஆட்டத்தில் சேர்த்ததும் வெற்றிக்குப் பெரும்பங்கு உண்டு.

இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும்,
இளங்கன்று பயமறியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிக்கும் விதத்தில் இசாந்த் சர்மா ரிக்கி பாண்டிங்கை திணறடிக்க்கும் காணோளி பாருங்கள்.



4 வருடங்களுக்கு முன்பு அடிலெய்டில் பதானின் அட்டகாசமான அறிமுகம் இந்திய அணியின் வெற்றியுடன் ஆரம்பித்தது. நாளடைவில் தான் மட்டையாளரா, பந்துவீச்சாளாரா என கிரெக்சாப்பலின் தயவால் அவருக்கு சந்தேகம் ஏற்பட அவரின் ஆட்டத்திறன் சரிந்து தென்னாப்பிரிக்க தொடரினிடையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. 20-20 உலகக்கோப்பை பதானின் மறுபிரவேசத்திற்கு வித்திட்டபோதிலும், பெங்களுரு சதத்தினால் அவரின் நம்பிக்கை மேலதிகமாகி இன்றைய பெர்த் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெறும் அளவுக்கு “அவரது கடின உழைப்பு” வகை செய்துள்ளது.

மார்க் டெய்லரின் ”என்ன பண்ணீங்க, அருமையான மறுபிரவேசம்” என்ற கேள்விக்கு “கடின உழைப்பு” என்ற அவரின் பதில் நிச்சயமாக கபில்தேவின் இடத்தை நோக்கிச் செல்கிறார் என்பதற்கு ஒரு அச்சாரம்.

அடுத்து வீரேந்திர சேவக், இன்னமும் கிட்டத்தட்ட 50 யை சராசரியாக வைத்திருக்கும் இவர் அணியில் இருப்பதே பலம் தான். 25 ஓவர்களில் மட்டை போட்டு 30 ரன்களை எடுப்பதைக் காட்டிலும் வந்தோமா,நாலு சாத்து சாத்தி பந்து போடுறவர்களை கிலியடைய செய்தோமான்னு இருக்கனும். இவர் ஆட்டம் கிராம மக்கள் சொல்வது போல வாச்சான் போச்சான் ஆட்டமாக இருந்தாலும் நின்றுவிட்டால் 150 அடிக்காமல் போக மாட்டார். உபயோகமான பந்துவீச்சாளர் கூட. கில்கிறிஸ்ட்டை காலைசுத்தி பவுல்ட் ஆக்கும் காணொளி இங்கே.



ஒவ்வொரு ஆட்டமும் தேர்வு ஆட்டம் போல ஆட வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும் லக்ஷ்மனின் இரண்டாவது இன்னிங்ஸ் 79,திராவிட், டெண்டுல்கரின் முதல் இன்னிங்ஸ் அரைசதங்கள், ஆர்பி சிங்கின் பந்துவீச்சு மற்றும் அந்த 30 ரன்கள், தோனியின்
7 கேட்ச், 1 ஸ்டம்பிங் , முக்கியமான 38 ரன்கள் என அணியில் ஏறத்தாழ அனைவரின் கூட்டு முயற்சியில் கிடைத்த இவ்வெற்றிப்பயணத்தின் ஆரம்பம் அடிலெய்டிலும் தொடரும் என வாழ்த்துவோம்.இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் உண்மையான வெற்றி கிரிக்கெட் ஆட்டத்திற்கே... Cricket is the greatest leveller என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

வினையூக்கி,

உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்ட பதிவு! சரியாக சொன்னிங்க! இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னரே ஆஸ்திரேலியாவிற்கு சவால் கொடுக்கும் ஒரே அணி இந்தியா தான் என்று சொல்லப்பட்டதை மெய்பித்துள்ளார்கள். முதல் டெஸ் தவிர மற்ற எல்லாவர்றிலும் ஆஸ்திரேலியா திணறியது.

வெளிநாட்டில் சொதப்பும் அணி என்பதை எல்லாம் மாற்றி வரும் அணி இது.

முன்னர் எல்லாம் டெண்டுல்கரை மட்டும் அதிகம் எதிர்ப்பார்த்ததால் அப்படி ஆச்சு, இப்போவும் டெண்டுல்கர் அதே போலத்தான் ஆடுகிறார். ஆனால் அவர் அடிக்காத போதும் கைக்கொடுக்க ஆள் வந்து விட்டார்கள்.

டெண்டுல்கர் எப்போதும் முதல் இன்னிங்சில் அடிப்பார், அடுத்த இன்னிங்சில் அழுத்தம் காரணமாக தடுமாறுவார், அதை உணர்ந்து இனி நாம் கேம் பிளான் போட வேண்டும்.

said...

வினையூக்கி தமிழுல விளையாட்டப்பத்தி நீங்க மட்டும்தான் எழுதறீங்க. அதுலையும் இந்தப் பதிவு ரொம்ப அருமை. blogkutல கிரிக்கெட் தலை விரிச்சாடுது. அப்போ நினைச்சுப்பேன், தமிழ்லயும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு.

சர்மா, நல்லா விளையாடனும், ஒரு நாள் ஆட்டத்துக்கு ஒரு சிறந்த விளையாட்டு வீரர். இரஃபான் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட். மனம் குதூகலப்பட்ட ஆட்டம்.

said...

வினையூக்கி, நல்லதொரு பதிவு. அருமையான விமர்சனக் கட்டுரை. நட ந்து முடிந்த கிரிக்கெட் பற்றி.

said...

excellent keep writing sport articles thanks for videos

said...

வீடியோவிற்கு நன்றி!

நன்றாக உள்ளது

keep it up!