Wednesday, January 16, 2008

சக்கரநாற்காலியில் ஒரு நடனம்



பொங்கலன்று மாலை மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய 13வது தேசிய இளைஞர் திருவிழாவின் மூன்றாம் நாள் கலாச்சார நிகழ்ச்சிகளை, சென்னை நேரு விளையாட்டரங்கில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கோலாகலமான விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் போட்டிகளிலும் , போட்டிகள் அல்லாத பிரிவுகளிலும் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளைக் காட்டினர்.

பீகார், அந்தமான் நிகோபார், ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் கலைநிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த வீரமல்லுவின் “wheel chair" நடனம் இடம்பெற்றது.பார்வையாளர்கள் அனைவரின் கைத்தட்டலைப் பெற்ற அந்த சக்கரநாற்காலி நடனத்தின் சிலக்காட்சிகளின் காணொளி இங்கே


ஆரம்ப 90களில் வளைகுடா நாடு ஒன்றில் கட்டடப் பணியில் இருந்தபோது , தவறி மிக உயரமான தளத்தில் இருந்து கீழே விழுந்து, தன் கால்களின் செயற்திறனை இழந்த வீரமல்லு , சிகிச்சைக்குப் பின் , தளராத தன்னம்பிக்கையுடன் கணினிப்பயிற்சி பெற்று , தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிரலாளராகப் பணிபுரிகிறார். அவரின் இந்த பங்கேற்பு தேசத்தின் பலபகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களை நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றது. பாராட்டுக்கள் திரு வீரமல்லு.

2 பின்னூட்டங்கள்/Comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாராட்டுகிறேன்.

Appaavi said...

வினையூக்கி அவர்களே, உங்களை ஒரு மொக்கை பதிவு போட அழைத்துள்ளேன். விபரம் இங்கே: http://appaavi.hikanyakumari.com/?p=134