Tuesday, January 08, 2008

பின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்கதை

”இன்னக்கி பிலிப்பைன்ஸ் போகலாமா!! நார்வே இல்லாட்டி ஸ்வீடன் போகலாமா!! சே எங்க போனாலும் இந்த இந்தியப் பசங்க இருக்கானுங்க... இந்திய பொண்ணுங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னதான் இருந்தாலும் பிலிப்பைன்ஸ் பொண்ணுங்க மாதிரி பெருந்தன்மை வராது...” என்ற மனவோட்டத்துடன் கார்த்தி யாஹூ அரட்டையினுள் நுழைந்தான். அதிக இணையக் காணொளி(WebCam) இணைப்புகள் இருக்கும் “மணிலா அரட்டை” அறையினுள் நுழைய முற்பட்ட போது நிறைய ஆட்கள் இருக்கின்றனர் வேறு அறை பார்க்கவும் என யாஹு சொல்ல, குறைந்த நபர்கள் இருக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் அறைக்கு கார்த்தி நுழைந்து , வயது, ஆணா பெண்ணா என ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களை சோதித்துக் கொண்டே வரும்போது ஒரு பெயரில் Jeni, 24, Female எனக்காட்ட அதை தனி அழைப்புக்கு அழைத்தான்.

உடனே பதில்வந்தது. ஆங்கிலத்தில் “ஹலோ ” என

”வயது, ஆணா/பெண்ணா வாழுமிடம்“ எனக் கேட்டபோது

“ஜெனி, 24 , பெண், இந்தியா” என வந்ததும் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் வருவதை கார்த்தியால் தவிர்க்க இயலவில்லை.

”கார்த்தி, 27 , அழகான ஆண், இந்தியா , சென்னை”

“நானும் சென்னை தான்” என்று ஆங்கிலத்தில் பதில் வர இது ஏதாவது ஒரு ஆண் பெண் பெயரில் இருக்கிறானா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.

“வெப் கேமரா” என கார்த்தி கேட்டு முடிக்குமுன் அழைப்பு இல்லாமாலே திரையில் ஜெனி முகம் வந்து தெரிய ஆரம்பித்தது. கார்த்திக்கு ஆச்சரியத்தை நம்பவே முடியவில்லை. ஆமாம் அழகான பெண் , அதுவும் இந்தியப் பெண் திரையில் வந்து கையசைத்தாள். வழக்கத்தை விட திரை தெளிவாகத் தெரிந்தது. முழுக்கை சுடிதார், பார்க்க குடும்ப பாங்காய் இருந்தாள்.

சென்னை, தமிழ் என சொன்னவுடன் ஆங்கிலமும் தமிங்கிலமும் கலந்து அரட்டை தொடர ஆரம்பித்தது. உரையாடல் போய் கொண்டே இருக்க, கார்த்திக்கு ஜெனியின் பின்புறம் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் கையில் புத்தகத்துடன் நடந்து செல்வதும், சில சமயங்களில் கணினி அருகில் வந்து போவதுமாய் தெரிந்தது.

“ஜெனி, உன் பின்னாடி யார் ?” எனக் கேட்டான்

“இல்லையே யாரும் இல்லையே, நான் மட்டும்தான் வீட்டில் இருக்கேன்”

கார்த்திக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

“நீ நிறைய பிலிப்பைன்ஸ் பொண்ணுங்களோட சாட் பண்ணுவியா?..இப்போக்கூட அடுத்த விண்டோல ஒரு பிலிப்பைன்ஸ் காரியைத் தானே பார்த்துட்டு இருக்க, அதனால உன் பிரமையா இருக்கும்”

கார்த்திக்கு ஒருவேளை ஜெனி சொல்லுவது சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. மணி ஏற்கனவே இரவு இரண்டைக் கடந்து இருந்தது. கண்கள் தூக்கக் கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தன. அனைத்து பிலிப்பைன்ஸ் பெண்களின் அரட்டையையும் மூடிவிட்டு ஜெனியுடம் மட்டும் அரட்டையைத் தொடர்ந்தான்.

மீண்டும் அதே பிலிப்பைன்ஸ் பெண், ஜெனியின் பின், அவளின் தோள் மேல் கைவைத்தாற் போல கணினியை அசைத்தாள். கார்த்திக்கு நிச்சயமாய் இது பிரமை இல்லை எனத் தெரிந்து

“ஜெனி,, மீண்டும் அதே உருவம் உன் பின்னே” என்று சொல்லுவதற்குள் ஜெனியினது அரட்டை இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரையும் மறைந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தற்சமயம் இணைப்பில் இல்லை எனக்கூறியது.

அய்யோ, ஜெனியின் பின்னால் ஒரு உருவம் ஜெனிக்கு தெரியாமல் நிற்கிறதே.கார்த்திக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பிக்க அதே சமயம் பல மைல்களுக்கு அப்பால் பிலிப்பைன்ஸில்,

"காலையில் சீக்கிரம் எழவேன்டும்" என நினைத்துக் கொண்டே கணினி முன் கிடந்த வெற்று நாற்காலியை நகர்த்தி விட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண் கணினியை அணைத்தாள்.

10 பின்னூட்டங்கள்/Comments:

Unknown said...

நல்லா இருக்கு. கடைசியில கொஞ்சம் புரியலயே? என்னத்த 'தரவிறக்கம்' பண்றா? நாயகனோட கணிணித் தகவல்களையா??

நான் என்னவோ..'அந்த மாதிரி' வெப்காம் விஷயங்களுக்கும் இந்தியாவில அவுட்சோர்சிங் வந்துடுச்சுன்னு கொண்டு போவீங்கன்னு நினைசேன் :)

Suban said...

அப்ப சாட்-ல பேசினது தான் பேயா? :s

வினையூக்கி said...

சுபன் , நீங்க நினைச்சது சரிதான்.. சாட்லே பேசினது தான் பேய்.. பின்ன நின்ற பெண் உண்மை.

தஞ்சாவூரான் சார்,

பேய் இருக்கிறதிகில் கதையா முயற்சி பண்ணது சார். சாட்லே பேசிக்கொண்டிருந்தது தான் பேய்.. ஆனால் கார்த்தி பின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண்தான் பேய் என்று நினைக்கிறான்

TBCD said...

ஜெனி தான் பேயா..

சிலிர்க்கவில்லை... ;)

வினையூக்கி said...

தஞ்சாவூரான் சார்,
பேய்க்கதை என தெளிவாகத் தெரியும்படி கடைசி முடிவு வரிகளை மாற்றி அமைத்து உள்ளேன்.

நன்றி டிபிசிடி.
முடிவு வரிகளை மாற்றி வைத்துள்ளேன்.

ஜே கே | J K said...

இப்போ ஓ கே.

KARTHIK said...

வினை
சுஜாதாவுக்கு கணேஷ் வசந்த் போல
உங்களுக்கு கார்த்தி ஜென்னி
நல்லாருக்கு

FunScribbler said...

பேய் கதை சூப்பர்ர்ர்ர்!!

Divya said...

ஜெனியை பேயாக்கி விட்டீர்களா?

நல்லா இருக்கு 'சாட்' பேய் கதை!

Divya said...

ஜெனி-கார்த்திக் பெயர் எல்லா கதைக்கும் பொருந்துறாப்லயே இருக்கு!

ஆன்லைன் 'சாட்' வைச்சு ஒரு பேய் கதை, நல்ல முயற்ச்சி வினை!