நீங்காத நினைவுகள் - சிறுகதை
அந்த பிரபலமான வார இதழில் கார்த்தி எழுதி இருந்த சிறுகதையை மோகன் திரும்ப ஒருமுறைப் படித்து முடித்துவிட்டு மேசையின் மேல் வைப்பதற்கும் கார்த்தி கையில் ஒரு கோப்புடன் அவரின் அறையினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
"மோகன்,பைனல் இண்டர்வியுல 4 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆயிருக்காங்க, நாம எடுக்கப் போறது மூணு பேர்தான்,ஒருத்தரை ரிஜக்ட் பண்ணனும்? நீங்க ஒரு முறை இந்த ரிப்போர்ட்டை ரிவ்யூ பண்ணி ரிசல்ட் சொல்லிடுங்க "
"அது இருக்கட்டும் கார்த்தி, நீ முதல்ல உட்காரு உன் கதை படிச்சேன்.. ம்ம்ம்ம் நல்லா வந்து இருக்குன்னுசொல்றதுக்கு முன்ன ஒரு விசயம் .. சொன்னால் கோச்சுக்ககூடாது"
"சொல்லுங்க மோகன், நீங்க எப்போதும் என்னோட நலம் விரும்பின்னு எனக்குத் தெரியும்"
"பேரைக்கூட மாற்றாமல் எதுக்கு ஜெனிப் பத்தி எழுதி இருக்க? அதுவும் எதிர்மறைக் கதாபாத்திரமாய்? சொந்தவாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தவிர்த்துக் கதை எழுத முடியாதா? "
"ம்ம்ம்ம் ஜெனி மேல ஏற்பட்ட வெறுப்பை தீர்த்துக் கொள்வதற்காக போன வருடம் எழுதிவைத்தக் கதை, சும்மாஅனுப்பி வைக்கலாமேன்னு அனுப்பி வச்சா அதை பிரசுரமே பண்ணிட்டாங்க .. நானே எதிர்பார்க்கல மோகன்"
"நாம நேசிக்கிறவங்க மேல, எந்தக்காலத்திலும் எந்தக் காரணத்தை சொல்லியும் வெறுக்க முடியாது ..நீ அவளை நேசிச்சது உண்மைன்னா உன்னால இவ்வளவு வெறுப்பைக்காட்டி இருக்க முடியாது... வார்த்தைகளிலும்வசனங்களிலும் இவ்வளவு வெறுப்புன்னா உன் மனசில்ல எவ்வளவு காட்டம் இருந்திருக்கும்.. "
"இருக்கு மோகன், இன்னும் கூட கொஞ்சம் இருக்கு, அவ டிப்லோமெடிக்கா பிரிஞ்சு போயிருந்தா பரவாயில்லை,அவ பண்ணது பச்சைத் துரோகம்.. அவள் துரோகி.. அந்த நினைப்பு போக இன்னும் கொஞ்ச நாளாகும்... எனக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் இருந்திருந்தால் அவளை அப்போவே கொலை பண்ணி இருப்பேன்.. நல்ல வேளை
அப்படி எதுவும் ஆகல..நான் கோழையா இருந்ததும் நல்லதா போச்சு, " கண்கள் சிவக்க பேசிய கார்த்தியை தண்ணீர் கொடுத்து மோகன் ஆசுவாசப்படுத்தினார். தண்ணீரைக் குடித்துவிட்டு கார்த்தி தொடர்ந்தான்
"இதில் எந்த தப்பும் இருக்கிறதா நான் நினைக்கல மோகன், ஆல்பிரட் நோபல் உருவாக்கின நோபல் பரிசை கணக்குக்கு மட்டும் தரமாட்டாங்க, காரணம் உங்களுக்குத் தெரியும்தானே!! அவரோட காதலி அவரை விட்டுட்டு ஒரு பெரிய கணிதமேதையோட போயிட்டாங்கன்னு,.. உயில் கூட எழுதி வச்சிருக்காராம்.. எக்காலத்திலும் கணக்குக்கு நோபல் பரிசு தரக்கூடாதுன்னு, எப்பேற்பட்ட விஞ்ஞானி அவருக்கே, அவரோட காதல் எந்த அளவுக்கு பாதிப்பைக் கொடுத்திருக்குன்னா, நான் எல்லாம் சாதரணம் மோகன்"
"கார்த்தி, நீ சொல்ற இந்த நோபல் பரிசு உதாரணம் தப்பு, நீ குறிப்பிடுற அந்த மேத்தமேடிசியனுக்கும் நோபலுக்கும் நேரிடையா எந்த தொடர்பும் கிடையாது, அது அந்தக் காலத்தில மேத்ஸுக்கு நோபல் பரிசு ஏன் கொடுக்கலேன்னு கதைகள் பாணியில சொல்லப்பட்ட பல கிசுகிசுக்களில் ஒன்னு.. விசயத்துக்கு வருவோம், உன் எழுத்து நடை நல்லா இருக்கு, இந்த மாதிரி சுய புலம்பல்களை கதையா மாற்றாமல் நல்ல பாசிடிவ் கதைகள் எழுது.. உன் கதை படிக்கிறவங்களில் யாராவது ஒருத்தருக்கு லேசான மனமாற்றம் வந்தாலே போதும், நீ எழுத்தாளானாய் ஜெயிச்சுடுவே!!! "
கார்த்திக்கு லேசாய் உறைக்க ஆரம்பித்தது.
"கார்த்தி, நமக்கு சங்கடங்களைக் கொடுத்தவங்களை மன்னிக்கிறது தான் அவங்களுக்கு நாமக் கொடுக்கிற பெரிய தண்டனை.. அது மாதிரி ஒரு சந்தோசமான பழிவாங்கல் எதுவுமே இல்லை தெரியுமா!! " மோகன் தொடர்ந்து பேச பேச கார்த்தி தனக்கு ஒரு தெளிவு பிறப்பதாய் உணர்ந்தான்.
சில வினாடிகள் அமைதிக்குப் பின்னர்
"கார்த்தி, அந்த லிஸ்ட்டை ரேங்கிங் படி வாசிங்க, "
"இமானுவேல் ஞானசேகரன், பாண்டித்துரை, அஜீஸ் அகமது அண்ட் லாஸ்ட்டா ரம்யா திருவேங்கடம்,"
"ரம்யா" இந்தப் பெயரை மெல்ல மனதுக்குள் மோகன் முணுமுணுத்துக் கொண்டார். எத்தனை வருடம் ஆனாலும் இந்தப் பெயரை மறக்க முடியுமா அல்லது அவளைத்தான் மறக்க முடியுமா...எங்கிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியாது..அதனால் என்ன? மலர்கள் சருகாக மாறிப்போயிருந்து இருக்கலாம்.. அதன் மனம் மனதில் எப்போதும் அப்படியேத்தானே இருக்கும். மோகனின் மனதில் ஏற்பட்ட உற்சாகம் மெல்லிய புன்னகையாய் மாறி
"கார்த்தி, யாரையும் ரிஜெக்ட் பண்ண வேண்டாம், நாலு பேரையும் செலக்ட் பண்ணிடுங்க, எல்லோருக்கும் நாளைக்கே ஆஃபர் லெட்டர் அனுப்பிச்சுடுங்க"
மோகன் சொல்வதைக் கேட்ட கார்த்தி அதற்கான காரணம் தெரியாமலேயே தலையை ஆட்டினான்.
4 பின்னூட்டங்கள்/Comments:
ஜெனி இருந்தும் பேய் இல்லாத வினையூக்கி கதையா? என் எதிர்பார்ப்பு எல்லாமே வீணாப் போச்சு! :))
ஆனா கதைக்கு நடுவில் சுட்டி எல்லாம் குடுத்து அறிவியல் சமாச்சாரம் எல்லாம் சொல்லி இருப்பது சூப்பர்! :)
\\"கார்த்தி, நமக்கு சங்கடங்களைக் கொடுத்தவங்களை மன்னிக்கிறது தான் அவங்களுக்கு நாமக் கொடுக்கிற பெரிய தண்டனை.. அது மாதிரி ஒரு சந்தோசமான பழிவாங்கல் எதுவுமே இல்லை தெரியுமா!! " \\
இந்த சந்தோஷமான பழிவாங்குதல் சில சமயங்களில் கஷ்டமானதும் கூட......ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்பதே உயர்ந்த மனித நேயம்!
மிக அருமையாக , ஒரு அற்புதமான கருத்தை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்,
பேய் கதைதள் மட்டுமல்ல, நல் நெறிக் கதைகளும் உங்களால் மிக யதார்த்தமாக எழுத முடியும் என உணர்த்தியது இந்த பதிவு! பாராட்டுக்கள்!
Hi..vinayooki ...
read all ur stories..very good stories...
one thing am confused with ur story names..
why don't u change in the future stories
இந்த கதையும் வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது.
பின்குறிப்பு: உங்களில் பல கதைகளிலும் ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக இருக்கிறது. தயவு செய்து ஆங்கிலத்தை தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Post a Comment