Monday, December 17, 2007

மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

காட்சி 1 :

"ஏன் தங்கினால் என்ன?" இது தான் இன்றைக்கு காலை ஜெனி என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

<< எவ்வளவு திமிர் இருந்தால், ஜெனி வெளியூர் போறப்ப மோகன் கூட ஒரே ரூமில் தங்கி இருப்பாள், அதை வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்றாள், சே, எவ்வளவு கேவலமானவளா இருப்பாள் >> என் மனதுக்குள் ஜெனியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மேல் இது நாள் வைத்திருந்த அன்பெல்லாம் வெறுப்பின் வடிவில் எரிமலையாய் சீறியது. மதியம் ஒரு லோக்கல் ரவுடியிடம் சொல்லி கள்ளத்துப்பாக்கி வாங்கினேன். நேராக ஜெனி ரம்யாவுடன் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்ஸை நோக்கி என் காரை ஓட்டினேன்.


காட்சி 2 :

"சாரி, ஜெனி, நான் தான் அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கோ"

"இல்லை கார்த்தி, ஐ சுட் நாட் ஹாவ் டன் தட், நான் அப்படி தங்கி இருக்கக்கூடாது, பட் மோகன் பர்பெக்ட் ஜெண்டில்மேன் தெரியுமா?"

"சாரி, நான் மோகனையும் தப்பா நினைச்சுட்டேன், எனி வே இப்போவாது நாம புரிஞ்சுக்கிட்டோமே!!"

"ஆமாண்டா கார்த்தி, நீ இப்படி பண்ணலேன்னா, நாம எப்போவுமே சேர்ந்து இருக்க முடியாது, மார்னிங் நீ பேசுன பேச்சுக்கு உன் முகத்திலேயே முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன்"

இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்தோம். மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

காட்சி 3:

படிகளில் மோகனைப் பார்த்த ரம்யா அழுதபடியே அவனிடம் ஓடி வந்தாள்.

"எல்லாம் கண்ணிமைக்கிற நேரத்துக்குள் நடந்துடுச்சு மோகன், கார்த்தி வந்தான், ரிவால்வரை எடுத்து ஜெனியை சுட்டுட்டு , தன்னையும் சுட்டுக்கிட்டான்"

ரத்த வெள்ளத்தில் எங்களது உருவங்களை பத்திரிக்கைகாரர்கள் போட்டோ பிளாஷ் தெரிக்க எடுத்துக் கொண்டிருக்க மெதுவாக வான் மேகங்களைத் தாண்டி வானில் நானும் ஜெனியும் பறக்கலானோம்.

12 பின்னூட்டங்கள்/Comments:

சென்ஷி said...

super....... :))))

Veera said...

அருமை.. நல்ல திரைக்கதை!!

இலவசக்கொத்தனார் said...

அது சரி!!!

ஜெனி சாவாம இருந்தால்தான் ட்விஸ்ட் போல!! :)

G.Ragavan said...

என்னங்க இது....பேய்க்கதையா எழுதுறீங்க. நீங்க நீங்கதானே :)

Divya said...

திரைக்கு ஏற்ற கதை!



\\மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.\\

இந்த வரி, இரண்டாவது காட்ச்சியின் கடைசி வரிகளாகத்தான் வருமா? இல்லை மூன்றாவது காட்ச்சியின் முதல் வரியா???

TBCD said...

ஜெனியயைத் தொடர்ந்து பேய் ஆக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும், வினையூக்கியயை நான் கண்டிக்கிறேன்... :)))

நல்லா இருந்திச்சுங்கோ....ஆனா, வினையூக்கியின்னாலே, பேய் கதையின்னு பிராண்டு ஆயிடுச்சி..அதுனாலே, 2வது படிக்கும் போதே..இவங்க பேய் தான்னு முடிவு கட்ட தோதா இருக்கு...

SurveySan said...

அட, இது ஜூப்பர்!

சின்னதா அழகா சொல்லிட்டீங்க.

ஆனா, tbcd சொன்னா மாதிரி....

வினையூக்கி said...

நன்றி சென்ஷி மற்றும் வீரசுந்தர்.

இ.கொ. சார்,
அடுத்தக் கதையில ஜெனி சாக மாட்டாங்க :):)

ஜி.ரா,
பேய் கதை எழுதி இதுவரை ஒண்ணும் ஆகல.. எல்லாம் "ஜெனிமோகினி" துணை.


திவ்யா நன்றி. அது இரண்டாவது காட்சியின் கடைசி வரி தான்.


டிபிசிடி, உங்கள் கண்டிப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேய் பிராண்டை மாத்தலாம் என கொல்லிமலையில் இருந்து உத்தரவு வந்து விட்டது,

நன்றி சர்வேசன் மற்றும் அரைபிளேடு

SurveySan said...

போட்டிக்கான கதை எதுன்னு சொல்ல மறந்துடாதீங்க. 23ஆம் தேதி கடைசி நாளு.

Dinesh said...

சூப்பர்...
என்னமா எழுதுறீங்க...
நீங்க... மனுசனா.. பேயா...
:)

Nimal said...

சூப்பர்...
ஒரு உண்மை தெரியணும்...
நீங்க மனுசனா... பேயா...?
:)

வினையூக்கி said...

நன்றி நிமல் மற்றும் தினேஷ்