Wednesday, December 05, 2007

"காதலிக்க நேரமில்லை" - விஜய் தொலைக்காட்சித் தொடர்

விஜய் தொலைக்காட்சித் தொடர்களின் சிறப்பம்சம், அவை ஆரம்ப்பிக்கப்படும் முன்னரே கொடுக்கப்படும் விளம்பரங்கள் தாம். தொடர் எந்த வகையாக இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் தொடர் நீளக்கூடாதா என நினைக்கையிலேயே தொடரை முடித்துவிடுவனர். வளவள கொழகொழ என்று சவ்வாக இழுக்காமல் திடிரென முடிப்பதும் பாராட்டப்படக் கூடிய விசயம் தான்.


தற்போது திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு (இந்திய நேரம்) "காதலிக்க நேரமில்லை" தொடர் அட்டகாசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரபல திரை இசையமைப்பாளர் விஜய் ஆந்தனி யின் ஆரம்பப் பாடலும்(பாடல் வரிகள் : தேன்மொழி தாஸ்), சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ள காட்சியமைப்புகளும், சின்னத்திரை அடுத்த பரிணாமத்தை நோக்கி மெல்ல நகர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.



பிரஜன், சந்திரா லக்ஷ்மணன், "உன்னாலே உன்னாலே" ஸ்ரீநாத் ஆகியோர் கதையின் மையக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். பிரஜன்,ஏற்கனவே சன் மியுசிக் தொகுப்பாளராக இருந்த காலங்களில் விஜய் தொலைக்காட்சிக்காக மின்பிம்பங்கள் தயாரித்த "இது ஒரு காதல் கதை" தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் நாயகனாக நடித்து திடிரென ஏனோ மாற்றப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. தற்பொழுது சன் தொலைக்காட்சியில் அஞ்சலி தொடரிலும் பிரஜன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மறைந்த இயக்குனர் ஜீவாவின் படங்களான 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே ஆகியப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் இந்த தொடரில் கலகலப்பான கதாபாத்திரத்தில் வருகிறார். பிரம்மா கதை திரைக்கதை எழுத அழகர் ரா.பிரபுகண்ணா இயக்கியுள்ளார்(ஒருவரா, இல்லை இரட்டை இயக்குனர்களா என்பது சரியாகத் தெரியவில்லை)



மறுநாள் மதியம் 1 மணிக்கு(இந்திய நேரம்) மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

"காதலிக்க நேரமில்லை" தொடரின் அதிகாரப்பூர்வத்தளம் இங்கே

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்

6 பின்னூட்டங்கள்/Comments:

Yogi said...

ஆமாங்க. ஒரு வாரமா நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்காங்க.

அதுக்குள்ள ஆர்க்குட்ல இதுக்கு ஏழெட்டு குழுமம் வேற ஆரம்பிச்சிட்டாங்க. ஹி ஹி நானும் சேர்ந்துட்டேன்கிறது வேற விசயம். :)))

கார்த்திக் பிரபு said...

sw companies la ellam indha tv serial aramba paatu than fwd aguthu ipppo

முரளிகண்ணன் said...

opening good, but finishing? many serials of vijay tv failed in finishing

Yogi said...

// sw companies la ellam indha tv serial aramba paatu than fwd aguthu ipppo //

ஆமாம் டைட்டில் சாங் சூப்பர்...

கானா பிரபா said...

இப்படித்தான் விஜய் டீவியில் பிரஜனை வச்சு இது ஒரு காதல் கதை ஆரம்பிச்சாங்க. இடை நடுவில் அவர் பிச்சுக்கிட்டார். யாரோ ஒரு அந்நியன் தான் தொடர்ந்து வந்தார். கிட்டத்தட்ட ஆறுமாச தொடரை பார்க்காமல் ஆரம்பத்தில் கொஞ்சமும் முடிவையும் பார்த்தேன் கதை புரிந்து விட்டது.

செல்வம் said...

பிரம்மா- இவர் தான் கனா காணும் காலங்கள் writer. பிரபுகண்ணா ‌கனா காணும் காலங்கள் தொடரின் முன்னால் இயக்குநர்.இப்போ ராஜா என்பவர் இயக்கி வருகிறார்.நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை.எனிவே வாழ்த்துக்கள்