ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம் - "நச்சுன்னு ஒரு கதை" (Surveyசன் போட்டிக்காக)
ஞாயிற்றுக்கிழமை காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நினைச்சா, ஜெனி ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில ஒரு டிவிடி சகிதமா என்னை எழுப்பி விட்டு லேப்டாப்பில் அந்தப் படத்தை போட்டாள். ஜெனி ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. இருந்தாலும் அவளுக்குப் பேய்ப்படம் பார்க்கறதுன்னா கொள்ளை விருப்பம்.. ஆனால் ஒன்னு அவள் பேய்ப்படங்களை தைரியமா பகல்ல மட்டும் தான் பார்ப்பாள்.
ஒரு படம் பார்த்தான்னா ஒரு வாரத்துக்கு அவ ரூம்ல தூங்க மாட்டாள்... அவள் பயப்படுவது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து பயமுறுத்தி என் ரூம்ல வந்து தூங்குவாள். என்ன படம்னு டிவிடிக் கவரை எடுத்துப் பார்த்தேன்... அட இது நான் ஸ்கூல் படிக்கிறப்பவேயே பார்த்தது...
"ஜெனி, இந்தப் படத்தில ஒரே ஒரு பயங்காட்டுற சீன் தான்... இப்பொ வர பேய்ப்படங்களைக் கம்பேர் பண்றப்ப , இந்த காலத்து சின்னக் குழந்தைக் கூட இதைப் பார்த்துப் பயப்படாது... "
ஒவ்வொரு பயங்காட்டும் சீன் வரும்பொழுதும் அதை முன்கூட்டியே ஜெனியிடம் நான் சொல்ல சொல்ல அவள் வழக்கத்தை விட கொஞ்சம் தைரியமாகவே படத்தைப் பார்த்தாள்.
"ஜெனி, இப்போ பாரு, அந்த ஹீரோவோட கம்ப்யூட்டர்லேந்து ஒரு கை வரும் பாரேன்!!!
இந்த கம்ப்யூட்டர்லேந்து கைவரும் சீன் தான் அப்போ என் கனவில எல்லாம் அடிக்கடி வரும்.. பாரேன்.. பாரேன்.... "
ஜெனியும் கைவரும் என்று அந்த சீனை உன்னிப்பாக கவனித்தாள்... கம்ப்யூட்டரிலிருந்து கை
வராமலேயே அந்த சீன் முடிந்துப் போனது. எனக்கு குழப்பமாய் போனது.. திரும்பவும் டிவிடிக் கவரை எடுத்து சரிபார்த்தேன்... அதே படம்தான்... ஹீரோவின் கம்ப்யூட்டரில் இருந்து கைவரும் சீன் தான் இந்தப் படத்திலேயே கொஞ்சம் பயமான சீன்.. அது வரவில்லையே!!! டிவிடி வெர்ஷன்ல கட் பண்ணிட்டாங்களா!!! இல்லை நான் தான் படத்தை மறந்துட்டேனா!! ஒன்றும் புரியவில்லை... அந்த ஒரு சீனைத்தவிர நான் சொன்ன எல்லா சீனும் சரியா படத்தில் இருந்தது.
படம் முடிந்ததற்கும் ஜெனிக்கு கார்த்தியிடம் இருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது,
"ரம்யா, லேப்பியும், டிவிடியும் இங்கேயே இருக்கட்டும்,, நைட்டு வந்து எடுத்துக்கிறேன்.."
ஜெனி போனதும் திரும்பவும் தூங்கப்போன நான் மதியம் எழுந்தவுடன் ஒரு கியுரியாசிட்டியில் திரும்பவும் அதேப் படத்தை போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்,,, எல்லா சீனும் வந்தது... அந்த கம்ப்யூட்டர் கை சீன்.. மனது என்னையும் அறியாமல் திக் திக் என அடிக்க ஆரம்பித்தது... ஹீரோ கம்ப்யூட்டரில் எதோ செய்து கொண்டிருக்கிறான்.. கை நீளூமா.. இல்லை இல்லை.. .. அந்த சீன் வரவில்லை... என் பதைபதைப்பு சிறிது நேரம் நின்றது..
ஆனால் ... ஆனால்... ஆனால்... ஆனால்... நான் படம் பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப்பிலிருந்து ஒரு கை என் கழுத்து வரை நீளஅ..ஆஆஆஆஆஆஆஆஆரம்பித்தது....
----------------------------
Surveyசன் நடத்தும் "நச்சுன்னு ஒரு கதை" போட்டிக்காக எழுதப்பட்டது
8 பின்னூட்டங்கள்/Comments:
செல்வா,
முடிவு இதுதான்னு ஜெனி போனதும் யோசிக்க வைச்சிருச்சே... :(
ஏனுங்க வினையூக்கி, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அப்படீன்னு பதிவுல போட்டுட்டு, இப்படி பேய்க்கதையா போட்டு பயமுறுத்தறீங்களே. முடிவு யூகிக்கக்கூடியதானாலும் கதை விறுவிறுப்பா இருக்கு.
ஆகா..பயமுறுத்தறீங்களே தல ;))
எப்பவுமேப் பேய்க் கதைதானா? :-)
முதல் தடவையே லாப்டாப்பிலிருந்து தான் கை வருமோ என்று நினைத்தேன்.
பயமுறுத்தி பரிசை வாங்கிரலாம்னு பார்க்கிறீங்களா? நாங்க விடுவமா.
தல,
உங்க வழக்கமான பேய் கதை.. எப்பவும் போல விறுவிறுப்பு... super
ஆனா நச்சுனு ஒரு திருப்பம் இல்லையே தலை.. ரொம்ப ஈசியா யூகிக்க முடின்ஞ்சது..
ஒரு 5 நிமிஷத்துல இப்டி பயமுறுத்திட்டேங்களே...நன்றாய் இருந்தது கதை
தி ரிங் படத்தில் டிவியில் இருந்து வரும் பேய். இங்கு டேப் டாப்பில் இருந்து வரும் கை. :)
Post a Comment