Saturday, December 29, 2007

கோபக்கார சுனில் கவாஸ்கரின் நடத்தையும் 1981 ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டமும்

1981 ஆம் ஆண்டு, இடம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0 - 1 என இந்தியா பின் தங்கி இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தின் நான்காவது நாள், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி பந்து வீச வேகமாக ஓடி வருகிறார். கவாஸ்கர் தடுத்தாட முயற்சிக்கிறார். விக்கெட் முன் கால் என்ற வகையில் முறையில் நடுவரிடம் முறையிடப் படுகிறது. நடுவர் ரெக்ஸ் வொயிட்ஹெட் கவாஸ்கர் ஆட்டமிழந்தார் என கைத்தூக்க , பந்து மட்டையில் பட்டது என புலம்பிக் கொண்டே மைதானத்தில் வெளியேறிக் கொண்டு இருக்கையில் திடிரென திரும்பி மறுமுனையில் நின்ற மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சேத்தன் சௌகானையும் அழைத்துககொண்டு மைதானத்தில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் அப்போதிய அணி மேலாளர் விங் கமாண்டர் துரானி மைதானத்தின் எல்லைக்கு வந்து கவாஸ்கரை சமாதனப் சமாதனப் படுத்தி சேதன் சௌகானை திரும்ப அனுப்பி ஆட்டத்தை தொடரச் செய்தார்.இந்த ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்தது எனக் கூறலாம். 324 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அன்றிரவு நடந்த ஒரு விருந்தில் இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றி ஏளனமாக ஆட்டக்காரர்களின் முன்னிலையிலேயே பேசப்பட்டதாம். காயம் காரணமாக பந்து வீச முடியுமா என்று சூழலில் இருந்த கபில்தேவ் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு பந்து வீச ஆரம்பித்தார். Cricket is a glorious game of uncertainities என்பது மற்றொரு முறை நிருபணமானது. ஆம் கபில்தேவி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 1- 1 என்று தொடரையும் சமன் செய்தது.
இந்த ஆட்டத்தின் விபரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

நீ அப்படி நடக்குமா? அவனவனே தன் சொந்த இருப்புக்காக ஆடுகின்றான், இன்றைய டெஸ்ட் மேட்சில் ராவிட் ஆடிய ஆட்டம் எல்லாம் ஒரு ஆட்டமா? இந்திய அணிக்குத் தேவை இன்னொரு கவில்தேவ்.

said...

வினையூக்கி,

மறக்கக் கூடிய ஆட்டமா அது ???

கபிலும், காவ்ரியும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்த ஆட்டமல்லவா ?

அதுவும், அந்த கிரெக் சாப்பலின் "clean bowled" கண்ணிலேயே நிற்கிறது :)

said...

Kind of indian self consolation

said...

1. முதல் இன்னிங்க்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பயனுள்ள ஓட்டமும் எடுத்த குண்டப்பா ராவ் விஷ்வநாத்தும், ஆஸ்திரேலிய வீரர்களை அவ்வளவு எளிதில் ரன் எடுக்க விடமுடியாதபடி கச்சிதமாகப் பந்துவீசிய திலீப் தோஷியும் கூட பாராட்டுக்குறியவர்கள்.

இரண்டாவது இன்னிங்க்ஸில் சுனில் கவாஸ்கருக்கும் சேத்தன் சௌஹானுக்குமான 165 ரன் அபாரமான பார்ட்னர்ஷிப்தான் இந்தியாவை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டுவந்தது என்றால் மிகையாகாது.

அப்புறம், கபில் தேவ் பந்துவீச்சு வரலாறு! இழந்த பெருமையை மீட்டெடுத்த கபில், கிரிக்கெட் ரசிகர்கள் இதயவானில் என்றும் நிலைத்திருக்கும் நட்சத்திரம்.

***

2. கொல்கத்தாவில் (2001) follow-on வாங்கி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில், திராவிட்-லக்ஷமண் (376 ரன் பார்ட்னர்ஷிப்) ஜோடி சேர்ந்து நமக்கு ஈட்டுத்தந்த வெற்றியும் அத்தகையதே;

http://www.cricinfo.com/db/ARCHIVE/2000-01/AUS_IN_IND/SCORECARDS/AUS_IND_T2_11-15MAR2001.html

3. சென்னையில் நடந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது; இதிலும் லக்ஷ்மண்-திராவிட் பங்கு பாராட்டுதலுக்குறியது.

http://www.cricinfo.com/db/ARCHIVE/2000-01/AUS_IN_IND/SCORECARDS/AUS_IND_T3_18-22MAR2001.html

4. பின்னர், அடிலைட்டில் (2003), இதே ஜோடி மறுபடியும் ஆஸ்திரேலியாவிற்கெதிராக ஒரு மகத்தான வெற்றியைப் பெறக்காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://content-www.cricinfo.com/india/engine/match/64060.html

இன்று கூட, 2ஆவது விக்கெட்டிற்கு இதே இருவர் ஜோடி சேர்ந்து ஆடி குவித்த 175 ரன்கள் ஆட்டத்தின் போக்கினைக் கொண்டு பார்க்கும் போது ரொம்ப முக்கியமானது.

said...

நிச்சயமாக வந்தியத்தேவன் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஆல்ரவுண்டர் தேவை... முன்பு அகர்கர் எதிர்பார்க்கப்பட்டார்.. இப்போ இர்பான் பதான் ...

ஆமாம் என்றென்றும் அன்புடன் பாலாசார், செம பவுல்ட் அது.

பாபு கிட்டத்தட்ட அப்படித்தான் பழைய ஆட்டங்களை பார்க்கையில் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
.

ஆமாம் பாரதீய நவீன இளவரசன் அருமையான துவக்க ஆட்டம் அது.. இணையாட்டங்களில் திராவிட் லக்ஷ்மன் எப்போதும் டாப்