Wednesday, September 05, 2007

உத்தப்பா அதிரடி , இந்தியா திரில் வெற்றி83/4 என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்து, ஓவைஸ் ஷா வின் சதத்துடன், இங்கிலாந்து ஆட்டக்காரர் மசாக்ரனஸ், இந்தியாவின் யுவராஜ் வீசிய ஐம்பதாவது ஓவரில் கடைசி ஐந்து பந்துகளையும் சிக்ஸருக்கு வீசியபின் உற்சாகத்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்தியாவின் முதற்விக்கெட்டை வீழ்த்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இந்திய அணியின் ஸ்கோர் 150 ஆக இருக்கும்பொழுது கங்குலி தனது அரைசதத்திற்குப் பின் ஆட்டமிழந்தார். இப்போதெல்லாம் கங்குலி அடிக்கடி அரைசதம் அடிக்கிறார். இந்த வருடத்தில் இவர் அடிக்கும் 11வது அரைசதம் இது. (கிரெக் சாப்பல் சார், நீங்க எங்க இருக்கீங்க).

டெண்டுல்கரின் அதிரடி ஆட்டம் அவரின் ஆரம்பகால ஓபனிங் பேட்டிங் நினைவுப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது. மீண்டும் ஒரு முறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார். மத்திய வரிசை ஆட்டக்காரர்கள் ரன் விகிதத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் நோக்கில் அடித்து ஆடி ஆட்டமிழக்க, இந்தியாவின் ஸ்கோர் 234/5 41வது ஓவரில் என்றானது.

தோனியும் உத்தப்பாவும் அடுத்து 60 ரன்களை சேர்க்க, 294 ரன்கள் இருந்தபோது தோனியும் ஆட்டமிழந்தார். அதனையடுத்து அகர்கரும், ஜாகிர்கானும் ரன் அவுட் ஆக, கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் உத்தப்பா அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியைத் தேடி தந்தார். உத்தப்பா 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இருந்தார்.வெற்றிக்குப்பின்னர், 30 ரன்கள் கடைசி ஓவரில் வாரி வழங்கிய யுவராஜ் முதல் ஆளாய் மைதானத்திற்கு ஓடிவந்து உத்தப்பாவை ஆரத்தழுவிக் கொண்டார். (ஏதோ ஒரு ரசிகர் தான் ஓடி வருகிறார் என்று நினைத்த ஒரு பாதுகாவலர் சிறிது தூரம் அவரின் பின்னால் சிறிது தூரம் ஓடிவந்தார்)

ஆட்டத்தின் ஸ்கோர்கார்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

ஆட்டநாயகனாக டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடர் 3-3 என்று சமனிலை அடைந்துள்ளது. அடுத்த ஆட்டம் வருகிற எட்டாம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

36 பின்னூட்டங்கள்/Comments:

said...

கடைசி இரண்டு ஓவரில்.அடுத்த முனையில் 2 விக்கெட் விழுந்தும் ஒத்த ஆளா நின்னு கலக்கிய ராபினுக்கு வாழ்த்துக்கள்/நன்றி. நன்றாக வந்திருக்க வேண்டிய வீரர், ஒரு வருஷம் கண்டுக்காம விட்டுட்டாங்க. இவர்தான் Tendulkarஐ replace பண்ணப்போறவர். (ஒரு நம்பிக்கைதான்)

said...

ஆமாம் இளா,
அந்த கடைசி பவுண்டரியை ஒரு நடை நடந்து வந்து, மிட் ஆப் திசையில் செலுத்தி அடித்த அடி, நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். ம்ம்ம் நம்பிக்கைகள் வீண் போவதில்லை. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிப் பழக்கப்பட்டுபோன உத்தப்பா 7 வது வீரராக களம் இறங்கி இக்கட்டான சூழ்நிலையில் கரை சேர்த்தவிதம் அருமை. பாராட்டத்தக்கது. சில பவுண்டரிகள் ஸ்டம்பை தவறிப்போனாலும், அதுதானே கிரிக்கெட் ஆட்டம், கிர்க்கெட்டிலும் வாழ்க்கையிலிம் No ifs and buts.

said...

உத்தப்பா போல் பல வீரர்களை வெளியே உள்ளனர். கிழவர்கள் உள்ளே வர விடாமல் செய்கின்றனர்.

மற்றபடி ஆஸ்தேரிலியாவிற்கு எதிராக இந்த கிழம் கங்குலி, மற்றொரு கிழம் டென்டுல்கர், தற்போது விளையாடி, அதிகம் வேண்டாம், ஒரு 25 ரன் எடுக்கச் சொல்லுங்கள்..

ஒத்துக் கொள்கிறேம் அவர்கள் வீரர்கள் என..

எரிச்சலைக் கிள்ப்பாதீங்க..

said...

நல்ல ஆட்டம் , ஆனால் இன்று கண்டிப்பாக இந்தியாதான் கெலிக்கும் 3 -3 என்று கொண்டு வந்தால் தான் சுவாரசியம் இருக்கும் என எதாவது "ஏற்பாடு" நடக்கலாம் என நான் கணித்து வைத்திருந்தேன், (இப்படி சொல்வதே எல்லாருக்கும் பொழப்பா போச்சுனு சொல்லக்கூடாது)

//மற்றபடி ஆஸ்தேரிலியாவிற்கு எதிராக இந்த கிழம் கங்குலி, மற்றொரு கிழம் டென்டுல்கர், தற்போது விளையாடி, அதிகம் வேண்டாம், ஒரு 25 ரன் எடுக்கச் சொல்லுங்கள்..//

சிவபாலன் இது தான் தவறான அனுகு முறை என்பது , இங்கிலாந்து போன்ற அதிகம் சுவிங்க் ஆகும் நாட்டில் துவக்கத்தில் ரன் எடுப்பது எளிது அல்ல.கங்குலியோ , டெண்டுல்கரோ ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரன் எடுக்காதவர்களும் அல்ல, இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்வதில் சச்சின் தான் முன்னனி வகிக்கிறார். அதே போல அவர்களை நக்கல் செய்வதில் கங்குலி தான் முன்னனி வகிக்கிறார்.இந்த இருவரும் அதிக மேட்ச்களில் ஆடியவர்கள் என்பதால் அவர்களின் சிறு தோல்வியும் பெரிதாக தெரிகிறது.

உத்தப்பா இளைஞர் , வேகம் கொண்டவர் தான் , இவரே பெர்முடா அணிக்கு எதிராக உலக கோப்பையில் சொதப்பினாரே. அதை வேறு எவரும் செய்திருந்தால் என்ன சொல்வீர்கள் பெர்முடாக்கு எதிராக கூட ரன் அடிக்க தெரியவில்லை, ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க மாட்டீர்கள்?

புகழ் பெற்றவர்கள் தவறு செய்தால் அதிகம் கவனிக்கப்படும் என்பதை மெய்ப்பிக்கிறீர்கள்!

Anonymous said...

periya comment kudukkure.Aaramba kaala tendulkara paathirukkiya?

said...

வவ்வால் சொன்ன கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

யுவராஜின் கடைசி ஓவரை பார்க்க பார்க்க எனக்கு டிராவிட் மீதுதான் பயங்கர கோபம் கோபமாய் வந்தது.

அந்த கடைசி ஓவரில் 5 சிக்ஸ்ர்கள் அடித்ஹ்டாலும் மொத்த ஓவரே 2 1/2 நிமிடங்களில் முடிந்து விட்டது. இரண்டு சிக்ஸர்களை அடித்த உடன் ஏதேனும் சின்ன ஆலோசனையையாவது வந்து சொல்லி இருக்கலாம்.

அதை விட்டு விட்டு நீ போடு ராசா என்று சொல்லி விட்டு ஏதோ சம்பந்தமே இல்லாத மாதிரி ஒதுங்கிக் கொண்டார்.

மசாக்ரனஸ் இந்த மேட்சில் மட்டுமல்ல இதற்கு முன்பு 50 அடித்த அந்த மேட்சிலும் கவனித்தாலே நன்றாகத் தெரியும் அவர் ஓவர் பிட்ச் பந்துகளை சிக்ஸருக்கு எளிதில் விரட்டக் கூடியவர் என்றும்,அதே சமயம் அவரால்
ஷாட் பிட்ச் பந்துகளை அதே அளவு எளிதாய் அடிக்க முடியாது என்றும் தெரியும்.

போன மேட்சு அவர் அவுட்டானதும் ஷாட் பிட்ச் முறையில் போடப் பட்ட பந்தில்தான். இந்த மேட்சிலும் அந்த முறையில் போடப் பட்ட ஒரு பந்தில் ஒரு கேட்ச் மிஸ் என்று நினைக்கிறேன்.

ஒரு கேப்டனாக கண்டிப்பாக டிராவிட் நடுவில் யுவராஜிற்கு வேறு ஏதேனும் ஆலோசனைகள் வழங்கி இருக்க வேண்டும்.

எப்படியோ உத்தப்பா, காம்பீர், சச்சின், கங்குலியால் இந்தியா வெற்றி பெற்றது.

அதே சமயம் என்னைப் பொறுத்த வரை தோனி பயங்கரமாய் சொதப்பினார் என்றுதான் சொல்வேன். அவரின் பவுண்டரிகளும் சரி ஏதோ ஏதேச்சையாய் பட்டு எப்படியோ போனவையே தவிர திறமையான ஷாட்கள் அல்ல. கடைசி வரை அவர் திணறிக் கொண்டுதான் இருந்தார்.

said...

//இப்போதெல்லாம் கங்குலி அடிக்கடி அரைசதம் அடிக்கிறார். இந்த வருடத்தில் இவர் அடிக்கும் 11வது அரைசதம் இது. (கிரெக் சாப்பல் சார், நீங்க எங்க இருக்கீங்க).//

அதாவது, கொஞ்சம் நோட் பன்னினீங்கன்னா தெரியும். 50 அடித்து முடித்தவுடன் தன் கடமை நிறைவேறிவிட்டது என்று தூக்கி அடிக்க ஆரம்பித்துவிடுவார், வேண்டுமென்றே அவுட் ஆக. காரணம், பிஸிக்கல் ஃபிட்னஸ் சுத்தமாக இல்லை. அவரால் ரொம்ப நேரம் களத்தில் இருக்க முடிவதில்லை. வயதாகி விட்டது. நேற்று 50 அடித்தவுடன் என் ரூம்மேட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், "பார் கங்குலி இனி மேலே தூக்கி அடித்து அவுட்டாகிவிடுவான்" என்று. மிகச்சரியாக செய்தான் கங்குலி.

said...

ஹும்....என்ன சொல்ல...நான் மேட்சே பாக்க முடியல ...வலையில் மாட்ச் ஒளிபரப்பபடுகின்றதா..தெரிந்தவர்கள்..சொல்லுங்களேன்

said...

முழுக்க முழுக்க திராவிட்டின் தவறுகளால் த்ரில்லர் ஆன ஆட்டம்...

1. 50 வது ஓவரை யுவராஜ் சிங் கிடம் தந்தது.
2. 3 வது ஆட்டக்காரராக கம்பீரை இறக்கியது.
3. டிராவிட்டின் விக்கெட்

முதலாவது முடிவால் 20 ஓட்டங்கள் அதிகமானது.

இரண்டாவதால் சச்சினின் விக்கெட் போனது...சச்சின் நிற்க முடியாமல் திணறுகிறார் அப்போது கம்பீர் என்ன செய்திருக்கவேண்டும்?தான் அடித்து விளையாடி அவருக்கு அழுத்தம் தாராமல் இருக்கவேண்டும்.கிட்டத்தட்ட 2 ஓவர்கள் வீணக்கிவிட்டு கடைசி பந்தை சச்சினுக்கு தருகிறார்,அப்போது சச்சின் அடித்து ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,அப்படியே ஆடி அவுட் ஆகிறார்.கம்பீர் வந்தவுடன் அடித்தாடக் கூடிவர் அல்ல என்றால் பவர்பிளே சமயத்தில் அவரை இறக்கியது மாபெருமெ தவறு.கம்பீருக்கு பதிலாக உத்தப்பாவையோ அல்லது தானோ இறங்கி இருந்தால் சச்சின் இன்னும் அடித்திருப்பார்.

டிராவிட்டின் சாட் செலெகசன், அவர் அவுட்டான பந்து அகலப்பந்து அடிக்காமல் விட்டிருந்தாலே ரன் கிடைத்திருக்கும்.

தோனி, சுத்த ஹம்பக் இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ரன் குவிக்கும் பிட்சுகளில் விளையாட மட்டும்தான் லாயிக்கு.

Anonymous said...

இந்திய அணி அவ்வப்போது களத்தில் நல்லா ஆடினாலும், பேப்பர்ல எழுதிப்படித்தால் மிகச்சிறந்த அணி.

எனக்கு தெரிஞ்சு அகர்கர் விக்கெட் எடுக்கிறதவிட ரன் அதிகமாக தருவதுதான் வழக்கம். அவர்னால கைவிட்டுப்போன மேட்ச் ஏராளம்..

ஏன் பெருசுங்க சச்சின்,ட்ராவிட்,கங்குலி சரியாக விளையாடம கைவிட்டுப்போன மேட்ச் ஏராளம்.

தனிப்பட்ட சாதனைகள் டீம்க்கு எப்போதுமே வெற்றி தேடித்தராது..

அடுத்த மேட்ச்சுல பாருங்க....

said...

//
1. 50 வது ஓவரை யுவராஜ் சிங் கிடம் தந்தது.
2. 3 வது ஆட்டக்காரராக கம்பீரை இறக்கியது.
//

ஆஹா ப்ரியன்,

எப்படி இப்படி சொல்லுறீங்க? இதெல்லாம் கணிக்க முடியாதது.
1) மஸ்கரணாஸ் 5 சிக்ஸர் அடிப்பார்ன்னு யாரு கண்டது. ஜிம்பாப்வேயில் கூட மரில்லியர் அடி அடின்னு அடிச்சு ஒரு மாட்ச் ஜெயிச்சு கொடுத்தாரே, அது போல இதெல்லாம் எப்போதாவது நடக்கக்கூடாதது. என்ன 5 சின்ஸும் லெக் திசையில். அதை பார்க்கும் பொழுது யுவராஜின் தவறு தெரிகிறது.

2) கம்பீர் பந்தை வீணடித்தது சகிக்கமுடியவில்லை தான். ஆனால், சச்சினால் ஓட முடியாமல் தான் அவன் அவ்வாறு செய்திருக்கிறான்.

//கிட்டத்தட்ட 2 ஓவர்கள் வீணக்கிவிட்டு கடைசி பந்தை சச்சினுக்கு தருகிறார்,அப்போது சச்சின் அடித்து ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,அப்படியே ஆடி அவுட் ஆகிறார்.//

இது சச்சினும் கம்பீரும் பேசி வைத்துக்கொண்டு பந்தை வேணடித்தார்கள். காரணம், சச்சினின் தசை பிடிப்பு.

said...

எப்பொழுதும் சுலபமாக ஜெயிக்கக்கூடிய பல பந்தயங்களை சொதப்பி மிகவும் சிரமத்துடன் ஜெயிப்பது (அதிக முறை தோற்றிருக்கிறோம் என்பதே உண்மை) நம் அணிக்கு வாடிக்கை. இந்த முறையும் அப்படிதான் ஆகும் என தோனியின் திணறலான ஆட்டத்தை பார்க்கும்போது நினைத்தேன். தோனி அவுட் ஆன அதே முறையில் உத்தப்பாவும் கடைசி பந்துக்கு முதல் பந்தை விக்கிட் கீப்பருக்கு மேல் தூக்கி அடித்தார். அவரது அதிர்ஸ்டம் அது சரியாக மட்டையில் பட்டு பவுண்டரிக்கு போய் விட்டது. ஆனால் அதை அவர் திட்டமிட்டே அடித்தது இதில் குறிப்பிடத்தக்கது. அப்பொழுதே நம் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
அடுத்த பந்தை கொஞ்சம் முயன்றிருந்தால் தடுக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் பந்தின் வேகம் தடுக்க முடியாமல் செய்துவிட்டது. அதை தடுத்திருந்தாலும் வெற்றி இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் என்பதே என் கணிப்பு. ஏனென்றால் கடைசி வரை உத்தப்பா மிகவும் நம்பிக்கையுடன் உணர்ச்சிவசப்படாமல் ஆடினார். இங்கிலாந்திலும் இவரைபோல ரவி பொப்பாரா ஆடுகிறார்.

அடுத்த பந்தயம் இதேபோல் விறுவிறுப்புடன் இருக்கவேண்டும்.

எதிர்ப்பார்ப்போம்.

said...

நான் சொன்ன கருத்து இவ்வளவு எதிர் கருத்தா?

வவ்வால்,

நான் சொல்லிய கருத்தை மீன்டும் படித்துப்பாருங்கள்..

தற்பொழுது என சொல்லியிருக்கிறேன்..

அவ்வாறு தற்பொழுது, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரன் எடுத்தால் ஒத்துக்கொள்கிறேன் என்று தான் சொல்லியிருக்கிறேன்.. (காவஸ்கர் கூட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்.. பேசாமல் அவரை இன்னும் வைத்திருக்கலாம்.. அவருடைய பழைய ரெக்கார்ட் பார்த்து வைத்துக் கொண்டே இருக்கலாம்.. இன்னும் ஒரு 100 வருடத்திற்கு.. என்ன சொல்லறீங்க.. Ha Ha Ha..

அட இவ்வளவு பேசறீங்களே.. அவமானத்துடன் உலக்க்கோப்பையிலிருந்து வெளியேறியது இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? Hi Hi Hi

ஓ.. நாமெல்லாம் இந்தியர்கள் அல்ல.. அதனால் அப்படித்தான்..Ha Ha Ha..

அட..ஏங்க..நீங்க இன்னும் கடுப்பு ஏத்திறீங்க..

இவனுகளுக்கு ஆப்பு அடிக்கவே ஐசிஎல் உருவாகிட்டு இருக்கிறது. அப்பறம் பாருங்க..

said...

சிவபாலன்,
//அட இவ்வளவு பேசறீங்களே.. அவமானத்துடன் உலக்க்கோப்பையிலிருந்து வெளியேறியது இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? Hi Hi Hi//

உலககோப்பை அனைத்து ஆட்டங்களிலும் ஆடியவர் தான் உத்தப்பா எத்தனை ரன் அடித்தார் , பெர்முடாவுக்கு எதிராக லெவ்ரக் என்ற குண்டனிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் அவுட், அதை மறந்து விட்டீர்களா?

வயதாகிவிட்டது தான் , ஆனால் இப்போதும் இங்கிலாந்தில் ரன் அடிப்பது கடினம் தான் அது என்ன ஆஸ்திரேலியா தான் தர நிர்ணயமா, மற்ற நாட்டு வீரர்களும் திணறுவார்கள் தானே!

உத்தப்பாவை ஓராண்டாக கண்டுக்காமல் எல்லாம் இல்லை, உலகக்கோப்பையில் சொதப்பிய பிறகும் அவரை கண்டுக்கொண்டதே திராவிட்டின் மாநிலம் என்பதால் தான்!

//வயதாகி விட்டது. நேற்று 50 அடித்தவுடன் என் ரூம்மேட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், "பார் கங்குலி இனி மேலே தூக்கி அடித்து அவுட்டாகிவிடுவான்" என்று.//

சீனு ,
நல்லாதான் சொல்றிங்க, இந்த பெல் கூட 50 அடிச்சதும் அவுட் ஆகிடுறார் :-)) உத்தப்பா இதுவரை ஆடிய எல்லா மேட்சிலும் 50 க்கு அடித்ததும் அவுட் ஆகிடுவார் , அப்போ வயதாகிவிட்டதா? பெரும்பாலோர் 50க்கு பிறகு, அல்லது 100க்கு பிறகு அவுட் ஆவார்கள் , காரணம் ரிலாக்ஸ் ஆகிவிடுவார்கள் 50 அடிச்சாச்சு என்று!

said...

வவ்வால்

நான் உத்தப்பாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதைவிட இளைஞர்கள் அதிகம் வேண்டும் என்கிறேன். அதுதான் என் ஆதங்கம். இவ்வளவு நான் ஆடியிருக்கும் சச்சின், கங்குலி, டிராவிட், மூவரும் உலகக்கோப்பை படுதோல்விக்குப் பிறகு விலகிவிடுவார்கள் அல்லது விலக்கப்படுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.

நம் அணியை படு கேவலமாக தோல்வியுறச் செய்த பின் இந்த கிழவர்களின் ரெகார்ட்கள் எரிச்சலைத்தான் வரவைக்கிறது.

இளம் வீரர்களைப் போட்டால் ஒரு வேளை வரும் உலகக்கோப்பையில் அடுத்த ரவுண்டுக்காவது போகலாம்..

உலகக்கோப்பை மட்டுமா ஆட்டம் என்று இந்த கிழவர்கள் சப்பை கட்டு கட்டினார்கள் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

Anonymous said...

அடுத்த மேட்ச்ல சச்சின் 20க்குள்தான்.. பெட் கட்றீங்களா..

said...

சவுரப் கங்குலி 2007 ஆம் வருடத்தில்,

ஆடிய ஆட்டங்கள் : 22
பேட்டிங் வாய்ப்பு : 21
மொத்த ரன்கள் : 1009
அரைசதங்கள் : 11
சராசரி : 53.10

இதில் 14 ஆட்டங்கள் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அரை சதங்கள் 8
சராசரி 64.83

டெண்டுல்கர் 2007 ஆம் வருடத்தில்
ஆடிய ஆட்டங்கள் : 20
மொத்த ரன்கள் : 858
சதம் : 1
அரைசதங்கள் : 9
சராசரி : 50.47
விக்கெட்டுகள் : 9
கேட்சுகள் 3
இதில் 11 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. அதில் 5 அரைசதங்களும் ஒரு சதமும் அடித்துள்ளார்.
சராசரி :62.00

said...

ராகுல் திராவிட் 2007 ஆம் ஆண்டில்


ஆடிய ஆட்டங்கள் 24
மொத்த ரன்கள் : 772
அரை சதங்கள் 8
சராசரி 48.25
இதில் 15 ஆட்டங்கள் வெற்றி
அதில் 4 அரைசதங்கள்
சராசரி : 57.37

said...

வினையூக்கி ,
சரியா சொன்னிங்க, சீனியர் வீரர்கள் மீது ரசிகர்கள் அளவுக்கதிகமா கொண்டிருக்கும் எதிர்பார்ப்பே இப்படி எல்லாத்துக்கும் அவர்கள் காரணம் என எண்ணவைக்கிறது.

இவர்கள் தவிர மற்றவர்களும் நன்றாக ஆடவேண்டும் , இல்லை எனில் எப்படி வெற்றிப்பெறமுடியும்.

நமது பந்துவீச்சு பலவீனமாய் இருப்பது பல சந்தர்ப்பங்களிலும் காலை வாறுகிறது, கூடவே வெண்ணை தடவிய பீல்டிங்க், அப்புறம் பேட்டிங்கில் என்ன அடித்தாலும் என்ன பயன். அனைத்து பிரிவிலும் சமமான திறமை இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா போல வெற்றிகரமாக இருக்க முடியும்.

நாம் பேட்டிங்கையே அதிகம் சார்ந்து இருக்கிறோம்!

said...

வினையூக்கி

ஒன்னு செய்யலாங்க.. பேசாம..இந்த ரெக்கார்ட்களை இந்த கிழவர்கள் நெத்தியில் ஒட்டிவிட்டரலாம்.. அதைப் படித்துப் பார்த்து எதிர் அணியினர் கொஞ்சம் இலகுவாக பந்துவீசுவார்கள்..

எப்படி நம்ம ஐடியா?

நீங்க என்னை கடுப்பின் உச்சிக்கே கொண்டு செல்ல வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டுள்ளது போல் தெரிகிறது.


ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே, டேட் பூன், அலன் பார்டர்..இன்னும் சொல்லிட்டே போலாம்... அவர்கள் விளையாடிய கடைசி ஆண்டின் ரெகார்ட் எடுத்துப் போடுங்க.. அதையும் தெரிந்து கொள்வோம்..

கடுப்புடன்
சிவபாலன்

said...

2007 ஆம் ஆண்டை பொருத்தவரை சீனியர் வீரர்கள் டெண்டுல்கர், கங்குலி மற்றும் திராவிட் மூவரும் பொறுப்பாகவே ஆடியுள்ளனர் என்பது இந்த புள்ளி விவரங்களின் மூலம் தெளிவடைகிறது.

said...

நீங்க கொடுத்த ரெக்கார்ட் எந்த எந்த அணிகளுக்கு இடையே என சொல்ல முடியுமா?

said...

ஆலன் பார்டர் ஆட்டத்திலிருந்து தனது 37 வது வயதில் ஓய்வு பெற்றார்.
ஸ்டீவன் வாவ் டெஸ்ட் போட்டிகளில் 39 வது வயதிலும், ஒரு நாள் போட்டிகளில் இருந்து 37 வயதிலும் கிட்டத்தட்ட "கட்டாய" ஓய்வு . பெற்றார். டேவிட் பூன் 36 வது வயதிலும் ஷேன் வார்ன் 37 வயதிலும் ஓய்வு பெற்றனர். இவர்களுடன் ஒப்பிடும்போது "இளைஞர்கள்" கங்குலி , திராவிட் மற்றும் டெண்டுல்கர் குறைந்தது அடுத்த உலகக் கோப்பை வரையிலாவது விளையாடுவார்கள்

said...

சிவபாலன் சார்,

இந்த ரன்கள் கீழ்கண்ட அணிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டவை

இலங்கை
மேற்கிந்திய தீவுகள் அணி
ஸ்காட்லேந்து
அயர்லாந்து
இங்கிலாந்து
பங்களாதேஷ்
தென்னாப்பிரிக்கா
பெர்முடா
ஆப்பிரிக்கா 11

said...

இல்லை .. என் கேள்வி.. நீங்க சொன்னீங்களே அந்த சூப்பர் டூப்பர் 50s அது எந்த அணிக்கு எதிராக என சொல்லுங்க..

நம்ம கிழவர்களின் திறமையை எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும்..

said...

ஏங்க.. இன்னைக்கு ஸ்டீவ் வாக் விட்டா சர்வசாதரணமா அந்த அணியை ஜெயிக்க வைப்பார்..

ஆனால் நம்ம கிழவர்கள்.. மைதானம் சரியில்லை..இன்னும் 25 ரன் இருந்தால் ஜெயித்திருப்போம்.. என கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

ஆனால் ஒன்னு, உங்களை மாதிரி நல்ல ரசிகர்கள் இருக்கும் வரை இந்த கிழவர்கள் 2100 வரைக்கும் கூட விளையாடலாம்.. என்ன சொல்லறீங்க..

said...

சவுரப் கங்குலி யின் அரை சதங்கள் 2007 ஆம் ஆண்டில்

இங்கிலாந்து - 3
மேற்கிந்திய தீவுகள் அணி - 2
இலங்கை - 2
ஆப்பிரிக்க அணி - 1
பெர்முடா - 1
அயர்லாந்து - 1
பங்களாதேஷ் - 1

Anonymous said...

vinaiookki, dont waste your time by replying such things. lets celebrate this victory.

Anonymous said...

hahahaha aarambpichutaangayaa aarambichutangaa....doooi indiyapa payluhalee inum cricket a marakalaya neenga...hahahaha world cup la vaanguna adi kulir vittu poochaa???hahaha

said...

சிவபாலன்

வயது ஒரு பொருட்டல்ல..... யார் அணியில் அதிகம் ஒட்டங்கள் எடுக்கிறார்கள் என்பதே முக்கியம்...

அணிக்கு 6 (அல்லது 7) batsmen தேவை... அதற்கு இந்தியாவில் உள்ள சிறந்த 6 (அல்லது 7) batsmen தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.... அவர்க்ள் எந்த வயதானாலும் சரி....

//ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே, டேட் பூன், அலன் பார்டர்..இன்னும் சொல்லிட்டே போலாம்... அவர்கள் விளையாடிய கடைசி ஆண்டின் ரெகார்ட் எடுத்துப் போடுங்க.. அதையும் தெரிந்து கொள்வோம்..//

கடைசி வருடத்தில் அவர்களை விட சிறந்த batsman அந்த அணியில் இருந்தார்கள்....

நமது அணியில் இன்னும் அப்பிடி ஆள் கிடைக்கவில்லை.....

Has any other batsmen (Kaif, Yuvraj, Sehwag, Gambhir etc able to outperform Sachin and Sourav)... Not yet...

Then what is the logic behind your suggestion asking them to keep these guys out.

Take away the contribution of Sachin and Sourav from this series and you know that it would have been 6-0 !!!

said...

டாக்டர்

என்ன இப்படி சொல்லிடீங்க..

வாய்ப்பே கிடைக்காமல் எத்தனை பேர் வெளியே இருக்காங்க.. அவர்களுக்காத்தான் நான் பேசுகிறேன்.

வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும்.

முதல் வரிசை ஆட்டக்காரர்கள் தான் அதிக ரன் எடுக்கவேண்டும். அதனால் அவர்கள் (கிழவர்கள்) பங்களிப்பு அதிகமாக தெரிகிறது அவ்வளவே..

உண்மையில் இந்த கிழவர்கள் தொடர்ந்து அணியில் இருப்பதற்கு காரணம் அவர்களின் திறமையினால் மட்டும்தான் என நீங்களும் மற்றவர்களும் நம்பினால் நான் வாதம் செய்ய ஒன்றுமில்லை.

பாவம் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள்..

// world cup la vaanguna adi kulir vittu poochaa???hahaha //

ரீப்பிட்டே..

அவ்வளவே..

said...

புதிய மட்டையர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், அந்த புதியவர், அணியில் இருக்கும் மட்டையர்களில் குறைந்த ஒட்டங்களை எடுப்பவரை விட அதிகம் திறமைசாலியாக இருக்க வேண்டும். (அணியில் இருக்கும் மட்டையர்களில் அதிகம் ஒட்டங்களை எடுப்பவரை விட அதிகம் திறமைசாலியாக கூட இருக்கலாம்.)

That means, you should have a person who is the best batsman in India, or at least the 6th best batsman in India

//வாய்ப்பே கிடைக்காமல் எத்தனை பேர் வெளியே இருக்காங்க.. அவர்களுக்காத்தான் நான் பேசுகிறேன்.
வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும்.//

சரிதான்...... இதை நான் மறுக்கவில்லை.....


ஆனால் புதிய மட்டையர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், யாரை நீக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல்


1. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் அதிக ஒட்டங்களை எடுப்பவர்
2. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் குறைந்த ஒட்டங்களை எடுப்பவர்
3. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் வயதானவர்
4. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் இளமையானவர்
5. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் அதிகம் சாப்பிடுபவர் 6. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் கொஞ்சம் சாப்பிடுபவர்
7. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் எடை அதிகமானவர் 8. அணியில் இருக்கும் 6 மட்டையர்களில் எடை குறைவானவர்

இப்படியாக நீங்கள் எந்த விதமாக வேண்டுமாணாலும் காரணம் சொல்லலாம். ஆனால் 1-8ல் எது சரி என்று நினைக்கிறீர்கள் ????

said...

இதில் ஒரு முக்கியமான கேள்வி -
சச்சின் எப்பொழுது ஓய்வு பெற வேண்யும் (அல்லது அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்)?

சச்சினை விட ஒரு திறமைசாலி வந்தவுடன் என்ற விடை (சரி போல் தோன்றினாலும்) தவறு. அது நடக்காமல் கூட போகலாம் (Dave Houghton மாதிரி)

(வயதான) சச்சினை விட அதிகம் ஒட்டங்களை எடுக்க வல்ல ஒரு (வயதான / இளமையான) மட்டையர் அணிக்கு வெளியில் காத்திருக்கும் போது சச்சின் எப்பொழுது ஓய்வு பெற வேண்யும் (அல்லது அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்)

ஒருவர் அணியில் நீடிப்பதற்கு அவரது ஆட்டத்தை மட்டும் பார்க்க வேண்டுமே தவிர வயதை அல்ல என்பது என் கருத்து.

said...

Team should be selected from the best 11 available in the country

Reward or Punishment is a bad

By reward, we mean selecting an individual for "some reason" (past performance) when we have a better individual outside 11

By punishment, we mean omitting an individual for "some reason" (age), when we don't have a person who can match him

Indian selectors have done the first mistake for a long time

And now it seems you are asking for the second mistake

It is agreed that Sachin of Today is not the sachin of yesterday..... but are there 11 players (or 5 batsman) who can play better than him ..... I don't think so.

Take his performance from Jan 1 2006 till date

Matches 36
Runs 1486
Highest 141*
BatAv 47.93
100 3
50 12

Even if you want to see the recent performance, see the figures from 2007 till date

Matches 20
Runs 858
Highest 100*
BatAv 50.47
100 1
50 9

What is the justification in asking him to retire "TODAY" when he is the best batsman in the team

said...

/*1) மஸ்கரணாஸ் 5 சிக்ஸர் அடிப்பார்ன்னு யாரு கண்டது.*/

மெயின் பவுலர்களுக்கு இன்னும் ஓவர்கள் மிச்சமிருக்கும் சமயம் பகுதிநேரி பவுலரான யுவராஜூக்கு தந்தது தவறில்லையா?

மஸ்கரணாஸ் - 2 வது ஆட்டத்தில் 50 அடித்தவர் அது தெரியாதா டிராவிட் க்கு?!

அடுத்தடுத்து சிக்ஸர் போகும்போது அருகில் சென்று கேப்டன் அட்வைஸ் செய்வது வழக்கம் இந்த மேட்சில் அது நடக்கவில்லையே?! நீ போடு கண்ணா என்பதுபோல் கையை கட்டிக் கொண்டடுருந்தாரே? அது தவறில்லையா?!

said...

/*ஆனால், சச்சினால் ஓட முடியாமல் தான் அவன் அவ்வாறு செய்திருக்கிறான்.*/

நிச்சயமாக இல்லை, கம்பீர் வந்தவுடன் அடித்தாடக்கூடியவர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.அழகாக மட்டைக்கு வந்த பந்துக்களை கூட தட்டிவிட்டு சிங்கிளுக்கு சச்சினை கேட்டாரே அன்றி அடிக்க நினைக்கவில்லை.அவர் இறங்கும்போது பவர்பிளே இருந்தது.அடித்து விளையாடி இருக்கவேண்டாமா?இதை டிராவிட் சொல்லி அனுப்பி இருக்க வேண்டாமா??