Tuesday, September 11, 2007

டிவெண்டி20 கிரிக்கெட் வரலற்றின் முதற்சதம் - கிறிஸ்கெயில் அதிரடி

டிவெண்டி20 கிரிக்கெட் உலககோப்பைக்கான போட்டிகளின் முதற் ஆட்டம் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகளுக்கிடையே கோலாகலமாக துவங்கியது. டிவெண்டி20 போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக கிறிஸ்கெயில் சதமடித்தார்.



10 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து 117 ரன்கள் அடித்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 98 ரன்கள் நியுசிலாந்து அணிகெதிராக அடித்ததே சாதனையாக இருந்தது,



இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 26 பந்துகளில் 50 ரன்களையும் 51 பந்துகளில் 100 ரன்களையும் கடந்தார்.
இவரின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

ஸ்கோர்கார்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

-------------------------
அண்மையில் எழுதப்பட்ட கதை : சகிப்புத்தன்மை

1 பின்னூட்டங்கள்/Comments:

சிவபாலன் said...

20 - 20 .. பெரிய அளவு வரவேற்பு பெரும் போல் இருக்கிறது.

20 ஓவர்களில் 200 ரன்கள்..!!??

தெ.ஆ. கூட பலமான எதிர்கொள்கிறது..!( 11 ஓவர்களில் 110 ரன்கள்)

அப்ப 50 ஓவர் கிரிகெட்டுக்கு மூடுவிழா?.. நல்லதுதான்..