1991 ல் பாலசந்தர், 2007ல் சேரன்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
மரகதமணியின்(தெலுங்கில் கீரவாணி) இசையில் "பாடும் நிலா" பாலா மற்றும் சந்தியா பாடிய "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற
பாடலின் வீடீயோ இதோ!!
நட்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடையும் ஒர் இரவில் நடக்கும் தொடர்ச்சியான போன் உரையாடல் காட்சிகளை கொண்டு இந்த பாடல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். 90 களின் தூர்தர்ஷனின் செய்திக்கான உலகம் சுற்றும் ஆரம்பக்காட்சி, செங்குத்து கட்டங்கள், சென்னை நகரின் வெறிச்சோடி இருக்கும் இரவு நேர தெருக்கள் என சில வினாடி காட்சிகளைக் கூட கவிதையாய் காட்டி இருப்பார் பாலசந்தர். நடுத்தர வயது ஆணாக மம்மூட்டி, முதன் முறையாக காதல் வயப்படும் பெண்ணாக பானுப்பிரியா இயல்பாக நடித்திருப்பனர்.
இதே பாணியில் மாயக்கண்ணாடி படத்திலும் சேரன், இளையராஜாவின் அருமையான இசையில் ஒரு பாடற்காட்சியை அமைத்திருப்பார்.
வெவ்வேறு காலகட்டத்தில் வெளிவந்திருந்தாலும், காதல் பரிமாற்றத்திற்கு தொலை தொடர்பு சாதனங்கள் எப்படி உதவிகரமாக இருக்கின்றன என்பதை நயத்தோடு சொல்லும் இவை இரண்டும் காலம் கடந்தும் ரசிக்கப்படும் என்பது நிச்சயம்.
நன்றி : www.youtube.com
1 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி!
இனிமையான பாடல்கள்.
சங்கீத சுரங்கள்..மிக..எழில்
அதில் வரும் மிருதங்க ஒலி ,தமிழ்ப்பாடல்கலில் ஒலிப்பது குறைவு.எஸ்.பி நன்கு குழைந்து பாடுகிறார்.
நற்றேர்வு
Post a Comment