XP , Firefox Mozilla தமிழ் கொம்பு (கே, கெ) மாற்றங்கள் , நன்றி எ-கலப்பை முகுந்த்
நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருந்து இருக்கும். எக்ஸ்.பி யில் நோட்பேடிலோ, வேர்டிலோ தமிழில் டைப் பண்ணினால் "கெ, கே" இவற்றிற்கு வரும் கொம்புகள் இடம் மாறி வரும். இதே நிலைமை தான் ஃபயர்பாக்ஸில் தமிழ் எழுத்துருக்களைப் படிப்பதிலும் ஏற்பட்டு இருக்கும்.
இந்த சந்தேகத்தை எ-கலப்பை முகுந்த் அவர்களிடம் கடந்த வாரம் கோவை பதிவர் பட்டறையில் கேட்ட போது எக்ஸ்.பி நிறுவும் பொழுது "இண்டிக்(indic)" சார்பு கோப்புகளை நிறுவாமல் விட்டு விடுவதுதான் இதற்கு காரணம் என்றார்.
அதை மீண்டும் நிறுவ Start --> Control Panel போனீர்கள் என்றால் ஒரு சன்னல் திறக்கும்.
அதில் Date,Time, Language Regional options யை சொடுக்கவும். சொடுக்கிய பின் கிடைக்கும் கீழ் காணும் பக்கத்தில்
Regional and Language options யை சொடுக்கவும்.
கீழே காட்டப்பட்டுள்ள ஒரு சன்னல் தனியாகத் திறக்கப்படும்.
சிவப்பு நிறத்தில் சுழிக்கப்பட்டுள்ள இடத்தை தேர்வு செய்து "Apply" செய்தால் எக்ஸ்.பி நிறுவும் குறுந்தகட்டை கணினிக் கேட்கும். குறுந்தகட்டை உள்ளீடு செய்துவிட்டு இண்டிக் சார்பு கோப்புகள் நிறுவுதல் முடிந்தவுடன் கணினியை மீண்டும் ஆரம்பித்தால்(Re-Start) நோட்பேடி்லும் எம்.எஸ் வேர்டிலும் தமிழி்லேயே சரியாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம்.Firefox mozilla உலவியி்லும் தமிழ் எழுத்துருக்கள் ஒழுங்காகத் தெரியும்.
இதை நிறுவுவதன் மூலம் உலவியின் மேற்பகுதியில் [][][] என்று கட்டம் கட்டமாகத் தெரிவதும் நின்று தமிழில் தெரியும்.
9 பின்னூட்டங்கள்/Comments:
இதை முதலில் பத்திரிக்கைகாரங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.திரு சுப்பையா சார் ஏற்றிருக்கும் பதிவில் உள்ள பத்திரிக்கை படங்களை பாருங்கள்.
வருகைக்கு நன்றி வடுவூர்குமார் சார். ஆமாம் தாங்கள் சொன்னதை பத்திரிக்கை படங்களில் கவனித்தேன்.
னன்றி அண்ணா!
பார்த்தீங்களா அண்ணா? 'நன்றி' ல 'ந' வர மாட்டேங்குது. இதுக்காக நான் jaffnalibrary.com ல போயி type பண்ணி copy paste பண்ணவேண்டியதா இருக்கு! இதுக்கும் எதாவது தீர்வு இருக்குமே? கண்டுபிடிச்சு சொல்லுங்க Please!
பூர்ணிமா,
ந் - w, ந - wa அடிங்க எ-கலப்பையில்
வினையூக்கி
முதல் பின்னூட்டம் எங்கே?
reginal language ல்complex script நிறுவிய பிறகு details பகுதி கிளிக் செய்து add பகுதி திறந்து input language ல் tamil ம் keyboard ல் USம் நிறுவ வேண்டும்.பிறகு ஓகே அப்ளை கொடுத்து வெளி வந்தால் desktop task barல் EN/TA என் இரு ஆப்ஷன் தெரியும்.இதைச் செய்தால்தான் எ.கலப்பையும் சொன்னது கேட்கும்.
//
கண்மணி said...
வினையூக்கி
முதல் பின்னூட்டம் எங்கே?//
உங்களுடையது ஒரே பின்னூட்டம் தான் வந்துள்ளது. அதுவும் இதுதான்.
//reginal language ல்complex script நிறுவிய பிறகு details பகுதி கிளிக் செய்து add பகுதி திறந்து input language ல் tamil ம் keyboard ல் USம் நிறுவ வேண்டும்.பிறகு ஓகே அப்ளை கொடுத்து வெளி வந்தால் desktop task barல் EN/TA என் இரு ஆப்ஷன் தெரியும்.இதைச் செய்தால்தான் எ.கலப்பையும் சொன்னது கேட்கும்.//
நான் இதை செய்யவில்லையே!!! ஒழுங்காக வேலை செய்கிறதே
ஓ குட் டீச்சர் சொன்னபடி செஞ்சிட்டீங்க.ஆனா என்ன செஞ்சாலும் ப்யர்பாக்ஸ்ல் பிளாக்கில் [பதிவு தலைப்பு] மட்டும் இன்னும் ஜாங்கிரிதான்.
இதைப் பற்றித்தான் நான் ஏற்கனவே ஒரு பதிவி எழுதியிருக்கிறேன். இதன்படி செய்திருந்தால் இந்தச் சிரமம் இருக்காது.
பதிவிற்குச் செல்ல: இங்கே சொடுக்கவும்.
மெலும் சில பதிவுகளுக்குச் செல்ல: இங்கே சொடுக்கவும்.
Post a Comment