கடவுளுக்கு என்னைப் பிடிக்குமா? - சிறுகதை
அப்படா!!, ஒரு வழியாக அந்த சுவிசேஷக் கூட்டம் முடிந்தது. ஜெனி கூட்டத்தோடு கூட்டமாக சுடிதாரின் மேல் துண்டை தலையில் முக்காடு போல் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். கண்களில் அழுத சுவடு தெரிந்தது. தன்னுடன் வந்தவர்களை அனுப்பிவிட்டு என்னை நோக்கி வந்தாள்.
"ஒரு வழியா இப்போதான் உங்க கூட்டம் முடிஞ்சதா?"
"ம்ம்ம்ம், இன்னக்கி ஆனந்தமான ஒரு உணர்வுடா, நார்வேலேந்து ஒருத்தர் வந்து இருந்தார், நல்ல பிரசங்கம். சாரி உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேன், நீ கூட உள்ளே வந்து இருக்கலாம்"
"சரி, சரி டைம் ஆயிடுச்சு வண்டில ஏறு" மெலிதான எரிச்சலுடன்
"கோச்சுக்காதேடா, நல்ல வார்த்தைகளை நீ உள்ள வந்து கேட்டால்தான் என்ன?"
"இதைப்பாரு ஜெனி, ஏற்கனவே சொன்னதுதான், எனக்கு எந்தக் கடவுளையும் பிடிக்காது,அதைவிட கடவுளின் ஏஜெண்டுகளை சுத்தமாகப் பிடிக்காது. அடுத்த வாரத்திலேந்து நீ தனியா ஆட்டோல வந்துட்டுப் போயிடு"
"ம்ம்ம் , சாரி சாரி, இனிமேல் இதைப்பத்தி பேசமாட்டேன். கடைசியா ஒண்ணு சொல்லட்டுமா?"
"சொல்லு"
"உனக்கு கடவுளைப் பிடிக்காட்டி கூட கடவுளுக்கு உன்னைப் பிடிக்கும்"
இதற்கு நான் பதில் சொல்லவில்லை. ஜெனி தங்கி இருக்கும் விடுதி முன்னால் அவளை இறக்கிவிட்டு விட்டு, முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு "பை" சொல்லிவிட்டு என் அறைக்கு வந்து சேரும் போது மணி பத்தடித்தது.
தூக்கம் கண்களைச் சொக்கியபோது கைத்தொலைபேசியில் ஜெனியின் அழைப்பு வந்தது.
"கார்த்தி, என்ன கோபமா?"
"கோபம் எல்லாம் இல்லை,என்ன விசயம் சொல்லு ஜெனி"
"ஏண்டா, உனக்குக் கடவுளைப் பிடிக்கல?"
"நான் ஏற்கனவே சொன்னதுதான், நிச்சயம் ஏதோ ஒரு சக்தி நம்மை சுழ்ந்து உள்ளது, ஆனால் அதற்கு ஒரு உருவம் கொடுத்து, வழிபாடுகளைத் திணித்து கடவுளாகக் கொண்டாடுவது தான் பிடிக்கவில்லை"
"ம்ம்ம் உருவம் கொடுக்கிறதுக் கூட ஒரு வகை நம்பிக்கை தானே!!கடவுளைப் பற்றிய உணர்வு மனிதனை குறைந்தபட்ச ஒழுக்கத்தோடு இருக்க வைக்கிறது"
"ம்ம் கடவுள் பக்தியே இல்லாமல் கூட அதிக பட்ச ஒழுக்கத்தோடு இருக்கும் ஆட்களை நான் பார்த்திருக்கிறேன், உலகத்தில் அதிக பேர் கொல்லப்பட்டது கடவுளின் பேரால் தான். மனிதனை எமோஷனால அடிமைப்படுத்துற ஒரு உணர்வுதான் இந்த கடவுள் கான்செப்ட்"
"இதுதான் பாயிண்ட், மனுசனுக்கு எப்போவுமே ஒரு சரணாகதி பீலிங் வேனும், யாரையாவது/எதையாவது சார்ந்து அல்லது பின் தொடர்ந்து வாழனும், அது இந்த கடவுள்ங்கிற ஒரு விசயத்துலே அதிகமா இருக்கு. எமோஷனல் அடிமை உணர்வு கிரேட்டஸ்ட் பீலிங்டா.. இப்போ நான் கூட உனக்கு எமோஷனல் அடிமைதான்" சொல்லிவிட்டு கிலுக்கென சிரித்தாள் ஜெனி.
"நீ எனக்கு அடிமைங்கிறதைவிட உன் மதத்துக்கு தான் அடிமையா இருக்கிறீயோன்னு அடிக்கடி தோனும், பக்திங்கிற போதைக்கு நீ அடிமையாயிட்ட"
"சரி சரி , நாம இப்படியே பேசிட்டுபோனால் சண்டை வந்துடும், என்னோட கடவுளைக் கும்பிட வேனாம், உன்னோட சாமியாவது கும்பிடுடா கார்த்தி"
'கடவுள்ல என்ன உன்னோட சாமி, என்னோட சாமின்னு...இதுதான் உன்னை மாதிரி ரிலிஜீயஸ் ஆட்கள் கிட்ட உள்ள பிரச்சினை. எனக்கு கடவுள் எந்த ரூபத்திலும் வேண்டாம்.. கடவுள்ங்கிற கான்செப்ட்டை நான் வெறுக்குறேன்"
"ஒகே ஒகே.. நீ கடவுளை வெறுத்தாலும் கடவுளுக்கு உன்னைப்பிடிக்கும், நான் போனை வக்கிறேன்...நீ ஒழுங்காத் தூங்கு டாடா" என்று சொல்லி கைத்தொலைபேசியைத் துண்டித்தாள்.
அதன்பின்னர் தூக்கம் வரவே இல்லை. ஜெனி இன்று இரண்டு முறை சொன்ன அந்த வாக்கியம் தான் நினைவில் வந்து கொண்டிருந்தது. 'கடவுளுக்கு உன்னைப் பிடிக்கும்"
கடவுள் என்று ஒரு விசயம் உண்மையாக இருந்தால் , கடவுளுக்கு என்னைப் பிடிக்குமா?
எல்லோரையும் அன்பு செய்கிறேன் என்று சொல்வதை விட யாரையும் நான் வெறுக்காமல் இருக்கின்றேன் என்று சொல்லலாம். மனதில் அன்பு இருக்கிறதோ இல்லியோ வெறுப்புணர்வு இல்லை... இதுக்கு கடவுள்ங்கிற எனக்குப் புரியாத கன்செப்ட் மட்டும் விதிவிலக்கு.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றேன். ஜெனி மூன்று மணிநேரம் அவள் மதத்தைப் பற்றி பேசினாலும் அவள் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் என்னால் பேச முடிகிறது. சமுதாயம் விரும்பும் தனிமனித ஒழுக்கம் இருக்கிறது. என்னால் மற்றவர்களுக்கு உதவ நேரிடும் சந்தர்ப்பங்களை தவற விடுவதேயில்லை. என்னுடையக் கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணிப்பதில்லை, ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதுமில்லை. நான் நானாகவே இருக்கின்றேன், சில சில மாற்றங்களுடன் பெரும்பாலும்.
ம்ம் இவைதான் ஜெனிக்கு என்னைப்பிடிக்க காரணங்கள், ஜெனியை கடவுளுக்குப் பிடித்து இருந்தால் ஜெனிக்குப் பிடித்த என்னையும் நிச்சயம் பிடிக்கும்.
7 பின்னூட்டங்கள்/Comments:
yaar yaar sivam.....!!anbe sivam...!!..
nice thought provoking one...i enjoyed it becos it reinforced the concepts of both theist and atheist, without hurting their views..!!
ஒவ்வொரு சிறுகதையிலயும் இப்போ புதுசு புதுசா மெசேஜ் சொல்ல நினைக்கறீங்க. இது நல்லா இருக்கு.
Usualஅ Royaltyஅ Chequeஅ குடுப்பீங்களா? இல்லை Cashஅ வா
?
hmm pudichirukku...nadu nilaiyana sindhanai pudichirukku....good work
kadavule..
கடவுள் எல்லாருக்கும் பொது. எல்லாரையும் ஒன்றாகத்தான் நேசிக்கிறார். ஆனால் நாம்தான் கூடக் குறைய என நினைத்துக் கொண்டு நம்மையும் ஏமாற்றி கடவுளையும் ஏமாற்றப் பார்க்கிறோம். அன்பே சிவம்.
வினையூக்கி,
/* ஒவ்வொரு சிறுகதையிலயும் இப்போ புதுசு புதுசா மெசேஜ் சொல்ல நினைக்கறீங்க. இது நல்லா இருக்கு.*/
நந்தா சொன்னதை வழிமொழிகிறேன்.
தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே.
பொன்னை யன்றிப் பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லைத்
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே
இது யாருடைய பாடல் என்று தெரியுமா? :-))
வெற்றி,
நீங்கள் சுட்டியுள்ள வரிகள்
சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள்) அருளிய திருப்பாடல்கள்.
கூகிளின் உதவியோடு இவ்வரிகளைத் தேடியபோது
இத்தளத்தில் எழுதியவரை கண்டறிந்தேன்.
நன்றிகள்
Post a Comment