Saturday, May 05, 2007

சேரன் - கனாக்காணும் காலங்கள் - மாயக்கண்ணாடி

கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் கனாக்காணும் காலங்கள் தொடரைப் பார்த்து இருந்தால் ஒன்றைக்கவனித்து இருக்கலாம். நடிகர் - இயக்குநர் சேரன் அந்த தொடரில் சேரனாகவே வருவார்.

பள்ளிப்பருவ காலங்களை பற்றிய இத்தொடரில், பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல்
சேரனின் மாயக்கண்ணாடி படம் பார்க்கப் போவதாகவும், கூட்டத்தில் முந்தியடித்து நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்ப்பதாகவும் காட்டினார்கள். அவர்கள் வாங்கிய குறிப்பிட்ட நுழைவுச்சீட்டுக்கு உரிய நபரின் வீட்டிற்கு சேரனே வருவார் என அரங்க நிர்வாகிகள் அறிவிக்கின்றனர்.

இந்த பள்ளி மாணவர்கள் சேரனைத் தங்களின் பள்ளி திரைக்குழும ஆரம்ப விழாவிற்கு வரவைக்கின்றனர். அங்கு முழுக்க முழுக்க மாயக்கண்ணாடி திரைப்படத்தை பற்றிய கலந்துரையாடல் நடைபெறுவதாகக் காட்டுகின்றனர்.

விளம்பரங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

மாயக்கண்ணாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

5 பின்னூட்டங்கள்/Comments:

none said...

என்ன பண்றது சொல்லுங்க அண்ணா...... எங்க தொழில் எவ்ளோ கஷ்டம்னு பார்த்தீங்களா? அப்படி இப்படீன்னு எப்பிடி எப்பிடிலாமோ விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிட்டோம்!

Anonymous said...

Padatha 70% theatrela irunthu thookittanga, ippo padam vetri pera vazhthukkala? neenga comedy kemedy onnum pannalayae

Anonymous said...

புதுவிதமான விளம்பர முறையாக இருக்கே...பொதுவாக படங்களில் தான் தொலைக்காட்சி நடிக, நடிகைகள் வருவார்கள்...காலம் மாறிட்டுது..

வினையூக்கி said...

நன்றி தூயா,பாஸ்டன் பாலா, பூர்ணிமா மற்றும் அனானி.

இந்தப் படம் வணிகரீதியில் தோல்வி என்று சொல்லப்படுவதை சேரனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லல என்பது நிச்சயமாக அவரின் agressive promos மூலமாக தெரிகிறது. நல்ல படத்தைதான் கொடுத்திருக்கிறோம் ஆனால் மக்கள் ஆதரவு தரவில்லல என்ற ஆதங்கம் பேச்சில் விளம்பரங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)