Wednesday, May 02, 2007

விடாது காதல் -சிறுகதை

நண்பர் ஒருவரிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உரையாடிக் கொண்டிருக்கையில் ஜெனியின் அழைப்பு வருவதை கைத்தொலைபேசி காட்டியது. நண்பரை பிறகு தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஜெனியை அழைத்தேன்.

ஜெனிக்கிட்ட போன வாரம் தான் பேசினேன். வழக்கமா 15 நாளைக்கு ஒரு முறைதான் ஜெனியிடம் இருந்து அழைப்பு வரும். விசயம் என்னாவாக இருக்கும் என்ற யோசனையுடன்,

"ஹலோ ஜெனி, ஸ்வீட் சர்ப்ரைஸ், திடீர்னு ஒரு வாரத்திலேயே கால் பண்ணிட்டிங்க"

"ம்ம்ம்ம், ஒரு விசயம் உங்க கிட்ட கேட்கலாமா?"

"ஜெனி, என்ன கேள்வி எது? உங்களுக்கு இந்த கால காட்டத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்க உரிமை உண்டு"

"ஒரு வேளை கடைசி வரை உங்களோட காதலை ஏற்றுக் கொள்ளாமலேப் போய்விட்டால் நீங்கள் மனரீதியாக எவ்வளவு பாதிக்கபடுவீங்க? உங்களைக் காதலை ஏற்றுக் கொள்ளாமலே, நம்ம நட்பு மட்டும் தொடர்ந்து கடைசியில் பிரியும் போது ,நான் உங்களை ஏமாத்திவிட்டேன்னு சொல்லுவிங்களா?"

"மனரீதியாக என்றால் ஒரு மொமண்டரி வருத்தம் இருக்கும், அது சில நிமிசத்துல சரியாகிடும். நிச்சயமா உங்க கல்யாணத்துக்கு வருவேங்க, வேண்டுமானால் சொல்லுங்க உங்க கல்யாண ரிஷப்சன்ல பூவே உனக்காக விஜய் மாதிரி பாட்டு எல்லாம் பாடுறேன்"

"ம்ம்ம்ம்"

"நிச்சயம், உங்களைக் குறை சொல்ல மாட்டேன். உங்களின் சுதந்திரம் ஆரம்பிக்கும் இடத்தில் என்னுடைய சுதந்திரம், உரிமைகள் முடிகிறது. என்னோட விருப்பத்தை சொன்னது என்னோட உரிமை, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் டோட்டலி உங்க ரைட்ஸ்"

"ம்ம்ம்ம்"

"இவ்வளவு நாள் நீங்க என்னுடன் பெருந்தன்மையாக பழகும்போது, நானும் அப்படி இருப்பதுதானே உங்களுடன் பழகியதுக்கான அர்த்தம் . வெகுசில இடங்களில் மட்டுமே
மனுசனுக்கு தனது பெருந்தன்மையைக்காட்டும் சந்தர்ப்பங்கள் அமையும். அப்படியொரு சந்தர்ப்பம் நமது பிரிவில் கிடைக்கும் போது அதை தவறவிட மாட்டேன்."

"ம்ம்ம்ம்"

"வாழ்க்கை பயணம் மாதிரி, பயணங்களில் நாம் எப்போதும் வசதியை பார்ப்போம். உங்களுடன் பயணப்பட்டால் எனக்கு என் பயணம் சுகமாகவும் வசதியாகவும் இருக்குமமென்று நினைத்ததால் என் விருப்பத்தை சொன்னேன். "

"ம்ம்ம்ம்"

"ஜெனி, டிக்கெட் கன்பார்ம் ஆகாதபோது பயணநேரம் வரை டிக்கெட் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்பிக்கை வைப்பதில் தவறில்லையே.. என்ன ம்ம்ம் மட்டும் சொல்லிக்கிட்டே வர்றீங்க, ஏதாவது பேசுங்க,"

"ம்ம்ம், நல்லாதான் பேசுறீங்க, பேசுங்க கேட்கிறேன்."

"ஒரு வேளை மூனு நாலு வருசம் முன்னாடி இப்படியான சூழ்நிலை அமைந்து இருந்தால், அதிக வருத்தமோ, கோபமோ இருந்திருக்கலாம், எதிர்மறையான முடிவுகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் இப்போது உள்ளது"

"ம்ம்ம்"

"முதல்வனில் சொல்வது போல், வீடு,மஞ்ச டிஸ்டம்பர், மனைவி புள்ளகுட்டி, ஹிந்து பேப்பர், பேங்க் பேலன்ஸ், வெட்டி நியாங்கள் பேசி வாழும் நடுத்தர வாழ்க்கை வாழ விரும்பவில்லை, சமுதாயத்தில் நானும் இருந்தேன் என்று நல்ல வழியில் அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒரு வாழ்க்கையே வாழ விரும்புகின்றேன். அப்படிப்பட்ட ஒருவிதமான போராடும் வாழ்க்கைக்கு நீங்கள் என்னுடன் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்ததால்தான் விருப்பத்தை சொன்னேன்"

"ம்ம்ம்"

"எல்லாவற்றுக்கும் மேலாக , யாரவது நம்மை ஏமாத்திட்டாங்கன்னு சொன்னா, அது நம்முடைய இயாலாமையை, தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டும்"

"ம்ம்ம்ம்"

"எக்காலத்தில் யோசித்துப் பார்த்தாலும், உங்களைப்பற்றிய நினைவுகள் உற்சாகமாத்தான் இருக்கும் உறுத்தல்கள் இருக்காது"

"ம்ம்ம்ம்"

"நீங்க கிடைச்சால் எனக்கு நல்லது, கிடைக்காட்டி அது உங்களுக்கு நல்லதா இருக்கலாம்"

"ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்ம்ம்ம் மட்டுமே சொல்றீங்க, கடவுள், ஆன்மிகம் பத்தின என்னுடைய விமர்சனங்களுக்கு மட்டும் எப்படி பதிலுக்குப் பதில் பேசுவீங்க, இப்போ வெறும் ம்ம்ம் தானா? ம்ம்ம்ம் க்கு என்ன அர்த்தம் பேச்சை நிறுத்து என்றா!"

"இல்லை, கார்த்தி உங்க தன்னிலை விளக்கம் நல்லா இருந்துச்சு, கேட்டுட்டு இருந்தேன்"


"எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

மாயாவி படத்தில் வரும் கடவுள் தந்த அழகிய வாழ்வு பாட்டு கேட்டு இருக்கிங்களா ஜெனி, அதுல இந்த வரிகள் வரும் "

"கேட்டு இருக்கேன், கார்த்தி"

"இந்த வரிகள்தான் நம் நட்பினில் என்னுடைய நிலை"

"ம்ம்ம்ம்ம்"

"மாற்றங்கள்தான் மாறாதது என்ன சரியா ஜெனி"

"இல்லை இல்லை, சில விசயங்கள் மாறாமல் அதன் நிலையிலேயே இருப்பதுதான் நல்லது" வேகவேகமாக ஜெனியிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது.

"ஹிஹி, இதுக்கு மட்டும் ம்ம்ம் சொல்லாமல் பதில் சொல்லிட்டீங்க"

"ம்ம்ம்ம்ம்"

"இப்படி சொல்லிட்டதுனால இன்னொருமுறை ப்ரபோஸ் பண்ண மாட்டேன்னு நினைக்காதிங்க, முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறக் கூடாது.. " என்றேன்.

"தாங்க்ஸ், உங்க பதிலுக்கு. யூ ஆர் எ குட் மேன், தூக்கம் வருது, அடுத்து தோனுறப்ப கூப்பிடுறேன். குட் நைட்" என்று ஜெனி சொன்ன பிறகு அழைப்பைத் துண்டித்தேன்.

அடுத்த அழைப்பு விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் தூங்கப்போனேன்.

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

ha ha ha....was able to imagine the conversation...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

said...

ம்ம்ம்ம்ம்

said...

அடுத்த அழைப்பு வரும்வரைக்கும் எதுக்கு காத்திருக்கீங்க அண்ணா?
இப்பொவே நம்பர் குடுங்க, நான் பேசி கன்வின்ஸ் பண்ரேன், எங்க அண்ணன் நல்லவரு, வல்லவரு இன்னு!
:)

said...

நன்று

said...

நன்றி ஞானேஷ்,குழலி, பிரியன்.

பூர்ணிமா இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை

said...

உரையாடலில்.....நிறைய அற்புதமான கருத்துக்களை அறிந்துக்கொண்டேன்,

யதார்த்தமான உரையாடல்,

\\"இப்படி சொல்லிட்டதுனால இன்னொருமுறை ப்ரபோஸ் பண்ண மாட்டேன்னு நினைக்காதிங்க, முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறக் கூடாது.. " என்றேன். \\

ஒரு முறை மறுப்பு தெரிவித்தவரிடம்.....மீண்டும் ப்ரோபோஸ் பண்ணுவது, அந்த நபரை தொந்தரவும் கஷ்டமும் படுத்தவதாக அமைந்து விடாதா??

said...

@திவ்யா
காலம் எல்லாவற்றுக்கும் அருமையான தீர்வுகளைத் தரும். சில காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஒருமுறை விருப்பத்தை சொல்லுவதில் தவறில்லையே!!!