கி.பி. 3092 - சிறுகதை
"விலங்கோடு விலங்காக என்றோ ஒரு நாள் பூமியில் உருவான மனிதன் காலத்தைவிட வேகமாக ஓடி கடவுளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, அவன் கண்டறிந்த இயந்திரங்களால் கடவுளையும் கடந்து பிறப்பு இறப்புகளை அவனே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கின்றான் என்ற கர்வத்தை அடக்கப் போகும் பொன்னான நாள் இன்று" என்றக் குறிப்பை கணிணியில் எழுதி வைத்துவிட்டு எனது கண்டுபிடிப்பான நேர இயந்திரத்தில் கடைசி நேர பரிசோதனைகளை செய்து முடித்தேன்.
பூமிப் பிரதேசத்தின் தலை சிறந்த விஞ்ஞானி என்பதால், எனக்கு அரசாங்கம் 50 வருடம் வாழ்நாள் நீட்டிப்பு இரண்டு முறைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை நீட்டிப்புக் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு மற்ற கிரகங்களிலிருந்து கிளம்பி உள்ளதால் அடுத்த வருடம் 3092, தை 1 வாழ்க்கை நீட்டிப்பு முடிவடையும் நாள். அன்று மதியம் 12 மணிக்கு என்னுடைய உயிர் பறிக்கப்பட்டு, என்னுடைய ஆற்றல் வேறொரு உயிராக உருவாக்கப்படும்.
இவர்கள் யார்? வாழ்வை நிர்ணயிக்க, பிறக்கும் போதே , இறந்த நாளையும் குறிக்க,, மனிதனுக்கு கட்டுப்பட்டு இயந்திரமா, இயந்திரத்திற்கு கட்டுப்பட்ட மனிதனா? இந்த கட்டுத்தளையிலிருந்து நான் விடுபட போகும் நாள்,இதற்காகவே கடந்த 100 வருடமாக இந்த இயந்திரத்தை மிக ரகசியமாக உருவாக்கி வைத்துள்ளேன். நேற்று கடந்த காலத்திற்கு சென்று என் நேர இயந்திரத்தை பரிசோதித்து விட்டேன். இன்று ஒரேடியாக என் இறுதி நாள் எனக்குறிப்பிடப்பட்டுள்ள நாளிலிருந்து 100 வது வருடத்திற்கு அப்பால் போகப் போகின்றேன். அதன் பின் நான் சாகாவரம் பெற்றவன். என் இயந்திரத்தால், முக்காலமும் உணர்ந்தவன் ஆகி விடுவேன்.
இயந்திரத்தில் நான் செல்லபோகும் 3200 ஆம் ஆண்டை தட்டச்சு செய்தேன். என்னுடைய கண்டுபிடிப்பின் குறிப்புகளோடு உள்ளே சென்று அமர்ந்து இயந்திரத்தினை இயக்கினேன், மாதங்கள், வாரங்கள் ஆகின, வாரங்கள் நாட்கள் ஆகின, இன்னும் சில மணி நேரம், எனக்கு இறப்புக் குறிக்கப்பட்ட நாளைக் கடக்கப் போகின்றேன். இதோ இன்னும் 10 வினாடிகள் 3092 தை 1 11.59.50
52 .... 53..... 54 ....55 ....56 ....57 ....58 ...........டமால், என்னுடைய இயந்திரமும் நானும் வெடித்து சிதறினோம்.....59 ...
சரியாக 12.00.00 மணிக்கு என் ஆற்றல் என்னைவிட்டுப் பிரிந்தது,
8 பின்னூட்டங்கள்/Comments:
கடைசி பகுதியில், "வெடித்துச் சிதறினோம்" என்று தன்வினையாக இல்லாமல், "சிதறியது!" என்று பிறவினையாக எழுதி இருக்கலாம்.. அதாவது மற்றொருவரின் பார்வையில்.. அப்படி ஏதாச்சும்...
நல்ல கான்சப்ட்..
வெடித்துச் சிதறினோம் என்பதை சொல்லிய பிறகுதான் கதை சொல்லியின் உயிர் போகிறது. ஆதலாம் தன்வினையாகவே முடித்து விட்டேன்.
தன்வினையாகவே முடிந்துவிட்டது.......
இந்த கதை இப்போ தேவையா அண்ணா? இது எல்லாம் 3092 ல இருக்குறவங்களுக்கு சொல்லவேண்டியது. இதை போய் 2007 ல இருக்குற என்னை படிக்க வெச்சிட்டீங்களே?
:)
கதை நல்லாயிருங்க.. இரசித்தேன்
கடவுளையும் கடந்து பிறப்பு இறப்புகளை அவனே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கின்றான் கி.பி. 3092 - தேவையா அவனுக்கு...
கதை (கற்பனை) அருமை
நன்றி, சிவஞானம்ஜி, பூர்ணிமா, சிவபாலன் மற்றும் மின்னுது மின்னல்
தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........
ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )
சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......
டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)
Post a Comment