Tuesday, April 03, 2007

ஒற்றைக்கால் "டான்ஸர்" , நடிகர் குட்டி மரணம்

கேயாரின் தயாரிப்பில் "டான்ஸர்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் குட்டி, இராமநாதபுரம் அருகே ஒரு கோயில் திருவிழாவில் நடனமாட சென்றபோது, அவர் தங்கியிருந்த விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு மரணமடைந்தார். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்த இவர், தளாரத முயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் ஒற்றைக்காலில் நடனம் ஆடி கதாநாயகனாக அறிமுகம் ஆகும் அளவுக்கு பெயர் பெற்றார்.

டான்ஸர் படத்துக்காக 2004 ஆம் ஆண்டு தேசிய சிறப்பு விருதும் பெற்றவர்.

நடிகர் குட்டியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

டான்ஸர் பட விமர்சனம் இங்கே

17 பின்னூட்டங்கள்/Comments:

said...

பாவங்க. ச்சின்னவயசு வேற.(-:

ஆழ்ந்த அனுதாபங்கள்.

செந்தழல் ரவி said...

தளராத தன்னம்பிக்கைக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...அவரது ஆன்மா அமைதியில் உறங்க வேண்டுகிறேன்.

said...

மிகவும் வருத்தமான செய்தி.

இன்று காலையின் சன் டிவியில் அவருடைய உடலைப் பார்த்தபோது மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இத்தனை விடாமுயற்சியுடன் முன்னுக்கு வந்தவருக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்க வேண்டாம்..

said...

உண்மையில் மிக வருத்தமான செய்தி.
நான் வடபழநியில் தங்கியிருந்த சமயத்தில் அவரை பார்த்ததுண்டு. பழகியதில்லை. உண்மையில் சிறந்த டான்சர் என எல்லோரிடமும் பெயரெடுத்தவர். அனுதாபம் விரும்பாத மனிதர். :(

சென்ஷி

said...

மிக்க வருத்தமான செய்தி! ஆழ்ந்த அனுதாபங்கள் ;((

said...

kuttikaL vithaikkappadukiRaarkaL. avarin muyarsi palarukkum vazikaattiyaaka amaiyum

said...

ஊனத்தை வென்றவன்.. நித்தரையில் அமைதி கொள்ளட்டும்...

said...

வருத்தமான செய்தி. அவர் ஆன்மா அமைதி பெற ஆண்டவன் அருளட்டும்.

said...

காலையில் செய்தித்தாளை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

said...

ச்சே.. பாவங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்திருப்பாரு. கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க... :(
அவரது ஆத்மா சாந்தி அடை கடவுள்கிட்ட வேண்டிக்கறேன்.

said...

ஒரு நம்பிக்கை இளைஞனின் சோக முடிவு. வருத்தமளிக்கிறது :(

said...

இரட்டைக் கால்கள் இருந்தும் நடனமாடமுடியவில்லையே என வருந்துவோருக்கு மத்தியில் இரண்டு கால்களென்ன ஒற்றைக் காலுடனும் நடனமாட முடியும் எனும் விதியை எழுதிவிட்டுச் சென்றுள்ளார் பிலிப்பிரீட் மேன்கோஷீ எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் குட்டி.
இவருடனான நேரடி சந்திப்பு பற்றிய கட்டுரையை "ஆறாம்திணை" மூலம் வாசிக்கக் கிடைத்தது.
http://www.aaraamthinai.com/cinema/interviews/nov14kutty.asp
அன்னாரின் பிரிவால் துயருறும் நெஞ்சங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

மனஞ்சோராமைக்கும்;தன்னம்பிக்கைக்கும்;விடாமுயற்சிக்கும் எடுத்துக் காட்டானவர்.
வேதனை மிக்க இழப்பு;அவர் ஆத்மசாந்திக்கும்;குடும்பத்தார் மன அமைதிக்கும்
பிராத்திக்கிறேன்.

said...

ஒற்றை காலும் ஓய்வு கேட்டுவிட்டது போலும் !
:(((

சோகம் !

said...

தன்னம்பிக்கை மிக்க இளைஞன் ஒருவனின் அகால மரணமிது. மிக வருத்தமான செய்தி.

அவரது ஆன்மா அமைதியுற அஞ்சலிக்கின்றோம்.

said...

மாற்றுத்திறனுடைய பலருக்கு
தன்னம்பிக்கையை வளர்த்தவர்....
சோகமான முடிவு
ஆச்ந்த அனுதாபங்கள்

said...

நம்பிக்கை மிகுந்த இளைஞர்.
மிக வருத்தமாக இருக்கிறது.
குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.