போனை எடு - சிறுகதை
"சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம" கைத்தொலைபேசியில் மணி அடித்தது, வந்த அழைப்பின் எண்ணைப் பார்த்தேன். நான் பதியாத எண், மூன்றாவது முறையாக வருகிறது. பொதுவாக நான் பதியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில்லை. பெரும்பாலும், கடன் அட்டை அழைப்புகளும், கடன் கொடுக்கும் வங்கி ஆட்களும் தான் அழைக்கிறார்கள்.
"கார்த்தி, ஏன் போனைக் கட் பண்ணினே. எடுத்துப் பேச வேண்டியதுதானே, ஏதேனும் பெர்சனல் காலா?" என்றார் மோகன்.
"இல்லை மோகன், கிரெடிட் கார்ட் கால் ஆ இருக்கும். இந்த நெம்பர் அவனுங்க நெம்பர் மாதிரிதான் இருக்கு"
"எந்த காலா இருந்தாலும் அட்டெண்ட் பண்ணி பேசிடு கார்த்தி, டென் டைம்ஸ் எரிச்சலா இருந்தாலும் ஒரு தடவை உண்மையிலேயே சில சமயங்களில் யாருக்கேனும் உதவி கூட தேவைப்படலாம், மொபைலோட நோக்கமே அதுதானே, எல்லா சமயங்களில் நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு தொடர்பு எல்லையில் இருக்க வேண்டும் என்பது தானே"
அதற்குள் மோகனுக்கு "மிஸ்ட் கால்" வந்தது.
மோகன் அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்தார்.
"ஹலோ , இந்த நெம்பரிலேந்து மிஸ்ட் கால் வந்துச்சு, என் பேரு மோகன், யார் கால் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"
".."
"ஓ, அப்படியா, இட்ஸ் ஓகே, பை"
"என்ன மோகன், லோன் பசங்களா?" என்றேன்.
"இல்லை, தவறுதலா ஒருத்தர் நெம்பர் மாத்தி போட்டுட்டாராம்"
அதைக்கேட்டவுடன் நக்கலாகச் சிரித்தேன்.
நாங்கள் குடித்த பெப்ஸிக்கு மோகன் காசு கொடுக்க நாங்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பினோம்.
மறந்தே போச்சு, ஜெனி வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தாள்.
வழக்கமாக, அவள் சீக்கிரம் வந்தாளும், அவளிடமும் ஒரு சாவி இருப்பதால், அவளே கதவைத்திறந்து உள்ளே உட்கார்ந்து இருப்பாள்.
ஆனால் வீடு பூட்டியிருந்தது, எதிர்த்த வீட்டு தாத்தா என்னைப் பார்த்ததும், என்னிடம் வந்து
"உங்களைத் தேடி உங்க பிரெண்டு ஜெனி வந்தாங்க, அவங்க மொபைல்ல சார்ஜ் இல்லைன்னு என் வீட்டு டெலிபோன்லேந்து போன் பண்ணாங்க, அவங்க உங்ககிட்ட சொல்ல சொல்லிட்டு சீக்கிரம் போகனும்னு கிளம்பிட்டாங்க"
"ஓ அது உங்க வீட்டு நெம்பரா சார், சாரி, நெம்பர் பார்த்தேன். தெரியாத நெம்பர்னு எடுக்கல, சாரி"
"சார், எனக்கு சொல்லவேண்டாம் தம்பி, அவங்க கிட்ட சொல்லுங்க, கோபமா போனாங்க" என்றார் தாத்தா.
நான் இந்த வீட்டிற்கு வந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் காலையிலே 9 மணிக்குப் புறப்பட்டால் வீடு திரும்ப எப்படியும் இரவு 10 ஆகிவிடும். இந்த தாத்தா ரொம்ப நாளா இங்க இருக்கிறவர்னு மட்டும் தெரியும். அவருடைய பையன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறானாம். பிரச்சினையில்லாதவர்னு என் வீட்டு ஓனர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். விடுமுறை நாட்களில் பார்த்தால் மெலிதாக புன்னகை செய்வார். ஜெனி வருவது போவதும் அவருக்குத் தெரியும்.
"தம்பி இப்பயாவது என்னோட நெம்பரை ஸ்டோர் பண்ணிகோங்க, ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் கூப்பிடலாமா"
"ஸ்யூர் சார்" என்று சொல்லி நெம்பரை அவர்முன்னமே கைத்தொலைபேசியில் பதிந்தேன்.
வீட்டைத் திறந்து ஜெனியை கைத்தொலைபேசியில் அழைத்தேன்.
"கார்த்தி உனக்கு அறிவே இல்லைடா, இது மாதிரி பண்ணாதே, போனை எடுத்துப் பேசுறதுல உனக்கு அவ்வளவு என்ன சிரமம், கொஞ்ச நேரம் தவிச்சுப் போயிட்டேன். " என்றாள்.
"சாரிடா, அம்முக்குட்டி, " எனது "Sweet nothings Talk" ஆரம்பமானது.
இடையில் வீட்டிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது, வீட்டிற்குப் பேசி முடித்தவுடன் இரவு ஒரு மணி வரை ஜெனியுடன் தொலைபேச்சு தொடர்ந்தது.
வழக்கம்போல் தூங்கும் முன் கைத்தலைபேசியை "Switch=off" செய்து விட்டு படுத்தேன்.
கனவினில் டெண்டுல்கர் சதமடித்து இலங்கையைத் தோற்கடித்து சூப்பர் 8 க்கு இந்தியாவை முன்னேற செய்கிறார்.
கனவு முடிந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது "சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம" கைத்தொலைபேசியில் மணி அடித்தது,
யார் இந்த நேரத்தில் கூப்பிடுவது என்று நினைத்துக் கொண்டே
கைத்தொலைபேசி "thaathaa calling" காட்டியது.
"ஹலோ சார், சொல்லுங்க"
"என்னப்பா தம்பி, மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தூங்குகிறாய்."
"அய்யோ ஆமாம், எப்படி இப்ப கால்" மனது திக் திக் என அடித்தது,
"அடப்போப்பா, இன்னும் 5 வருஷம் வாழனும்னு நினைச்சேன், கொஞ்ச நேரம் முன்ன திடீர்னு நெஞ்சு வலி, உனக்கு கால் பண்ணி ஹெல்ப் கூப்பிடலாம்னு நினைச்சா உன் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப், என்ன பன்றது என் விதி அவ்வளவுதான். அது இருக்கட்டும் என் பையனோட ஆஸ்திரேலியா நெம்பரைக் குறிச்சுக்கோ, அவனை கால் பண்ணி தகவலைத் தெரிவி"
என்றார்.
கைத்தொலைபேசியைப் பார்த்தேன். இன்னும் "Switched - on" செய்யப்படவில்லை.
அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். கனவில்லை. இது நிஜம். கதவைத்திறந்து ஓடி எதிர் வீட்டு தாத்தாவின் கதவைத் தட்டினேன், வேகமாக, இன்னும் வேகமாக அடுத்த 10 நிமிடங்களுக்கு .. கதவு திறக்கப்படவே இல்லை.
5 பின்னூட்டங்கள்/Comments:
புத்தி கொள்முதல்!
i would like to read a story with a happy ending....pl.
நான் கூட பல சமயம் இந்த கதைல வர மோகன் மாதிரி missed call களை எல்லாம் call back செஇது credit card, mobile phone போன்றவற்றின்customer care காரர்களிடமும், wrong number களிடமும் தேவை இல்லாமல் என் பணத்தை செலவழித்திருக்கிறேன். ஆனா என்ன? யாரோட முக்கியமான call அ யும் miss பண்ணலைங்குர ஒரு நிம்மதி இருக்கும், after I call back to all the missed call numbers.
ஆமா, எனக்கொரு சந்தேகம்.... "வினையூக்கியின் பேய் உலகம்" அப்படின்னு எதாவது publish பண்ற idea ல இருக்கீங்க்ளா அண்ணா?
வினையூக்கி,
என் செல்லிடப்பேசியும் அதிக நேரங்கள் Off ல் தான் இருக்கும். இப்ப இந்தக் கதையைப் படிச்ச பிறகு கொஞ்சம் சிந்திக்க வேண்டித்தான் இருக்கு.
நல்ல கதை.
Ayyoooo.. This is my Principle.. செல்வா என் கதையை சுட்டுட்டான்..
Post a Comment