Wednesday, April 25, 2007

நடேசன் பூங்கா - ஒரு காதல் ஜோடி - வலைப்பதிவர் சந்திப்பு

"கார்த்தி, அங்கே என்னடா வட்டமா ஒரு க்ருப் உட்கார்ந்து இருக்கு, யாரு அவங்க" என்று ஜெனி என்னிடம் கேட்டபோது அப்போதான் அவங்களைக் கவனித்தேன். நாங்க உட்கார்ந்து இருந்த பெஞ்சுக்கு நேரா புல்தரையில் ஒரு 30 பேர் வளையமா உட்கார்ந்து இருந்தனர்.

வழக்கமா இந்த நேரத்தில ரிடையர்டு கோஷ்டிதான் இந்த நேரத்தில வந்து அரட்டையடிச்சுட்டு இருப்பாங்க, ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டத்திலே சில பெரியவங்களும் இருக்காங்களே, நடுத்தர வயது ஆட்களும் இருக்காங்க.

"இரு ஜெனி, அங்க போய் என்ன கூட்டம்னு பார்த்துட்டு வர்றேன்" என்று ஜெனியிடம் சொல்லிவிட்டு அந்த கூட்டத்தின் அருகில் வந்தபோது, சாகரனுக்கு மவுன அஞ்சலி, மலர் வெளியிட்டு, அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்தது.
(1. உங்கள் நண்பன் சரவணன் 2. மா. சிவகுமார் 3. தருமி 4. ஓகை நடராஜன்
5. ஐகாரஸ் பிரகாஷ் 6. பாஸ்டன் பாலா 7. லியோ சுரேஷ் 8. விக்கி 9. சிறில் அலெக்ஸ் 10. பாலராஜன் கீதா 11. இராம.கி 12. லக்கிலுக் 13. நந்தா:
14. உண்மைத் தமிழன் 15. சுந்தர் 16. ஓசை செல்லா 17. ப்ரியன்
18. சு.க்ருபாசங்கர் 19. மோகன்தாஸ் 20. ஜி.ராகவன் 21. முத்து தமிழினி
22. பகுத்தறிவு 23. பொன்ஸ் 24. We the People 25. ஜே கே 26. நாமக்கல் சிபி
27. விஜயராஜ் 28. மாரிக்கனி 29. மாஹிர் 30. நவீன் பிரகாஷ் 31. தமிழ்வாய்ஸ்
32. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் 33. யோசிப்பவர் 34. நிலாரசிகன்
35. தங்கவேல் 36. மிதக்கும்வெளி 37. செந்தில் 38. WeeBee 39. ஜி. கௌதம்
40. வடுவூர் குமார் 41. சார்லஸ் )
எல்லோருடைய பெயர்கள்/புனைப்பெயர்களக்கேட்ட பின் ஜெனியிடம் வந்தேன்.

"ஜெனி, அது தமிழ் பிலாக்கர்ஸ் மீடிங்காம்"

"ஆமாண்டா, நான் கேள்விப்பட்டு இருக்கேன்"

"அங்க மொட்டைத்தலையா ஒருத்தர் இருக்காருல அவர் பேரு பாலபாரதி, அவர்தான் இந்த மீடிங்கோட ஆர்கனைசராம்"

"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு"

"அங்க பாரு ஒருத்தர் நம்ம மாதிரி இருக்கிற லவ்வர்ஸ் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு கவனிச்சுக்கிட்டு இருக்காரு"என்று ஜெனியிடம் பேச்சை மாற்றினேன்.

"கார்த்தி என்னடா மக்கள் டீவி கேமரா தூக்கிட்டு வர்றாங்க, எங்க அப்பா இந்த சேனல் அடிக்கடி பார்ப்பார், மாட்டினேன்னா சுலுக்குதான்"

பொதுவா இந்த எழுத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துக் கொண்டால் அந்த இடம் போர்க்களம் போல் ஆகிவிடுமென்று கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் இவர்கள் அமைதியாக சந்திப்பை நடத்துகிறார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்ட வளையத்துக்கப்பால் இருவர் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சலசலப்பை பொருட்படுத்தாமல் கூட்டம் தொடர்ந்தது.

"கார்த்தி, அங்க பாரு, மாது பாலாஜி மாதிரி இருக்கரு"

"அவர் பேரு பாஸ்டன் பாலா, ஸ்னாப்ஜட்ஜ் பத்தி பேசிக்கிட்டு இருக்காரு"

தேன்கூடு பெட்டகம்(சிரில் அலெக்ஸ்) ,மாற்று(தண்டோரா0, கில்லி(பிரகாஷ்), எ-கலப்பை(ஓகை நடராஜன்) , இணைய சுதந்திரம்(செல்லா), தமிழ்மணம்(மா.சிவக்குமார்) , அனானி(லக்கிலுக்), வெகுஜனம்,தரமான பதிவு(தருமி) பின்னூட்ட எல்லை(மோகன்தாஸ்) என்ற புதுபுது விசயங்களை அவர்கள் பேசுவதை நானும் ஜெனியும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தோம்.

"ஜெனி, நாமளும் பிலாக் எழுதுவோமா?"

"எழுத ஆரம்பிக்கலாம், இப்போ கிளம்பலாம்" என்று எழுந்தாள்.

"ஜெனி, நான் ஒன்னு சொல்றேன் நிச்சயமா, இளைஞர்கள், தொழில்நுட்பம், பேராசிரியர்கள், மொழியுண்ர்வு, ஊடகம் தமிழ் சமுதாயம் அடுத்த பரிமாணத்தில் ஜொலிக்கப் போகின்றது" வண்டியில் போகும்போது சொன்னேன்.

"ம்ம், இதுல இருக்கிறவங்க நிறையபேர் கருத்து மாறுபாடு இருந்தாலும் எவ்வளவு சினேகமா பேசிக்கிட்டாங்க, நீயும் தான் இருக்கியே எதுக்கெடுத்தாலும் கோச்சுக்கிட்டு"

போகும்போது நாங்க சரவணபவனில் இட்லி வடை சாப்பிட்டு விட்டுபோனோம்.

மறுநாள், கூகிளில் எல்லாவற்றையும் எங்கள் காதில் விழுந்த கலைச்சொற்களைக் கொண்டு தேடி சந்திப்பை பற்றி வந்த அனைத்துப் பதிவுகளையும் படித்தோம். நாங்கள் அவர்கள் பதிவுகளை வாசிக்கும்போது அந்தந்த வலைப்பதிவாளாரே அவர் குரலில் சொல்வதாக உணர்ந்தோம்.
தூரத்தில் இருந்து கவனித்த எங்களுக்கே இந்த உணர்வு என்றால் சந்தித்த வலைப்பதிவர்களுக்கு எவ்வளவு நிறைவைக் கொடுத்து இருக்கும்.

சென்னபட்டினம்
லக்கிலுக்
பொன்ஸ்
வடுவூர்குமார்
பாலபாரதி
மிதக்கும் வெளி
அபி அப்பா
மோகன்தாஸ்

***************

பின் குறிப்பு : இந்தப் பதிவை தமிழ்மணத்தில் பதிவர் வட்டத்தில் இணைப்பதற்குப் பதிலாக சிறுகதை/கவிதை என தவறுதலாக வகைப்படுத்திவிட்டேன். மன்னிக்கவும்.

20 பின்னூட்டங்கள்/Comments:

said...

அட! இது ஒரு கலக்கல் ஸ்டைல் வினையூக்கி! இந்த கோணத்துல பாத்தா கூட அருமையா இருக்கே! சூப்பர் வாழ்த்துக்கள்:-)

நல்லா இருக்கு இந்த பதிவு:-))

said...

:)

அசத்தீட்டீயே தலைவா.. சூப்பரா இருக்குது கதை.

குட் அருமையான சிந்தனை.

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!

:)))

said...

:-D

Anonymous said...

///அங்க மொட்டைத்தலையா ஒருத்தர் இருக்காருல அவர் பேரு பாலபாரதி, அவர்தான் இந்த மீடிங்கோட ஆர்கனைசராம்"

"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு"///

இப்படி சொன்னதுக்கு

///அசத்தீட்டீயே தலைவா.. சூப்பரா இருக்குது கதை.

குட் அருமையான சிந்தனை.

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!///

எங்க தல பாலா இப்படி சொல்லியிருக்காரு...

இது உங்க ரெண்டு பேருக்குமே ஓவரா தெரியலையா ?

பா.க.ச பெங்களூர் கிளை
மடிவாளா போலீஸ்ஸ்டேஷன் அருகில்,
பொம்மனஹள்ளி,
பெங்களூர்.

Anonymous said...

ஆயிரம் "தல" இருந்தாலும் எங்க அண்ணன் பாலா தனி "தல"

பாலபாரதி ஆதரவு சங்கம் (பா.ஆ.ச)
ஆற்காடு ரோடு
சாலிகிராமம்

said...

வாவ்..... வித்தியாசமான கோணம்.

கலக்குறீங்க...... ரூம் போட்டு எல்லாம் யோசிக்கலை.

பார்க்ல உக்காந்து யோசிச்சிருக்காரு....

said...

ம்.. பின்னுங்க பிரதர்.. கற்பனைக் குதிரைக்கு எக்காலத்திலும் கடிவாளம் போட வேண்டாம்.. பறக்கட்டும்..

Anonymous said...

///இளைஞர்கள்
குழலி ///

இதை என்னால ஏத்துக்க முடியாது.

கு.க.ச,
மாகடி மெயின் ரோடு,
எல்.ஜி.சி.என்.எஸ்.குளோப் அருகில்,
பெங்களூர் கோல்ப் லிங்க் பார்க்,
பெங்களூரு

said...

//"அங்க மொட்டைத்தலையா ஒருத்தர் இருக்காருல அவர் பேரு பாலபாரதி, அவர்தான் இந்த மீடிங்கோட ஆர்கனைசராம்"

"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு"//

இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு

சொல்லிட்டேன்...

ஏதோ காமிராவுல பிளாஷ் ப்ராப்ளம் வரக்கூடாதுன்னு தலய சுத்தம் பண்ணிட்டு வந்தா இப்படில்லாமா வார்றது. (அதுவும் முடியில்லாதப்ப)

பாகச - டெல்லி கிளை
சென்ஷி

said...

அபி அப்பா:
"அட!இது ஒரு கலக்கல் ஸ்டைல்!
இ(எ)ந்த கோணத்துல பார்த்தா(லும்)கூட அருமையா இருக்கே! சூப்பர்
வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு இந்தப் பதிவு!"

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பீட்டே!

சிவஞானம்ஜி

said...

"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு

//


பதிவும்தான்...:)

said...

அபி அப்பா, பாலபாரதி, நந்தா, சிவஞானம்ஜி, உண்மைத்தமிழன, இலவசக்கொத்தனார், சென்ஷி, மின்னுதுமின்னல் செந்தழல் ரவி மற்றும் பா.க.ச, கு.க.ச, பா.ஆ.ச நண்பர்களும் நன்றி.

said...

/////இளைஞர்கள்
குழலி ///

இதை என்னால ஏத்துக்க முடியாது.

கு.க.ச,
மாகடி மெயின் ரோடு,
எல்.ஜி.சி.என்.எஸ்.குளோப் அருகில்,
பெங்களூர் கோல்ப் லிங்க் பார்க்,
பெங்களூரு
//
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க.....

இவன்
இளம்புயல் குழலி
அமுக பாசறை சிங்கை,
பாகச கிளை சிங்கை...

கதை சூப்பர்

said...

very nice approach...hats off..

said...

nice way of reporting ....hats off da

said...

//இளம்புயல் குழலி//
நானும் போனாப் போகுதுன்னு பார்த்துகிட்டே இருக்கேன்.. இதெல்லாம் ஓவருங்க குழலி.. புயல் பாவம்.. ;)

வினையூக்கி.. இந்த கார்த்திக் ஜெனி அங்கையும் வந்துட்டாங்களா? :))

//"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு"//
இது தான் தாங்கல.. ஜெனியை நல்ல கண்டாக்டரா பார்த்து காட்டுங்க ;)

said...

நல்ல, வித்தியாசமான கோணம்..இப்படி நல்லா எழுதியிருக்கிறவர் அந்த சந்திப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என்ற நினைப்பே சந்தோஷம் கொடுக்குது.

அது என்னென்னே தெரியலைங்க, வினையூக்கி. நல்லா எழுதாதவங்களைப் பார்த்து ரொம்ப நல்லா எழுதிறீங்கன்னு சொன்னால் கூட நம் பதிவர்கள் கண்டுக்கிறதில்லை. ஆனால் யாரையாவது கொஞ்சம் ஸ்மார்ட் அப்டின்னு சொல்லிட்டா பாய்ஞ்சு வந்திர்ராங்களே, ஏங்க. :)

Anonymous said...

//இவன்
இளம்புயல் குழலி
அமுக பாசறை சிங்கை,//

எங்க கொலைவெறிப்படை, சுனாமி பாசறைக்கெல்லாம் புதுப்போட்டியா?

said...

இப்படி கூட எழுதலாமுல்ல ! .... அருமை.

said...

நன்றி, சுந்தர், பொன்ஸ், தருமி சார், கப்பி