அரைநிமிடக் கதை
சொன்ன ரேட்டுக்கு ஒரு ஆட்டோக்காரர் வந்தார், நைட்டுக்காக டபுள் சார்ஜ் பண்ணவில்லை. அவரது முகத்தில் சாந்தம் தெரிந்தது, ஏற்கனவே மணி 11 ஆயிருந்தது. என் வீட்டுக்கு செல்லும் வழியில் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததை வழக்கமான ஆட்டோக்காரர்கள் போல் குறைசொல்லவில்லை. வீட்டின் முன் இறக்கிவிட்டு விட்டு திரும்பிய ஆட்டோவின் பின் பக்கம் பார்த்தேன், அவருடைய போட்டோ போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.
11 பின்னூட்டங்கள்/Comments:
ஐய்யா!
எங்களுக்குன்னே இன்னொரு எழுத்தாளர் வந்துட்டாரு!
அண்ணன் வினையூக்கி வாழ்க!
உன் போட்டோவை பாத்த 40 வயசு இருக்கும் போலக்கீது. நி என்ன 26ன்னு சொல்லி டபாக்கிரியா
//ஆட்டோக்காரன் வந்தான்//
ஏன் ன் ன் ?
//sivagnanamji(#16342789) said...
//ஆட்டோக்காரன் வந்தான்//
ஏன் ன் ன் ?
//
ன் எல்லாம் ர் ஆக மாற்றப்பட்டது,ஐயா
//Anonymous said...
உன் போட்டோவை பாத்த 40 வயசு இருக்கும் போலக்கீது. நி என்ன 26ன்னு சொல்லி டபாக்கிரியா
//
அனானி உண்மையக் கண்டுபிடிச்சுட்டிங்களா?பிளீஸ் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எதுக்கும் உங்க காலை ஒரு ஃபோட்டொ எடுத்து ஒரு பதிவு போடுங்க. நீங்க உண்மையிலேயே உயிரோடதான் இருக்கீங்களான்னு ஒரே சந்தேகமாயிருக்கு!!!;)
வினையூக்கி,
இப்போ விகடன், குமுதத்தில் நிறைய கால்பக்கக் கதைகள் படித்த தாக்கமோ! :-). நான் படிக்கும் போது எழுதிய ஒரு கதை:
இரவு தூக்கத்தில் திடீரென்று கண் விழித்தால் குப்பென்று மல்லிகைப்பூ வாசம். ஜல் ஜல் என்று சலங்கை சத்தம். திடீரென்று நெஞ்சில் எதையோ தூக்கி வைத்தது போல பாரம். இப்படியே பில்ட் அப் கொடுத்து விட்டுக் கடைசியில் தவழ்ந்து செல்லும் குட்டித் தங்கை இருட்டில் என் மீது ஏறி உட்கார்ந்திருந்தாள் என்று மர்மக் கதை எழுதியிருந்தேன்.
ஆவிகளுக்கு விடை கொடுத்து விட்டு தினசரி வாழ்க்கைக்கே கதை எழதிப் பாருங்களேன். நன்றாக வரும்.
அன்புடன்,
மா சிவகுமார்
//ஆவிகளுக்கு விடை கொடுத்து விட்டு தினசரி வாழ்க்கைக்கே கதை எழதிப் பாருங்களேன். நன்றாக வரும்.
//
வருகைக்கு நன்றி மா.சிவக்குமார்.
முயற்சிக்கின்றேன். உங்களின் கதையும் அருமை,
//ஆவிகளுக்கு விடை கொடுத்து விட்டு தினசரி வாழ்க்கைக்கே கதை எழதிப் பாருங்களேன். நன்றாக வரும்.
//
மாசி அவர்களை நாங்கள் வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!
//மாசி அவர்களை நாங்கள் வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!
//
ஹிஹிஹிஹி
//
//sivagnanamji(#16342789) said...
//ஆட்டோக்காரன் வந்தான்//
ஏன் ன் ன் ?
//
ன் எல்லாம் ர் ஆக மாற்றப்பட்டது,ஐயா
//
இந்த மாற்றம் அவசியமில்லை என்பது எனது கருத்து.
Post a Comment