Saturday, April 07, 2007

இன்னொரு அரைநிமிடக்கதை

இரண்டு நாட்களாக என் மொபைலுக்கு பின்னிரவுகளில் குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. டேண்ட்லைன் நெம்பர்தான், தூக்கத்தில் எடுக்கவே இல்லை. மீண்டும் நேற்று வந்தது. ம்ஹூம் எடுக்கவில்லை. காலையில் திரும்ப அந்த நெம்பருக்கு அழைத்துப் பார்த்தேன், நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் என்றது. என்னடா இது, அதிகப்படியான கியூரியாசிட்டியுடன் பி.எஸ்.என்.எல் சைட்டில் அந்த நெம்பரை அடித்துப் பார்த்தால் நெம்பர் இல்லை என்று சொன்னது. டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் பிரெண்டுக்கு அடித்து விவரத்தை சொன்னேன். அவரும் செக் பண்ணி பார்த்துவிட்டு அப்படி ஒரு நெம்பர் இன்னும் கொடுக்கவில்லை என சொன்னார். மனது திக்திக் என அடித்தது.
பின்னர் வேலைப்பளுவில் மறந்தே போய்விட்டேன். இரவு அந்த நினைவு இல்லாமல் தூங்கிகொண்டிருந்த போது மீண்டும் அதே அழைப்பு, மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பச்சைக்கலர் பொத்தானை அமுக்கி
"ஹலோ" என்றேன். !!!

"????$$$@@@@@@"

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஆஹா, கெளம்பிட்டாங்கைய்யா, கெளம்பிட்டாங்க!
(வ.வே.பாணியில்)

said...

பாத்து. பேய்வீடோ தெரியேலை நீங்க இருக்கிறவீடு. பின்ன என்னஒரே திகிலா கதை சொல்லுறீங்கள்.

said...

பயப்படாதீங்க!

எங்களைப் பத்தி கதை எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டு நாங்கதான் நன்றி சொல்ல கால் பண்ணினோம்!

- அமானுஷ்ய வாசகி

Anonymous said...

idhu kadhaya illa vivaranaya???

nalla eludhureenga...
aanaa innum konjam suspense vachu eludhunga...
unga kadhaya padichu nan ippo jeni fan aayiten :-)...

love stories ellam arumai...

tce la endha batch neenga? endha branch?

said...

//
Anonymous said...
idhu kadhaya illa vivaranaya???

nalla eludhureenga...
aanaa innum konjam suspense vachu eludhunga...
unga kadhaya padichu nan ippo jeni fan aayiten :-)...

love stories ellam arumai...

tce la endha batch neenga? endha branch?
//
அப்பாடா ரொம்ப நாள் கழித்து ஒரு "திட்டாத அனானி". தாங்க்ஸ்.


TCE ல 1997-2001 . EEE.

அடுத்த கதைல நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்.
நீங்களும் ஜெனிக்கு விசிறியா.

பிறகு நீங்களும் TCE yaa

said...

//ஆவி அம்மணி said...
பயப்படாதீங்க!

எங்களைப் பத்தி கதை எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டு நாங்கதான் நன்றி சொல்ல கால் பண்ணினோம்!

- அமானுஷ்ய வாசகி
// :):):)

said...

// நளாயினி said...
பாத்து. பேய்வீடோ தெரியேலை நீங்க இருக்கிறவீடு. பின்ன என்னஒரே திகிலா கதை சொல்லுறீங்கள்.
//

:):)

said...

பின்னூட்டம் போட தட்டினா எழுத்தே
தெரியல்லே.....
உங்க கண்ணுக்குத் தெரியுதா சொல்லுங்க

said...

//
sivagnanamji(#16342789) said...
பின்னூட்டம் போட தட்டினா எழுத்தே
தெரியல்லே.....
உங்க கண்ணுக்குத் தெரியுதா சொல்லுங்க
//
என்னங்க ஐயா, இப்படி பயமுறுத்தி விட்டுட்டீங்க.

said...

உங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பட்டம் கொடுக்கலாம்னு இருக்கோம்

said...

எனக்கு ஒரு சந்தேகம்-
உங்களுக்கு பேய் பிடிச்சிருக்கா?
இல்லை
உங்களுக்கு பேயை பிடிச்சிருக்கா?
இல்லை ஒருவேளை
பேயிக்கு உங்களை பிடிச்சிருக்கா?

எது எப்படியோ, இது கொஞ்சம் over அ தான் போயிட்டு இருக்கு.

said...

பேய்க்கு பேய் பிடிக்குமா?
பேய்க்கு பேயைப் பிடிக்குமா?
பேயைப் பேய்க்குப் பிடிக்குமா?
பே.......

said...

//sivagnanamji(#16342789) said...
பேய்க்கு பேய் பிடிக்குமா?
பேய்க்கு பேயைப் பிடிக்குமா?
பேயைப் பேய்க்குப் பிடிக்குமா?
பே.......
//
:):):):)

said...

mudiyala da.....enna pei mela evvalaue priyam ???