மூன்று வரியில் ஒரு கதை
மாலையிலிருந்து உட்கார்ந்து இருந்த நாற்காலியிலிருந்து எழுந்தேன்...
எழுந்தபின் நாற்காலி அங்கு இல்லை...
மணி 12 காட்டியது...
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
மாலையிலிருந்து உட்கார்ந்து இருந்த நாற்காலியிலிருந்து எழுந்தேன்...
எழுந்தபின் நாற்காலி அங்கு இல்லை...
மணி 12 காட்டியது...
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:38 AM
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
மண்டப எழுத்தாளர்களிடம் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் பெற்றுவருவதால், சுயமான எழுத்து எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆக, ஈயம் பூச...
21 பின்னூட்டங்கள்/Comments:
என்னங்க இது? திடீர்னு திகில் கதையெல்லாம் எழுதறீங்க!
நைட் 12 மணிக்கு நாற்காலியைக் காணோமா?
புரியவில்லையே!!!:(
//யோசிப்பவர் said...
புரியவில்லையே!!!:(
//
:), சுஜாதா சிலகாலங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் இந்த மாதிரிக்கதைகள் எழுதி இருந்தார்.
"உலகத்தின் கடைசி மனிதன் அறையில் உட்கார்ந்து இருந்தான், கதவு தட்டப்படுகிறது"
"மனிதன் பிரபஞ்சத்தின் எல்லைக்கு ஓடுகின்றான், இது தான் பிரபஞ்சத்தின் எல்லை என எழுதப்பட்டிருந்தது தலைகீழாக"
இது மாதிரி முயற்சிக்கப்பட்டது தான் இந்தக் கதை.
// ஆவி அம்மணி said...
என்னங்க இது? திடீர்னு திகில் கதையெல்லாம் எழுதறீங்க!
நைட் 12 மணிக்கு நாற்காலியைக் காணோமா?
//
ஹிஹிஹி , நமக்கு பேய்கள் எல்லாம் தூரத்து சொந்தக்காரங்க
//எழுந்தபின் நாற்காலி அங்கு இல்லை...
மணி 12 காட்டியது... //
இந்தக் கதையின் நீதி!
ஆவிகளிலும் அரசியல் வாதி ஆவிகள் உண்டு!
//ஹிஹிஹி , நமக்கு பேய்கள் எல்லாம் தூரத்து சொந்தக்காரங்க //
ஆமாம்! நாங்க இவருக்கு சம்மந்தி முறை ஆகுது!
வினையூக்கி எங்களுக்கு ஒண்ணு விட்ட பெரியப்பாவாக்கும்!
இவரு எனக்கு பங்காளி முறை!
நீதி:
அரசியல்வாதி வீட்டிற்கு
அடுத்த வீட்டில்
குடியிருக்காதே
//நீதி:
அரசியல்வாதி வீட்டிற்கு
அடுத்த வீட்டில்
குடியிருக்காதே
//
இதுவும் சூப்பர்.
சிவஞானம்ஜி,
தடாலடிகளில் பங்கு பெற்ற அனுபவம் பளிச்சிடுகிறது இந்த நீதியில்!
//ஆவி அம்மணி said...
இந்தக் கதையின் நீதி!
ஆவிகளிலும் அரசியல் வாதி ஆவிகள் உண்டு
sivagnanamji(#16342789) said...
நீதி:
அரசியல்வாதி வீட்டிற்கு
அடுத்த வீட்டில்
குடியிருக்காதே
//
பேய்கதையை அரசியல் கதை ஆக்கிய உங்கள் இருவருக்கும் ஒரு ஜே.
அதுக்குள்ள கத்திரி ஆரம்பிச்சுட்டுதோ?
:-)
//ஆவி அம்மணி said...
இந்தக் கதையின் நீதி!
ஆவிகளிலும் அரசியல் வாதி ஆவிகள் உண்டு
sivagnanamji(#16342789) said...
நீதி:
அரசியல்வாதி வீட்டிற்கு
அடுத்த வீட்டில்
குடியிருக்காதே
//
பேய்கதையை அரசியல் கதை ஆக்கிய உங்கள் இருவருக்கும் ஒரு ஜே.
// மாசிலா said...
அதுக்குள்ள கத்திரி ஆரம்பிச்சுட்டுதோ?
:-)
//
ஹிஹிஹி. :):)
நன்றி ஆ.அ அவர்களே...
//"மனிதன் பிரபஞ்சத்தின் எல்லைக்கு ஓடுகின்றான், இது தான் பிரபஞ்சத்தின் எல்லை என எழுதப்பட்டிருந்தது தலைகீழாக"
இது மாதிரி முயற்சிக்கப்பட்டது தான் இந்தக் கதை. //
அது தெரிகிறது வினையூக்கி!!! எனக்கு முதலில் நீங்கள் எழுதியிருப்பது ஆவி கதைன்னு தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் குழப்பம்!!
கொஞ்சம் கீழே பாருங்கள், நான் கூட அது மாதிரி சில முயற்சிகள் செய்திருக்கிறேன்!!!
வெயில், பிறந்த நாள், மனிதர் உணர்ந்து கொள்ள... , வரம்
//
கொஞ்சம் கீழே பாருங்கள், நான் கூட அது மாதிரி சில முயற்சிகள் செய்திருக்கிறேன்!!!
வெயில், பிறந்த நாள், மனிதர் உணர்ந்து கொள்ள... , வரம்
//
யோசிப்பவரே,
உங்கள் குட்டி கதைகள் அனைத்தையும் படித்தேன். அருமை. பின்னூட்டமும் போட்டு இருக்கேன்.
சுட்டிகளுக்கு நன்றி.
சிவஞானம்ஜி ஐயாவின் பஞ்ச் அருமை. வாய் விட்டுச் சிரித்து விட்டேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி மா.சிவகுமார் அவர்களே
வினையூக்கி,
ஒன்றுமே விளங்கவில்லையே! என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தக் கதையின் கரு என்ன?
// வெற்றி said...
வினையூக்கி,
ஒன்றுமே விளங்கவில்லையே! என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தக் கதையின் கரு என்ன?
//
வெற்றி சார்,
பொழுது போக்கு அம்சத்துடன் எழுதப்பட்ட ஒரு சுஜாதா பாணியில் முயற்சி செய்யப்பட்ட திகில் கதை.
Post a Comment