ஆர்கட்ல தேடு - சிறுகதை
"டேய் கார்த்தி, நீ ஆர்கட்ல இருக்கியா" காலங்காத்தால வந்தவுடன் ஜெனி கேட்டாள்.
ஜெனிக்கு ஏதாவது புதுசா கண்டுபிடிச்சா உடனே யாருக்காவது சொல்லிடனும், இல்லை என்றால் அவளுக்கு தலை உடனே வெடித்து விடும். அடுத்த சீட்ல இருக்கிற கார்த்திக்கு தான் பிரச்சினை. தொண தொணவென்று ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாள் இல்லை, பாடிட்டு இருப்பாள்.
"கேள்விப்பட்டு இருக்கேன், ஜாயின் பண்ணல?" என்றான் கார்த்தி.
"நேத்து என்னோட ஸ்கூல் பிரெண்ட்ஸ் எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சேன், எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா, ஒவ்வொருத்தரையா லிஸ்ட்ல சேர்த்து டெஸ்டிமொனி எழுதிட்டு இருக்கேன். . என் பின்னாடி சுத்துன ஸ்கூல் சீனியர்ஸையும் கண்டுபிடிச்சுட்டேன்" சொல்லிட்டு ஹா ஹா என சிரித்தாள் ஜெனி.
"ஆமாம், நீ ஆபிஸ்ல போடுற கடலைப் பத்தாத??"
"போடா, மங்குனி, " என்று சொல்லி முறைத்துவிட்டு தன் ஆர்கட் பக்கத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.
கார்த்தி, மெயில் பக்கம் திறந்து வைத்து இருந்தாலே, பி-எம் வர்றப்ப மூடிடுவான். இதுல ஆர்கட் எப்படி. எல்லாவற்றுக்கும் மேல புது நட்பை உருவாக்குவதிலோ , இல்லை பழைய நட்பை புதுப்பித்துக் கொள்ளுதலிலோ அவனுக்கு ஆர்வம் இல்லை.
ஜெனி ஆர்கட்டை பத்திப் பேசிட்டு போனப்பிறகு, கார்த்திக்கு பள்ளிக்கூட ஞாபகம் வர ஆரம்பித்தது. குறிப்பாக அந்த பத்தாம் வகுப்பு.
தண்டக்காரப் பசங்களா எனத்திட்டும் அறிவியல் வாத்தியார். "டிபன் பாக்ஸ்" சத்தம் கேட்டால் மட்டும் அடிக்கும் தமிழ் வாத்தியார், ஹிடலரை நல்லவன் என்று சொன்ன சமூக அறிவியல் வாத்தியார். "ரெபிடெக்ஸ்" ஆங்கில வாத்தியார். ம்ம்ம்ம்ம்ம் எல்லாரையும் விட கணக்கு வாத்தியாரை தான் கார்த்திகுப்பிடிக்கும். கணக்கு நல்லா சொல்லிக் கொடுத்ததுக்காக இல்லை. அந்த கணக்குனாலதான் கார்த்திக்கு ரம்யாவோட அறிமுகம் கிடச்சது, ரம்யாவோட குடும்பம், கார்த்தி குடியிருந்த வீட்டு அடுத்த போர்ஷனுக்கு புதுசா குடிவந்தவங்க. ரம்யாவும் அப்போ தான். ஒரு நாள் ரம்யா அம்மா வந்து ரம்யாவுக்கு மேத்ஸ் சரியா படிக்க வரல, கார்த்தியினால் சொல்லித்தர முடியுமா என கார்த்தி அம்மா கிட்ட கேட்ட போது கார்த்தியோட அம்மா அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே இல்லை. அதற்குப்பிறகு கார்த்தி கணக்கில தனி கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
காலாண்டுல அவள் 75 மார்க் எடுத்தப்ப அவங்க வீட்டுல ஸ்வீட் செய்து கார்த்தி வீட்டுல கொடுத்தாங்க. கொஞ்ச நாள்ல கணக்கு மட்டுமின்றி மற்ற பாடங்களையும் இருவரும் ஒன்றாகப் படிக்க ஆரம்பித்த போது ரம்யாவோட ரேங்க் கும் முன்னேற ஆரம்பித்தது. கார்த்தியோட ஸ்கூல் பசங்க கார்த்தியையும் ரம்யாவையும் சேர்த்து வைத்து கிண்டல் பண்ணபோது கார்த்தி கோபப்பட்டாலும் உள்ளூர ரசிக்க ஆரம்பித்தான். அவளோட அருகாமை, அவனுக்கு ஒரு வகையான சந்தோசம் தருகிறது என மட்டும் புரிந்தது .
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ரம்யாவே எதிர்பாரா வண்ணம் 445/500 எடுத்தாள். கார்த்திக்கு 470 வந்துச்சு. ஸ்டேட் ரேங்க் எதுவும் எடுக்கலைன்னு கார்த்தி வீட்டுல கொஞ்சம் வருத்தம் தான்.
ரம்யா வோட நல்ல மார்க்குக்குகாக கார்த்திக்கு ரம்யா வீட்டிலே டிரஸ் எடுத்துக் கொடுத்தாங்க.
அந்த வருசம் கார்த்தியோட அப்பாக்கு மதுரைக்கு மாற்றல் ஆனது.
பத்து பக்கம் ஆட்டோகிராப் ரம்யா எழுதிக் கொடுத்தாள்.கையை அழுத்தம பிடிச்சுக்கிட்டு தாங்கஸ் சொன்னாள்.
அப்படியே நாள் ஓடிப்போச்சு, இஞ்சினியரிங்ல கார்த்தியோட 10 வது கிளாஸ்மேட்டைப் பார்த்தப்ப, ரம்யா +2 ல ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்ததாகவும், இப்போ அங்களம்மன் ல இஞ்சினியரிங் பண்ணுவதாகவும் கேள்விப்பட்டான். அதன் பின் அவ்வப்போது பத்தாம் வகுப்பு நினைப்பு வரும்போதெல்லாம் ரம்யாவும் நினைவின் ஊடே வருவாள்
நிகழ்காலத்துக்கு வந்தான் கார்த்திக்.
"ஒரு வேளை ஆர்கட்ல ரம்யாவைத் தேடினா கிடைப்பாளா? ஞாபகம் இருக்குமா? அந்த பழைய ரம்யாவா இருப்பாளா? கால ஓட்டம் அவள்கிட்ட மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமா..
அந்த மாற்றங்கள் இந்த பசுமையான பத்தாம் வகுப்பு நினைவுகளை இடமாற்றம் செய்துவிடுமா?
வேண்டாம், மனதில் உறைய வைத்த பசுமையான தருணங்கள் மட்டும் போதும், ஆர்கட்ல யோ வேறு எந்த வடிவிலோ அவளைத் தேட வேண்டாம்" என கார்த்தி முடிவு செய்தான்.
ஆனால் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் ரம்யா கார்த்தியை ஆர்கட்டில் தேடிக் கொண்டிருந்தாள்.
11 பின்னூட்டங்கள்/Comments:
//தருணங்கள் மட்டும் போதும்......//
உண்மைதான்!
இது அனியாயம் அண்ணா
:)
Very Interesting..! Wow, you can bring out wonderful feelings.
நன்றி சிவஞானம்ஜி பூர்னிமா அல்கெமிஸ்ட் சாஃப்ட்சந்த்
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பழைய ஞாபகங்கள் என்னை புரட்டிப் போடுகின்றன.
பி.கு.: நான் இன்னும் ஆர்கூட்டில் சேரவில்லை.(கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு காரணத்துக்காக!!)
நல்லாக்கீதுப்பா! ஆனா பழசை எல்லாம் நாபகப்படுத்திட்டியே!
வாவ்... ரொம்ப நல்ல கதை. பழசை திரும்பிப் பார்க்கிற மாதிரி இருக்கு.
ஆர்கட் ல நானும் இதுவரை சேரவே இல்லை. கடலை போடறதுக்குதான் அது use ஆகுதுன்னு எனக்கு ஒரு நினைப்பு. இதை படிச்சதுக்கப்புறம் நானும் சேர்ந்து பார்க்கலாம்ணு தோணுது....
பேசாம உங்களை ஆர்கட்டோட கொ.ப.செ வா அறி்விச்சுடலாமா?
நந்தா உங்க கமெண்டுக்கு ஸ்மைலி
ஆஹா...அருமை.நானும் நண்பர்களைத்தேடுகிறேன். உண்மைக்கதை. வாழ்த்துக்கள்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
அன்பு வினையூக்கி,
ஏற்கனவே சில முறை வந்திருந்தாலும், இதுதான் முதல் முறையாக கவனித்து அனைத்து பதிவினையும் படிக்கின்றேன்.
அருமை.
ரசித்தேன்
ஃபிக்ஷன் டைப் கதைகள் அனாசயமாக வருகிறது.
ரொமான்ஸ்ம் கூட
வாழ்த்துக்கள்
:)
Post a Comment