Tuesday, March 20, 2007

மாற்றங்களே மாறாதது - சிறுகதை

நாலு நாளா மனசே சரியில்லை, ஜெனிக்கு கல்யாணம் ஆயிடுச்சு, கல்யாணம் ஆயிடுச்சு என்பதைவிட, அவள் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்காதது இன்னும் கஷ்டமாயிருந்தது.
ஆபிஸ்ல அவளோட கடைசி வேலை நாள் அன்று என்னிடம் வந்து, "சாரி, கார்த்திக், உனக்கு என்னோட கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க விருப்பமில்லை, என் கல்யாணத்திற்கு நீ வருவதை நான் விரும்பவில்லை" என்று சொல்லிப்போனாள்.
இப்படி சொல்ல, எப்படி இவளுக்கு மனசு வந்தது. அவள் என்னிடம் வந்து வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், சுமுகமாக பிரிந்துவிடலாம் என்று சொல்லிய போது கூட அவளுக்கு நான் எந்தவித மன உளைச்சலையும் தரவில்லை. அதன் பிறகும் நானும் ஜெனியும் ஒரு மாதம் ஒரே டீமில் வேலை பார்த்தோம்.
உலகத்தில் "உதாசீனப்படுத்துதல்" தான் மிக கடுமையான மனவருத்தத்தை அளிக்கக்கூடியது. I dont deserve that.
ஒரு வேளை "குற்ற உணர்ச்சியாக இருக்குமோ" .
எதுவாகினும், ஒரு நண்பனாக, சக பணியாளனாக என்னைக்கூப்பிட்டு இருக்கலாம். அதைப்பற்றி நினைக்க நினைக்க ஆத்திரம் தான் அதிகம் ஆனது.

எவ்வளவுதான் தவிர்க்க நினைத்தாலும் அவளுக்காக நான் விட்டுக்கொடுத்த விஷயங்கள்,பட்ட சிரமங்கள், செய்த செலவுகள் எல்லாம் நினைவில் வந்து போனது. ச்சே ச்சே தப்பு, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது என்று உள்ளுனர்வு சொன்னாலும், மீண்டும் மிண்டும் அதே நினைவுகள் வந்து போனது.

இப்படியே இருந்தால், இந்த வெறுப்புணர்வு அதிகமாகி, மனரீதியிலான பிரச்சினைகளில் கொண்டு வந்து விட்டுவிடும் என்பது மட்டும் தெரிந்தது.

இந்த என்ணங்கள் போகனும்னா, வேற மாற்று எண்ணங்களை கொண்டு வரனுமே, ஒன்று நிச்சயமாக எனக்குப் புரிந்தது, இந்த ஒரு மாததில் அதிக நேரம் எனக்கு கிடைக்கிறது.ஜெனி இருந்தப்ப என்னோட ஒவ்வோரு அசைவுகளும் அவளை சுற்றியே இருக்கும், வார இறுதியும் அப்படித்தான். ஆபிஸ் ல பாதி நேரம் என் வேலையை முடிச்சுட்டு அவளோட புரோகிராம டீ-பக் பண்றதிலேயே மீதி பாதிநேரம் போகும், ஆபிஸ் முடிஞ்ச பிறகு அவளோட டின்னர், ஹாஸ்டல்ல டிராப், அதுக்கப்புறம் எஸ்.எம்.எஸ், கால் பணறது, காலையில் பிக்-அப்

எல்லாம் ஜெனி மயம் ஆ இருந்துச்சு.

ஆனால் இப்போ திடிர்னு ஒரு நாளைக்கு அதிகமா சில மணி நேரம் கிடைச்சுட்ட மாதிரி இருக்கு, ஏதாவது பண்ணனும். ரெண்டு மாசம் முன்னாடி, என்னோட காலேஜ் சீனியர் முகப்பேர் பக்கத்தில ஒரு ஆதரவளிப்போர் இல்லம் இருக்கு, எதாவது நன்கொடை தர்றீயான்னு கேட்டாரு, அப்படி எதுவும் தரமுடியலேன்னாலும் ஒரு முறை வந்து அந்த குழந்தைகளிடம் பேசிட்டு போன்னு கேட்டார்.

நான் விதண்டாவாதமாக அதை நடத்துபவர்களின் நேர்மை எப்படி என்று நக்கலடித்ததால் கடுப்பாயிட்டார். ரொம்ப கோபமா, "உன்னாலயோ என்னாலயோ நாலு குழந்தைகளுக்கு சப்போர்ட் பண்ண முடியாது? ஆனால் அப்படி சப்போர்ட் பண்றவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்" சொல்லிட்டு போனைக் கட் பண்ணிட்டார்.

ம்ம்ம்,முதல்ல அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போகனும். சீனியருக்கு போன் செய்தேன். அவர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

அதுவரை என்ன பண்றது, பேப்பரை எடுத்துப் படித்தேன், அதில் அசோக்நகரில் ஏழை மாணவர்களுக்கு கணினி அறிவு தர ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், சொல்லிக்கொடுக்க தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்படப்பட்டிருந்தது. ம்ம்ம்ம், அந்த அட்ரஸை குறித்துக் கொண்டேன்.

இண்டர்நெட்டை கனெக்ட் பண்ணி, ஆன்லலன்ல இருந்த ஜூனியர்ஸ், சீனியர்ஸ் கிட்ட சாட் பண்ண ஆரம்பிச்சதில் நேரம் போனதே தெரியவில்லை, வாழ்க்கையில் எத்தனை விசயங்கள் மாறினாலும் கல்லூரி நினைவுகளை எத்தனை முறை பகிர்ந்து கொண்டாலும் அதன் சுவாரசியம் குறைவதே இல்லல. நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளாமைக்கு கடிந்து கொண்டனர். எல்லோருக்கும் என்னோட புதிய மொபைல் நெம்பரைக் கொடுத்து, எப்போ வேண்டுமனாலும் தொடர்பு கொள்ள சொன்னேன்.

இந்த வருஷம் என் காலேஜ்ல கேம்பஸ் ல போணியாகாத முன்னறிமுகம் இல்லாத ஜூனியர்ஸ்க்கு என் மெயில் ஐடி கொடுக்குமாறு ஜூனியர்ஸைக் கேட்டுக் கொண்டேன்.
அப்படியே ஜெனிக்கும் ஒரு வாழ்த்து இ-மெயில் அனுப்ப்பிவிட்டு கிளம்பலானேன். எப்போவோ ஆரம்பிச்ச பிளாக்குக்கு ஒரு திகில் கதை எழுதிட்டு அப்டேட் பண்ணேன்.

என்னவொரு மாற்றம், சில மணி நேரத்தில், "சைகோ" ஆகிவிடுவோமோ என்ற பயத்திற்கு மனதார நன்றி சொன்னேன். ம்ம்ம் இந்த பயம் மட்டும் இல்லையெனில் மனிதன் பைத்தியக்காரனாக மட்டுமே இருந்த்திருப்பான். மாற்றங்களையும் என் மனது ஏற்றுக்கொள்ளத் தயாரனது சந்தோசமாக இருந்தது,

" A candle loses nothing if it is used to light another one" ஒரு எஸ்.எம்.எஸைப் படித்து விட்டு முன்பு எப்போதும் இல்லாத நிதானத்துடன், புத்துணர்ச்சியுடன் பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

18 பின்னூட்டங்கள்/Comments:

said...

பலருக்கு வழிகாட்டும் தரமான
சிறுகதை.......

said...

nice one da...very refreshing....keep it up

said...

Very Nice Selva. I like the story line. "Change is unchangeable", you have potraited it very well. True, at times we realise the changes that happen in a very short span of time.

"For once you have loved, you will always Love, for whats in your mind may escape, but whats in your heart remains forever".

The ones who have ever loved in life can make more meaning out of your short story. In just two pages it reflects a lot of feelings.

Very true Selva, its very painful to be ignored by the one we love the most & more than anything in this world.

And its very healthy to divert the energy towards the wellness of the society. Bcoz nothing else in this world generates such an energy level as Love does. And once generated it should not be wasted in sorrow.

Keep the good work going...

said...

படிச்சுட்டு வந்து கமண்டுறேன்:-))

said...

Very Nice Selva.

I like the story line. "Change is unchangeable", you have potraited it very well. True, at times we realise the changes that happen in a very short span of time.

"For once you have loved, you will always Love, for whats in your mind may escape, but whats in your heart remains forever".

The ones who have ever loved in life can make more meaning out of your short story. In just two pages it reflects a lot of feelings.

Very true Selva, its very painful to be ignored by the the one we love the most & more than anything in this world.

Nothing in this world generates such a high energy as Love does, and its good to divert it towards the wellness of the society. It should not be wasted in sorrow.

Keep the good work going...

said...

Very Nice Selva.

I like the story line. "Change is unchangeable", you have potraited it very well. True, at times we realise the changes that happen in a very short

span of time.

"For once you have loved, you will always Love, for whats in your mind may escape, but whats in your heart remains forever".

The ones who have ever loved in life can make more meaning out of your short story. In just two pages it reflects a lot of feelings.

Very true Selva, its very painful to be ignored by the the one we love the most & more than anything in this world.

Nothing in this world generates such a high energy as Love does, and its good to divert it towards the wellness of the society. It should not be

wasted in sorrow.

Keep the good work going...

said...

"திரும்பவும் ஜெனியா! கதைக்குக் கூட வேற ஒருத்திய நினைச்சு பார்க்கக் கூடாதா! ;)" அப்டீன்னு திட்டலாம்னு வந்தேன்! நல்ல கதை.. ரொம்ப நல்லா இருக்கு :)))

Muthupalaniappan said...

Story is really good, but still it is looks an inspiration from your life. As a creator you have to be very independent and loose your nerves. No more indian sentiments. Its time you take your next big step as a creator. All the best!!!!!!!!!

said...

{ பொன்ஸ் said...
"திரும்பவும் ஜெனியா! கதைக்குக் கூட வேற ஒருத்திய நினைச்சு பார்க்கக் கூடாதா! ;)" அப்டீன்னு திட்டலாம்னு வந்தேன்! நல்ல கதை.. ரொம்ப நல்லா இருக்கு :)))
}

ஹிஹிஹி, நன்றி பொன்ஸ். ஜெனி என்பது ஒரு கற்பனைகதாபாத்திரம் மட்டுமே :):):)

said...

//
sivagnanamji(#16342789) said...
பலருக்கு வழிகாட்டும் தரமான
சிறுகதை.......
//
நன்றி சிவஞானம்ஜி ஐயா. இப்போதெல்லாம் கதைகள் போட்டவுடன் உங்கள் பின்னூட்டத்தை என்னையும் அறியாமல் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

said...

//At 12:45 AM, அபி அப்பா said…

படிச்சுட்டு வந்து கமண்டுறேன்:-))
//
அபி அப்பா இன்னும் ஆளக்காணோம்

said...

//ஜெனி இருந்தப்ப என்னோட ஒவ்வோரு அசைவுகளும் அவளை சுற்றியே இருக்கும், வார இறுதியும் அப்படித்தான்.எல்லாம் ஜெனி மயம் ஆ இருந்துச்ச//

//உலகத்தில் "உதாசீனப்படுத்துதல்" தான் மிக கடுமையான மனவருத்தத்தை அளிக்கக்கூடியது.//

//எவ்வளவுதான் தவிர்க்க நினைத்தாலும் அவளுக்காக நான் விட்டுக்கொடுத்த விஷயங்கள்,பட்ட சிரமங்கள், செய்த செலவுகள் எல்லாம் நினைவில் வந்து போனது. ச்சே ச்சே தப்பு, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது என்று உள்ளுனர்வு சொன்னாலும், மீண்டும் மிண்டும் அதே நினைவுகள் வந்து போனது.//

அனுபவித்து எழுதியது போலவே இருக்கிறது. உண்மையான வார்த்தைகள். காயப்பட்டவரின் மனதை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

நல்ல கதை. வாழ்த்துக்கள்....

said...

//Nandha Said அனுபவித்து எழுதியது போலவே இருக்கிறது. உண்மையான வார்த்தைகள். காயப்பட்டவரின் மனதை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
//
நன்றி நந்தா.. ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் அனுபவமாக பெரும்பாலும் அமைந்திடுவது தவிர்க்க இயலாது. உங்களின் கவிதைகளும் படித்தேன் அருமை.

said...

Avasarama comment adikkuren. So, Tamil la adikka mudiyala. Mannichukkonga.

Kathai nalla irukku. Way to go! Ithu mathiri niraiya eluthunga.
Infact, ellorum maruratha vida, naamey maruvathu thaan namakku acharyathai kudukkum. Atha nalla, +ve a solli irukkeenga.

But, orey oru kelvi -
ungal kathaigal ellamey, oru aan oda perspectivela mattumey eppothum iruppathen?

said...

Did u get the comment that i typed before a few minutes?
There was an error when i submitted it.

said...

//ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் அனுபவமாக பெரும்பாலும் அமைந்திடுவது தவிர்க்க இயலாது.//

// ஜெனி என்பது ஒரு கற்பனைகதாபாத்திரம் மட்டுமே//
நான் நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்! நம்பவே மாட்டேன்!!! :)))))))

said...

{ref பொன்ஸ் said...
//ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் அனுபவமாக பெரும்பாலும் அமைந்திடுவது தவிர்க்க இயலாது.//

// ஜெனி என்பது ஒரு கற்பனைகதாபாத்திரம் மட்டுமே//
நான் நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்! நம்பவே மாட்டேன்!!! :)))))))
ref}
பார்த்து தெரிந்த விசயங்கள் கூட அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே :):):):) ஹிஹிஹி. அப்புறம் அந்த லவ் ஸ்டோரி வாங்கிப் படித்து விட்டேன்.

said...

இந்த ஒரு மாததில் அதிக நேரம் எனக்கு கிடைக்கிறது.ஜெனி இருந்தப்ப என்னோட ஒவ்வோரு அசைவுகளும் அவளை சுற்றியே இருக்கும், வார இறுதியும் அப்படித்தான். ஆபிஸ் ல பாதி நேரம் என் வேலையை முடிச்சுட்டு அவளோட புரோகிராம டீ-பக் பண்றதிலேயே மீதி பாதிநேரம் போகும், ஆபிஸ் முடிஞ்ச பிறகு அவளோட டின்னர், ஹாஸ்டல்ல டிராப், அதுக்கப்புறம் எஸ்.எம்.எஸ், கால் பணறது, காலையில் பிக்-அப்

எல்லாம் ஜெனி மயம் ஆ இருந்துச்சு.

ஆனால் இப்போ திடிர்னு ஒரு நாளைக்கு அதிகமா சில மணி நேரம் கிடைச்சுட்ட மாதிரி இருக்கு,

ம்ம்ம்,முதல்ல அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போகனும். சீனியருக்கு போன் செய்தேன். அவர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

அதுவரை என்ன பண்றது, பேப்பரை எடுத்துப் படித்தேன், அதில் அசோக்நகரில் ஏழை மாணவர்களுக்கு கணினி அறிவு தர ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், சொல்லிக்கொடுக்க தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்படப்பட்டிருந்தது. ம்ம்ம்ம், அந்த அட்ரஸை குறித்துக் கொண்டேன்.

"வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்து பார். வீழ்ந்து விடாதே என அழகாக புரியவைத்திருக்கிறீர்கள்."