Tuesday, March 20, 2007

எந்தக் கடையிலே நீ அரிசி வாங்குற? !!

குண்டாயிருப்பது அழகு, அதிலும் குண்டாயிருப்பவர்கள் விளையாட்டில் இருப்பது இன்னும் அழகு. பெர்முடா அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளர் திவெயின் லெவராக் மல்யுத்த வீரர் போல கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தாலும், ஆட்டத்திலும் கண்ணும் கருத்துமாய் இருந்து உத்தப்பாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார். அதிலும் அவர் ஓடிய ஓட்டம் பல நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்ளுக்கு நினைவில் இருக்கும். 120 கிலோ எடையுடன், முழு ஈடுபாட்டுடன்,உற்சாகமாக இவர் கிரிக்கெட் ஆடும் அழகு கண்கொள்ளாக் காட்சி.



இவர் பெர்முடாவில் காவல்துறையில் பணிபுரிகிறாராம். சிறுவயதில் 110 தடை தாண்டி ஒடும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவராம். கால்பந்தும் விளையாடி இருக்கிறார்.

இவரின் பிபிசி பேட்டி
இங்கே

போட்டிகளில் வெற்றி பெறுவதை விட "முழுமையாக பங்குபெறுதல்" என்பது தான் முக்கியம். உற்சாக ஆட்டத்தை தொடருங்கள் Mr."Rock"


இவரின் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய தகவல்களை பெற இங்கே சொடுக்கவும்

நன்றி : கிரிகின்போ.காம், விக்கிபீடியா

7 பின்னூட்டங்கள்/Comments:

கார்த்திக் பிரபு said...

சில பேரை பார்த்தாலே பிடித்தி விடும் இவர் அந்த வகை , சச்சினின் குழந்தை தனமான சிரிப்பு போல

இவரை நம்ம ஆட்கள் நேத்து படுத்தி எடுத்தாலும் சிரிச்சுகிட்டே விளையாடினார் ,கமென் ட்ரில வேற இவரை ராக் ராக் னு தான் சொல்லி கிண்டல் பண்ணாங்க ..நல்ல பதிவு

வினையூக்கி said...

ஆமாம்.கார்த்திக், இவருடைய "ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட்" பாராட்டத்தக்கது.

Anonymous said...

இன்னைக்கு தினமலர்ல இவர "ஊத்தப்பனிடம் சிக்கிய உத்தப்பா" ந்னு இவரை ஊத்தப்பான்னு சொல்லியிருக்காங்க. உருவத்த வச்சு இப்படி கிண்டல் பண்றது தப்பு!

Naufal MQ said...

விளையாட்டிற்கு உடல் எடை ஒரு தடையில்லை என்பதை நிரூபிப்பது போல இருக்கிறது இவரது ஆட்டம். :)

அக்மார்க் போலிஸ்காரர் உடல்வாகு.

கவிதா | Kavitha said...

நான் கூட இவரை தான் நேற்றைக்கு பார்த்துக்கிட்டே இருந்தேன்.. எப்படி இவரால்..இப்படி ஓட முடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது.. மேலும்.. அவர் முதல் கேட்ச்.. சூப்பருங்க.. அதுக்கு அப்புறம் அவர் கொடுத்த முத்தமும்.. மறக்கவே முடியலைங்க.. :))))))) எளிதாக பிடித்து போகும் மனிதர்களில் ஒருவர் இல்லையா?!!

வினையூக்கி said...

//இன்னைக்கு தினமலர்ல இவர "ஊத்தப்பனிடம் சிக்கிய உத்தப்பா" ந்னு இவரை ஊத்தப்பான்னு சொல்லியிருக்காங்க. உருவத்த வச்சு இப்படி கிண்டல் பண்றது தப்பு! //

அனானி, நான் கிண்டல் பன்ண பதிவு போடலைங்க.. அவரின் உற்சாகத்தைப்பாராட்டும் விதத்தில் தான் பதிவு அமைஞ்சிருக்கு.

siva gnanamji(#18100882083107547329) said...

100 கிலோவை வச்சிட்டு நான் திண்டாடுறேன்..இவுரு 120..என்னா போடு போட்றார்..அதிலும் அந்த மைதானத்தில் சுத்திசுத்தி வந்து முத்தம் கொடுத்தது...
சர்தான் பசங்க இன்னிக்கும் மாட்டிகிட்டாங்க னுதான் நினைச்சேன்