Thursday, March 08, 2007

ஓர் இரவில் நானும் ஜெனியும் - சிறுகதை

இந்த தெருவிலே அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி, 8 மணிக்கே வரப் பயப்படுவாங்க, ஆனால் கடைசி மூணு வருசத்துல லேண்ட் ரேட்டு எக்குத்தப்பா எகிறி மதுரவயல் போற வரைக்கும் அபார்ட்மெண்ட்ஸ் , வீடுகள் , சூப்பர் மார்கெட், டாஸ்மாக் பார்னு ஏரியா ஏகத்துக்கும் டெவலப் ஆயிடுச்சு. மெட்ராஸ் வந்தப்புதுசுல ஒருத்தர் ஒரு கிரவுண்டு 4 லடசத்துக்கு வேணுமான்னு கேட்டார். வாங்கி போட்டு இருந்தா இன்னய ரேட்டுக்கு ஏகத்துக்குப் போயிருக்கும்.

இப்போ மணி பத்தரை, இருந்தாலும் ஜன நடமாட்டம் இருந்து கிட்டு தான் இருக்கு. வழக்கமா நான் பைக்கில் வரும்போது குரைக்காத நாய்கள், நடந்து வரும்போது எரிச்சல் ஊட்டும்படி குரைக்க ஆரம்பித்தன. என்ன பண்றது, நேற்றைய என் நிலைமை வேற..இன்னக்கி என் நிலைமை வேற. கடைசி 20 மணி நேரத்திலே மெட்றாஸ் ல பாதி ஏரியா சுத்திட்டேன். தடுக்க ஆள் கிடையாது இனிமேல் , பயமில்லை.

தன்னால் புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்குதான் மனுஷன் அதிகமா பயப்படுறான், புரிதல் அதிகம் ஆகும்போது, தெளிவு பிறந்து பயம் போகிறது. கிரவுண்டைத்தாண்டி இருக்கிற அபார்ண்ட்மெண்ட்ஸ்ல மூனாவது புளோர்ல தான் நான் தனியா குடியிருக்கேன். சரியா சொல்லப்போனால் குடியிருந்தேன். சரி கடைசியா ஒரு முறை வீட்டைப் பார்த்துட்டுபோயிடாலாம்னு போய்க்கிட்டு இருக்கேன்.

வழக்கமா நான் அயர்ன் துணிக்கொடுக்கும் கடையைத் தாண்டி போகையில், ஒரு பெண் , 25 வயது இருக்கலாம், என்னை உற்றுப் பார்ப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. அட அது பிரமை இல்லை. என்னைத்தான் பார்க்கிறாள்., அட சிரிக்கிறாள்.
ஆனால்? என்னை எப்படி இவள் பார்த்து சிரிக்கிறாள், இவளை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லையே, மேலும் !!!!! ?????

முழுக்கை பச்சைக்கலர் சுடிதார் அணிந்து, பழைய நடிகை ஜெயசுதா போல் இருந்தாள், பக்கத்தில் வந்து ஹாய் சொன்னாள், அட இது என்ன அதிசயம் , என்னைப்பார்த்து ஒரு பெண், அதுவும் அழகான இளம்பெண் ..

"இதுக்கு முன்னாடி நான் உங்களைப் பார்த்தது இல்லியே?" என்றேன் ஆச்சார்யத்துடன்

"நான் உங்களை கடைசி ஒரு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், நீங்க பைக்கில லேப்டாப்போட இந்த டைம்முக்கு போவீங்க சரியா?"

"ம்ம்ம் சரி, என் பேரு கார்த்திக், உங்க பேரு?"

"என் பேரு ஜெனி".

"வீடு எங்க? "

"நேரப் போய் லெஃப்ட் எடுத்து , டாஸ்மாக்கைத்தாண்டி வர்ற தனி வீடு, அம்மா, அப்பா கடைசி ஒரு வருஷமா இங்க தான் இருக்காங்க"

"ஜெனி, இந்த டைம்ல நீங்க தனியா எப்படி? போவிங்க "

அந்த சமயத்திலே பொலிஸ் வண்டி எங்களை கிராஸ் செயதது. வழக்கமாக இந்த நேரத்தில் ஒரு பெண் தனியா நின்னு பேசிட்டு இருந்தால் விசாரிக்கும் பொலிஸ் ஜெனியை கண்டுகொள்ளாவில்லை. ஒரு வேளைக் கவனிக்காமல் சென்று விட்டார்களோ என்னவோ!!!

"சரி ஜெனி, உங்க வீடு வரைக்கு நான் பேசிட்டு வர்றேன்"

"தாராளாமாக, இன்னக்கி நீங்களாவது கம்பெனி இருக்கீங்களே, தாங்க்ஸ் கார்த்தி"

என் அபார்டெம்ண்ட் வாசலில் அந்த பொலிஸ் வண்டி நின்றுக்கொண்டிருந்தது.

என் அபார்ட்மெண்டு வாட்ச்மேனை ஏதோக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை என்னைப்பற்றி தான் இருக்குமோ!!!

"ஜெனி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"இப்போ எதுவும் இல்லை, ஐ வாஸ் வொர்க்கிங் பார் சிக்ஸ் மண்த்ஸ்"

"ஜெனி, இந்த டாஸ்மாக் கடை வழியா போக உங்களுக்குப் பயமில்லையா?"

"இல்லை, அவங்க, என்னைக்கவனிக்க மாட்டாங்க, எல்லாத்துக்கு மேல நான் அடக்கமான பொண்ணு, அதனால பிரச்சினையே இல்லை"

இருந்தாலும் எனக்குப் பயமாத்தான் இருந்தது, ஜெனி சொன்ன மாதிரியே குடிமகன்கள் யாரும் எங்களைக் கவனித்தது போல் தெரியவில்லை.

"கார்த்திக் உங்க பைக் எங்க? " ஏன் நடந்து வர்றீங்க?"

" அதுவா, நேத்து பாண்டிச்சேரில ஒரு பார்ட்டி, பார்ட்டி முடிச்சுட்டு நைட் டிரைவ் பண்ணப்ப, மகாப்ஸ் முன்ன ஒரு ஆம்னி பஸ் என் பைக்க அடிச்சுட்டான்.. பைக் நாஸ்தி, எனக்குத்தலையில அடி, ஆம்புலன்ஸ் ல என்னைத்தூக்கிட்டுப் போறதை பார்த்தேன், இப்போ நான் உயிரோடில்லை, இப்போ நான் ஒரு பிம்பம் அவ்வளோதான் உயிரோடு இருந்தப்ப புரியாத நிறைய விசயங்களை கடைசி 20 மணி நேரத்தில புரிஞ்சுகிட்டேன், அது சரி என்னை எப்படி பார்த்திங்க? டு யு ஹாவ் எனி எக்ஸ்ட்ரா பவர்ஸ்"

மெலிதான புன்னகையுடன் "எக்ஸ்ட்ரா பவர்ஸ் என்று எல்லாம் சொல்ல இயலாது, இருந்தாலும் ஆமாம்" என்றாள் ஜெனி.

"சரி, கார்த்திக் வீடு வந்துடுச்சு, இனி அடிக்கடிப் பார்க்கலாம் இப்போ டாடா" என்று சொன்னபடி நடக்கிறாளா, மிதக்கிறாளா எனத்தெரியாதபடி வீட்டுக் கேட்டை அடைந்தாள்.

நானும் ஒரு டாடா காட்டிவிட்டு ,என்னடா இது சோதனை, செத்த பிறகு ஒரு பெண்ணோட அறிமுகம் நினைத்துக் கொண்டே, எனது அபார்டமெண்ட் தெருவை அடைந்தேன்.

அங்க ஒரு போஸ்டர் ஒரு வீட்டின் சுவரில்

அட அந்த போஸ்டரை நான் போகிறப்ப கவனிக்கலியே??!!!


முதலாமாண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி

ஜெனி (எ) ஜெனிபர் பெர்ணாண்டஸ்

தோற்றம் : 17.07.1984 மறைவு 14.02.2006

14 பின்னூட்டங்கள்/Comments:

Appaavi said...

ரொம்ப பேய்த்தனமா எழுதுறீங்க :-)

siva gnanamji(#18100882083107547329) said...

பெண்கள் தினம்-சிறப்பு சிறுகதையா?

Vijayakumar said...

நல்லாயிருக்கு. ஆனா என்ன ஹாலிவுட் சிஸ்க்த் சென்ஸ் படம் ஞாபகம் வர்றது தடுக்கமுடியலை

Vijayakumar said...

நல்லாயிருக்கு. ஆனா என்ன ஹாலிவுட் சிக்த் சென்ஸ் படம் ஞாபகம் வர்றத தடுக்க முடியலை,

none said...

கதை நல்லா இருக்கு. But, முழுக்கை பச்சைக்கலர் சுடிதார் ஆ?
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே??????????????

வினையூக்கி said...

//At 5:05 AM, பூபா said…

நல்லாயிருக்கு. ஆனா என்ன ஹாலிவுட் சிக்த் சென்ஸ் படம் ஞாபகம் வர்றத தடுக்க முடியலை,
//
பூபா, நீங்க சொல்வது சரிதான், இன்ஷ்பிரேஷன் என்னவோ சிக்ஸ்த் சென்ஸ் தான். அதுல ஒரு பேய். இங்க இரண்டு பேரும் பேய்.
நன்றி, கமெண்டுக்கு.

வினையூக்கி said...

//sivagnanamji(#16342789) said...
பெண்கள் தினம்-சிறப்பு சிறுகதையா?
//
ஹிஹிஹிஹி.

வினையூக்கி said...

//
Appaavi said...
ரொம்ப பேய்த்தனமா எழுதுறீங்க :-)
//
தாங்க்யூ அப்பாவி

வினையூக்கி said...

//கதை நல்லா இருக்கு. But, முழுக்கை பச்சைக்கலர் சுடிதார் ஆ?
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே??????????????

//
பூர்னிமா, தாங்க்ஸ்,
பச்சைக்கலர் சுடிதார், முழுக்கை எல்லாம் கற்பனை மட்டுமே

vyju said...

its is a nice song

Anonymous said...

//பூபா, நீங்க சொல்வது சரிதான், இன்ஷ்பிரேஷன் என்னவோ சிக்ஸ்த் சென்ஸ் தான். அதுல ஒரு பேய். இங்க இரண்டு பேரும் பேய்.
நன்றி, கமெண்டுக்கு.//


இல்ல மூணு பேய். அட உன்னையும் சேர்த்து...

வினையூக்கி said...

//
Anonymous said...
இல்ல மூணு பேய். அட உன்னையும் சேர்த்து
//
Thank you Anony

Priya said...

gr8 twist in story...Good but seems bit !!!????...

நளாயினி said...

அட .! இப்படியுமா.!? கொஞ்சம் சுவாரசியம் தான் பேய்க்கதை வாசிச்சதில். நீங்களும் செத்திட்டீங்களா? எப்பிடி எழுத முடியுது. எனக்கு பயம்.