சிபாரிசு - தேன்கூடு போட்டிக்காக
"முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே" நந்தா பாடல் டீவியில் ஓடிக் கொண்டிருந்த பொழுது , அப்பாவின் பைக் சத்தம் கேட்டது. நல்ல பிள்ளை போல பிபிசி செய்தி சேனலுக்கு மாற்றி ஆசியா டுடே பார்க்க ஆரம்பித்தேன். அப்பாக்கு டீவினாலே நியுஸ் தான். சேனல் மாற்றி மாற்றி ஒரு மொக்கை நியுஸைக் கூட தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் எல்லா மொழியிலயும் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்.
அப்பா, உள்ளே வந்து உடைமாற்றி விட்டு , அம்மா கொடுத்த டீ யைக் குடித்து விட்டு , என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"கார்த்தி, ஜாவா கிளாஸ் எப்படி போகுது?"
'நல்லா போயிட்டு இருக்குப்பா!!!'
"வேற ஏதாவது கிளாஸ் போகனும்னா சொல்லுப்பா?, பணத்தை பத்திக் கவலைப் படாதே"
"சரிப்பா"
' சந்துருவ, உனக்கு ஞாபகம் இருக்கா, நாம லால்குடி ல இருந்தப்ப நம்ம வீட்டிலேந்து நாலு வீடு தள்ளி இருந்தான்ல "
"ஆமாம்பா! சந்துரு அண்ணன நல்லா ஞாபகம் இருக்குப்பா!! "
"சந்துருவ பார்த்தேன், சிக்னல் நிக்கிறப்ப என்னை அடையளம் கண்டுக்கிட்டு பேசினான், ஆள் நிறைய மாறி சும்மா ஹிந்தி ஹீரோவாட்டம் இருக்கான், காபி சாப்பிடக் கூப்பிட்டான், சரவண பவன் ல காபி சாப்பிட்டோம். சாஃப்ட்வேர்ல தான் இருக்கானாம். பெங்களூர்ல இருக்கானாம்.. அவன் கம்பெனி கார்டு கொடுத்தான், உன்னைப் பத்திக் கேட்டான்"
'என்னங்க அப்படினா , நம்ம கார்த்திக்கு ஒரு வேலை கேட்டு பாருங்களேன்" இது அம்மா.
அம்மாக்கு எப்போதும் என் வேலைப் பத்தி தான் கவலை. இஞ்சினியரிங் முடிச்சு எட்டு மாசமாச்சு, வேலைக் கிடைக்கல, இதுல WTC வேற இடிச்சுட்டாங்க, னு அடிக்கடி புலம்பி தள்ளுவாங்க .
பிரெஷர் ரெஸ்யூம் னாலே மதிக்க மாட்டுறானுங்க. என்ன பண்றது, எல்லா கோர்ஸையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்பா பத்தி கவலை இல்லை. போஸ்ட் ஆபிஸ் ல நல்ல பதவி, பரம்பரை வசதி, ஒரே பையன், பெரிய நிர்பந்த்தம் எதுவுமில்லை. நான் வேலைக்கு உடனடியாக போகனும்னு கட்டாயமில்லை.
ஆனால் அம்மாவுக்கு இது அக்கம்பக்கத்தில், உறவினர்கள் மத்தியில் கௌரவப் பிரச்சினை. என் மாமா பையன் இந்த எட்டு வருடத்தில் எட்டு முறை உலகம் சுற்றி வந்து விட்டான். அம்மாவோட லட்சியம் அவனை விட நான் பெரிய ஆளா வரனும்னு.
எல்லாம் என் நேரம் 2001 ல ஐ.டி ஸ்லோ டவுன், WTC வேற.. ஏதாவது referral ல தான் உள்ளே போகனும்.
கடவுளே பார்த்து சந்த்துரு அண்ணாவ அனுப்பிச்சு இருக்கார், சந்துரு அண்ணன் என்னை விட எழு , எட்டு வயசு பெரியவர், இஞ்சினியரிங் செமஸ்டர் லீவிலே வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் எங்க கூட கிரிக்கெடடாடுவார். சந்த்துரு அண்னனோட அப்பா , என் அப்பாவிடம் பல முறை கடன் கேட்டு ஆபிஸ் வந்ததை அம்மாவிடம் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அப்பா, படிப்புக்கு மட்டும் உதவி என்று கேட்டால் உடனே உதவி விடுவார். சந்துரு அண்ணாவும் நல்லா படித்து வேலைக்கு சேர்ந்த பிறகு அவங்க அப்பா, எல்லா கடனையும் வட்டியுடன் நாங்க சேலம் மாற்றல்
ஆகி வந்த பிறகும் தேடி வந்து கொடுத்த போது, அப்பபவுக்கு பெருமிதமாய் இருந்த்தது.
அப்பா மட்டும் எனக்காக ஒரு வேலை சந்துரு அண்ணவிடம் கேட்டால் நிச்சயம் செய்வார், ஆனால் அப்பா கேட்கனுமே... சிபாரிசுங்கிறது ஓசில ஒரு காரியம் ஆகனும்னு உறவுகளை/நட்புகளை துருப்புசீட்டா பயன்படுத்துவது என்று அப்பா அடிக்கடி ஒரு எரிச்சல் தரக் கூடிய வேதாந்தம் பேசுபவர்.
அனேகமா கேட்க மாட்டார், இன்னும் எவ்வளவு நாளளென் வேலை தேடும் படலம் தொட்ரப் போகிறதோ!!!!
அப்போ போன் அடித்தது... போனை எடுத்து ஹலோ என்றேன்,
"கார்த்தி , நான் சந்த்துரு பேசுறேன் நீ எப்படி இருக்க? "
'நல்லா இருக்கேன் அண்ணே, "
"சார் கிட்ட உன் ரெஷ்யூம் கேட்டேன், தர்றேன் சொன்னாரு, ஆனால் நிச்சயம் தர மாட்டாரு, என் மெயில் ஐடி நோட் பண்ணிக்கோ, நாளைக்கே, உன் ரெஷ்யூம் forward பண்னு , நான் இண்டர்வியூக்கு அரேஞ் பண்றேன், இது உதவி இல்லை, ஒரு நன்றிக்கடன், அப்பா கிட்ட சொல்லலதே" னு சொல்லி போனை வைத்தார்.
அடுத்த 10 நாளில் சந்துரு அண்ணா வோட சிபாரிசுல மெட்ராஸ்லே யே ஓரளவுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைத்தது.
வேலைக்கு சேர்ந்த 15 நாள் கழித்து அப்பா சந்துரு அண்ணாவொட விசிட்டிங் கார்டைத் தேடிக் கண்டுபிடித்து,அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்த்தார்.
"சந்துரு, என்னோட ஆபிஸ்ல , ஒரு கிளார்க் கோட பையன் இஞ்சினியரிங் முடிச்சுட்டு வேலை இல்லாமல் கஷ்டப் படுறான், ரொம்ப சிரமமான குடும்ப சூழல், பேங்க் லோன்ல தான் படிச்சான், நல்ல பெர்ஷெண்டேஜ் கூட , கொஞ்சம் உதவி பன்ண முடியுமா, நிச்சயம் பேரைக் காப்பாத்துவான், " என்று அவனின் குடும்ப நிலைமையை விளக்கிக் கொண்டிருந்த்தார் என் அப்பா.
எனக்கு நிச்சயம் தெரியும் , சந்துரு அண்ணா அந்த கிளர்க் பையனுக்கும் உதவுவார்.
அப்பாவை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது . இன்றிலாவிடிலும் என்றாவது ஒரு நாள் எனக்கு வேலை கிடைத்த விதத்தைப் பற்றி அப்பவிடம் சொல்லுவேன், நிச்சயம் என்னை மன்னிப்பார்.
10 பின்னூட்டங்கள்/Comments:
excellent!
அப்பாவைப் பற்றி நிறைய சொல்லாமலே அந்த பாத்திரத்தின் ஆளுமையை அருமையா சொல்லி இருக்கீங்க..
+ மற்றும் ஒரு வோட்டு :)
கதை நல்லா இருக்கு!
சிபாரிசு என்பது தேவையான நபருக்கு செய்யவேண்டும்!
nice story...!!...reminded me a lot of munna bhai I.
nice narration....good deviant from ur love stories..!!..kudos
Idhu oru nalla kathainnu naan SIPARISU seyven ;)
Very nicely written. simple and cute.
well done.
கதை ரொம்ப நல்லாருக்கு.
இதுல இலவசம் எங்க வருது?
ஓகை சார்,
சிபாரிசு கூட இலவசம் தான்..
இந்த கதைய படிச்சதும் எனக்கு நான் பல வருஷங்களுக்கு முன்னாடி பார்த்த ஒரு தொலைகாட்சி குரும் படம் / நாடகம் நினைவுக்கு வருது.
அதுவும் ஓரு அப்பா பையன் கதை தான். கதைல பையன் வேலை தேடுவான். ஒரு (cஒம்ப்டிடிவெ) எxஅம் எழுதி பாஸ் பண்ணினா வேலை கிடைக்க வாய்ப்பிருக்கும். அது ரொம்ப கஷ்டமான எxஅம்.
அப்பாவுக்கு நெருங்கிய நண்பர் தான் (ஃஉஎச்டிஒன்ச் செட்) செய்வார்.அவர் நெனச்சா வேலை நிச்சயம் கிடைச்சிடும். மகனோ நேர்மையா (பச்ச்) பண்ணனும்னு எண்ண்ம் உள்ளவன். அப்படி சொல்லி தான் அவனை வளர்திருக்கார் இவ்ளோ நாளா. எப்பிடி பையன் கிட்ட சொல்றது இன்னு தெரியாம யோசிப்பார். வேர வழி தெரியாது.
னண்பர் கிட்ட இருந்து QP வாங்கிட்டு வந்திடுவார். பையன் கிட்ட மொடெல் QP இன்னு சொல்லி கொடுப்பார்.
பையனும் ராபகலா படிச்சு எxஅம் எழுத போவான்.
போனவன் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்திடுவான். 'என்னடா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? ரொம்ப easy paper அ? இன்னு கேட்பார்.
பையன் சொல்வான், "QPயை திறந்து பார்த்தா எல்லா Questions உம் நீங்க குடுத்த model QP ல உள்ளது. அப்டியே repeat ஆகி இருந்துது. அதெப்படி அப்பா நான் attempt பண்ண முடியும்? தப்பில்லையா? அதான், அப்டியே close பண்ணி வெச்சிட்டு வந்திட்டேன்."
This is one story that I can never forget.
And, Unga storyum athey level la supera irukku. Good work Anna.
தனக்காக எதையும் செய்து கொள்ளாமல், அடுத்தவர் நலனுக்காகவே வாழும் ஒரு ரொம்ப சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ரொம்ப நல்ல கதை. அழகா சின்னதா.
Thank you kappi and namakkal sibi
Post a Comment