வலைப்பதிவர் மாநாடு - சென்னை - 19.11.2006
சென்னை வலைப்பதிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முன் கூட்டியே பிரென்சு டெஸ்டை எழுதி விட்டு, மதியம் சாப்பிடக் கூட இல்லாமல் களைப்புடன் பார்வதி
மினி ஹாலைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .
உள்ளே நுழையும் முன் முத்து(தமிழினி) க்கு தொலைபேசினால், அவரும் , பாலபாரதி அவர்களும் வெளியெ வந்து வரவேற்று உள்ளே அமரச் செய்தார்கள். உண்மையில் சகவலைப்பதிவர்களைப் பார்த்தவுடன் பசிக்களைப்பு எல்லாம் பறந்து போயிடுச்சு. உற்சாகம் தானாகவே வந்து விட்டது.
"நம்ம" லக்கிலுக் என் இடதுசாரியிலிருந்து, எனக்கு வலது பக்கம் மாறி நான் தனித்து விடப்படாமல் கவனித்துக் கொண்டார். என்னமோ போங்க , லக்கிலுக் கூட இருந்தது 100 பேர் கூட இருந்தது மாதிரி இருந்தது.
முத்து(தமிழினி) , என் கதையைக் கிண்டலடித்த "அனானிய" கண்டித்த முறையைக் கூறினார்.
ஐயா,இராமகி தலைமையேற்று மாநாடு இனிதே துவங்கியது.
மா சிவகுமாரின் பேச்சின் ஊடே வந்த உதாரணங்கள் ரசிக்கும்படி இருந்தது. கோர்வையாக பேசுவது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளலாம்.
அண்ணன் வரவனையான் கருப்புக்கண்ணாடி அணிந்து அசத்தலாக வந்தார். இவர் சினிமா துறைக்கு சென்றால் விஜயகாந்த்தின் இடத்தைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. (நிஜமாத்தான் சொன்னேன்!!!!)
இட்லிவடையின் ரகசிய நிருபரின் மூலமாக அதிகாரப் பூர்வமற்ற படங்கள் பதிவேற்றப்பட்டவுடன் மாநாட்டில் சலசலப்பு எற்பட்டது.
இடையில் எஸ்.எம்.எஸ் ஸில் கடலைப் போட்டு கொண்டிருந்த என்னை ஒரு வலைப்பதிவு வாசகர் சந்தேகத்துடன் 'நீங்களும் ரகசிய நிருபரா" என்றுக் கேட்டார். என்னுடையது கேமரா மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் ஈழ நண்பர்களுடன் அதிகம் கதைக்க இயலவில்லை.
முன்பு என்னுடைய ஒரு சுமாரன கதைக்கு "அனானிகள்" தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்த போது , ஆறுதல் அளித்த நிலவனை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.
சிவஞானம்ஜி என்னுடைய ஒரு கதையை பாராட்டியது சந்தோசமாக இருந்தது.
டி,பி,ஆர் ஜோசப்பின், வலைப்பதிவர்கள் சங்கம் ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எதிர்காலத்தில் சாத்தியமாகப்போகும் ஒன்று என்று எனக்குப் பட்டது.
டோண்டு, என் மேல் இருந்த பழைய பின்னூட்ட பிரச்சினைக்கான வருத்தம் தீரவில்லை என்று கூறினார் மேலும்
பிரென்சு பாடங்களுக்கான சில புத்தகங்களை பரிந்த்துரைத்தார்.
பாலபாரதி யின் கட்டுரையானா வலைப்பதிவில் சாதீயம் என்பதன் மீதான விவாத அனலில் என் மெட்ராஸ் ஐ போயே போச்சு. ரோசாவசந்த், ஓகை , பூபாலன் ஆகியோர் பேசினர்.
வலைப்பதிவு வாசகர் பூபாலன் கூறிய கருத்து என்னை யோசிக்க வைத்தது.
பொன்ஸ் எனது கதைகளைத் தொடர்ந்து படித்து வருவதாகக் கூறினார்.
மாநாட்டில் மரபூரார் ரொம்ப ஆக்டிவா இருந்த்தார்.
மாநாட்டில் மூன்று முறை டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.
பெரும்பாலோர் இதனால் எனக்கு என்ன லாபம் என்று ஆதாயம் என்று எதிர்பார்க்கும் இந்நாட்களில், தனது அன்றாட அலுவலில் பிஸியாக இருந்த்தாலும், தமிழ்,மேல் உள்ள ஆர்வத்தில் சிரத்தை எடுத்து, கலந்த்துரையாடலை ஏற்பாடு செய்த பாலபாரதிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
மாநாட்டில் நிறைய பேருடன் பேச இயலவில்லை என்பதில் வருத்தம் இருந்தாலும், இது போன்ற மாநாடுகள் எதிர்காலத்தில் நடத்தப் படும் போது, மேலும் பல நண்பர்களைப் பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆட்டோவில் வந்த்து கொண்டிருந்த போது அது வரை அமைதியாக இருந்த பசி எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
'செவிகுணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"
12 பின்னூட்டங்கள்/Comments:
மாநாடா? ஒரு ஐயாயிரம் பேர் கலந்து கொண்டிருப்பார்களா? :-)
அப்ப கூடிய சீக்கிரம் ஃப்ரெஞ்சு பதிவு ஒண்ணு வரப்போகுது:-)))
குமரன்,
'தனியொரு நபராயும் 'மாநாடு' நடத்த முடியும் என்பது அனுபவத்தில்
கண்ட உண்மையாக்கும்:-)))
நியூஸி மகாநாட்டுலே ரெண்டே பேர் கலந்து சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது
என்று தாழ்மையோடு கூறிக்கொள்ளும் இவ்வேளையில்.....:-))))
மாநாடா????? தல ஈதுல ஏதோ உள்/வெளி என எல்லா குத்தும் இருக்கும் போல....? பரவாயில்லை. நானும் கூட உங்களிடம் பேச சில விஷயங்கள் வைத்திருந்தேன். ஆனால் முடியாமல் போனது. அடுத்த முறை டென்ஷன் இல்லாமல் சந்திப்போம்.!
நினைவுக்கு:- அன்று நடந்தது மாநாடடு அல்ல! க்கலந்துரையாடலே!
பதிவுக்கு நன்றி.
குமரன் சார், மாநாடு என்பது உயர்வு நவிற்சிக்காக எழுதப்பட்டது.
ஐம்பது பேரோ, ஐநூறு பேரோ அல்லது ஐயாயிரம் பேரோ, மனித சக்திகளை ஒருங்கினைத்து ஒரு நல்ல விசயத்திற்கு அடிபோட்ட அண்ணன் பால பாரதி பாராட்ட்த்தக்கவர். தமிழ் வலைப்பதிவர் மாநாடு, என்று கூடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
// யெஸ்.பாலபாரதி said...
மாநாடா????? தல ஈதுல ஏதோ உள்/வெளி என எல்லா குத்தும் இருக்கும் போல....? பரவாயில்லை.
//
சார், உள்குத்து என்று எல்லாம் எதுவும் இல்லை. ஒரு உயர்வு நவிற்சிக்காக எழுதப்பட்டது.
தனது அன்றாட அலுவலில் பிஸியாக இருந்த்தாலும், தமிழ்,மேல் உள்ள ஆர்வத்தில் சிரத்தை எடுத்து, கலந்த்துரையாடலை ஏற்பாடு செய்த பாலபாரதிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
//துளசி கோபால் said...
அப்ப கூடிய சீக்கிரம் ஃப்ரெஞ்சு பதிவு ஒண்ணு வரப்போகுது:-)))
//
இங்கு தமிழே ததிங்கினத்தோம்.. பிரென்ச்சா, முயற்சி செய்கிறேன்.
Ungalai neril santhithathil makizchi!
:)))
//இடையில் எஸ்.எம்.எஸ் ஸில் கடலைப் போட்டு கொண்டிருந்த என்னை ..//
அங்கயும் விடலையா தல? அண்ணியைக் கேட்டதா சொல்லுங்க... ;)
பிரென்சு டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சா??
3 தடவை தேநீரா? கணக்கு நன்றாக வருகிறது உங்களுக்கு!!!
இன்னைக்கித்தான் உங்களோட இந்த பதிவ படிச்சேன்..
என்னோட அந்த சங்க பரிந்துரையை கைவிட்டுவிடுவதென தீர்மானித்துவிட்டேன் வினையூக்கி.
சிறிது காலம் கழித்து முயற்சி செய்யலாம் என்ற எண்ணம்..
மற்றபடி உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாயிருந்தது.
Post a Comment