Monday, November 13, 2006

இரட்டை நட்சத்திரம் - 'காதல்' சிறுகதை

பிரகாசமாக தூரத்திலிருந்து ஜெனி வருவதைப் பார்த்துவிட்ட கார்த்தி,
"ஜெனி, வா வா? உனக்காக எவ்வளவு நாளா காத்திருக்கேன் தெரியுமா?"
என்றான்.
"தெரியும் டா, இன்னக்கி தான் எனக்கு விடுதலை கிடச்சுது என்ன பன்றது, நான் உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா?" என்றாள் ஜெனி.

"ம்ம்ம் , எல்லாம் விதி, நம்ம காதலுக்கு உங்க வீட்டுல ஒத்துக்கல, நீயும் பாவம்தான், அம்மா அப்பா வற்புறுத்தலுக்கு, மிரட்டலுக்குப் பணிந்து அந்த பையனோட உன் கல்யானத்துக்கு ஒத்துக்க வேண்டியதா போச்சு, உன் மேலே எப்போதும் எனக்கு கோபம் இல்லை,உன் கல்யானத்துக்கு கூட என்னால வர முடியல, உன் கல்யாணத்தன்னக்கி நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்". என்ற கார்த்தியிடம்

'விசயம் கேள்விப் பட்டு அம்மா கூட பயந்தாங்க தெரியுமா?நீ இருந்தாலும் அப்படி பன்ணிட்டு போய் இருக்கக் கூடாது' என்றாள் ஜெனி.

கீழே வெறித்துப் பார்த்தபடி மேலும் தொடர்ந்தான், "எல்லோரும் ரொம்ப வருத்தமா இருக்கிறாங்க போல"

"ஆமாம், இருக்காத பின்ன? அவருக்கு என் மேல கொள்ளைப் பிரியம்.
என்னை நல்லதான் கவனிச்சிகிட்டாரு,அதனால அவரைப் பிரியுறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு"

'தெரியும் ஜெனி, அப்போ அப்போ இங்கேயிருந்து பார்ப்பேன், உன் மேலே அவர் பிரியமா இருக்கிறதைப் பார்க்கையில் சந்தோசமா இருக்கும்."

"விதி வலியது, கார்த்தி, என்ன பன்றது/"


"ஜெனி, உன்னோட ஆக்ஸிடெண்ட் அ இங்கேயிருந்த்து பார்த்தேன், ஒரு பக்கம் கவலையா இருந்ததலும், உன்னோட கண நேர மரணம், ஆறுதல இருந்துச்சு, ஹாஸ்பிடல் வேதனை, மரண வலியைவிட கொடுமையானது, நான் ஆசிட் குடிச்சு , பெட்ல இருந்த்ப்ப எப்போட சாவு வரும்னு இருந்துச்சு, நல்ல வேளை அந்த வலி உனக்கு இல்லாமல் போச்சு '

'ம்ம்ம், இனி சில கோடி வருசங்களுக்கு யார் தொந்தரவுமில்லாமல் இங்கு இருக்கலாம்' என்று கார்த்தியும், ஜெனியும் வானில் இரட்டை நட்சத்திரமாக மின்ன தொடங்கினார்கள்.

27 பின்னூட்டங்கள்/Comments:

said...

எதிர்பாராத ட்விஸ்ட்
ஜமாய்ங்க

said...

நல்லாயிருக்கு வினையூக்கி! நல்ல திருப்பம்...முடிவை கணிக்கமுடிந்தாலும் இயல்பான நடையில் அழகா சொல்லியிருக்கீங்க!

said...

காதல் இளவரசன் வினையூக்கி வாழ்க

Anonymous said...

வினையூக்கி கதை எழுதறத விட்டுட்டு வேற வேலை பாருங்க. நமக்கு எது ஒழுங்கா வருமோ அதை செய்தால் போதும்.

said...

தலைவர் வினையூக்கியை இடித்துரைக்கும் அனானியை கண்டிக்கிறோம்...

வினையூக்கி கொலைவெறி மன்றம்
வளரசவாக்கம்...

அமுக கழகம் said...

பின்னூட்டங்களை வெளியிட வேண்டும்.

comment pop-up எடுக்கவேண்டும்.இது எங்கள் வேண்டுகோள்.

அமுக
சென்னை

Anonymous said...

pop-up comment நீக்கிய அண்ணன் வினையூக்கியை அனானிகள் சங்க சார்பாக வாழ்த்துகிறோம்.

அமுக
பெசண்ட் நகர் கிளை

said...

//வினையூக்கி கதை எழுதறத விட்டுட்டு வேற வேலை பாருங்க. நமக்கு எது ஒழுங்கா வருமோ அதை செய்தால் போதும். //

இந்த அனானி மாங்காய் யாருன்னு ஆப்பு கிட்டே சொல்லி கண்டுபிடிப்போமா?

said...

அருமையான கதை !!!!! சூப்பரான முடிவு...

said...

ஜெனி, கார்த்தி, விடுதலை.. அது சரி..!!

இன்னும் நம்ம ஆவி அண்ணாச்சி இந்தக் கதையைப் படிக்கலையா :)))

said...

Vinaiooki, Good improvement. Will post more comments later.

said...

Vinaiooki! Good improvement. Shall post more comments later.

said...

nice story....!!!....this time i had problems in following your flow..!!!!!....

C.M.HANIFF said...

Nalla suspense, superna ;)

Anonymous said...

vinai ookki

don't use fake IDs. i see these IDs only in your blog.

said...

//vinai ookki

don't use fake IDs. i see these IDs only in your blog.
//

வினையூக்கியை கலாய்க்கும் இந்த பின்னூட்டம் இட்ட அனானியை மீண்டும் எச்சரிக்கிறோம்.

said...

//sivagnanamji(#16342789) said...
எதிர்பாராத ட்விஸ்ட்
ஜமாய்ங்க
//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.

said...

// கப்பி பய said...
நல்லாயிருக்கு வினையூக்கி! நல்ல திருப்பம்...முடிவை கணிக்கமுடிந்தாலும் இயல்பான நடையில் அழகா சொல்லியிருக்கீங்க!
//
நன்றி ஜூனியர்

said...

//முத்து(தமிழினி) said...
காதல் இளவரசன் வினையூக்கி வாழ்க
//
சார், ஹிஹிஹிஹி...தாங்க்ஸ்

said...

//Anonymous said...
வினையூக்கி கதை எழுதறத விட்டுட்டு வேற வேலை பாருங்க. நமக்கு எது ஒழுங்கா வருமோ அதை செய்தால் போதும்.
//
வருகைக்கு நன்றி அனானி சார்.

said...

//சிவராசன் said...
தலைவர் வினையூக்கியை இடித்துரைக்கும் அனானியை கண்டிக்கிறோம்...

வினையூக்கி கொலைவெறி மன்றம்
வளரசவாக்கம்
//
யாரு சார் நீங்க? நமக்கு மன்றம் எல்லாம் வேணாம். வாழ்நாள் தொண்டனா இருந்த்துட்டுப் போறேன்

said...

நன்றி செந்தழல் ரவி.

said...

அமு கழக வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது

said...

பொன்ஸ், இன்னும் ஆவி அன்னாச்சி கதை படிக்கல..
என்னங்க பன்றது கார்த்தி ஜெனி பேரை மாத்த மனசு வரல

said...

ஞானேஷ் , சௌகான் நன்றி.

said...

கடைசி அனானி, இதுல எதுவும் fake ஐடி இல்லா..அனைவரும் பிரபலமான வலைப்பதிவாளார்கள்

said...

வருகைக்கு நன்றி ஹனிப், பின்லேடன்