Get well soon
உளவியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "நல்ல மனமாற்றத்தை" ஏற்படுத்தக் கூடிய தரமான படங்களை எடுக்கலாம் என்பதற்கு உதாரணம் "லகே ரகோ முன்னாபாய்"
கதை ஓட்டத்தை மட்டும் புரிந்து கொள்ளும் அளவே உள்ள என் ஹிந்தி{நன்றி அந்தக் கால தூர்தர்ஷன்} அறிவுடன் , நான் தியேட்டர் ல பார்த்த முதல் ஹிந்தி படம் "லகே ரகோ முன்னாபாய்"
ரேடியோ அறிவிப்பாளரின் மேல் பிரியம் கொள்ளும் சஞ்ஜய் தத் , அவர் நடத்தும் காந்தி பற்றிய "வினாடி-வினா" நிகழ்ச்சியில் "தில்லாலங்கடி" செய்து வெற்றி பெறுகிறார். அதன் பிறகு ஏற்படும் தொடர்ச்சியான சம்பவங்களுக்காக சஞ்ஜய் தத் காந்தி பற்றிய புத்தங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அதன் விளைவாக அவருக்கு ஏற்படும் "ஹாலுசினேஷன்" மற்றும் தொடர்ச்சியான ஹாஸ்யம் கலந்த நெகிழ்ச்சியான விசயங்கள் தான் கதை. "காந்தீயம்" இன்றும் , என்றும் ஏற்புடையது என்று படம் முடிகிறது.
மக்களே படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்
பின் குறிப்புகள்:
1. "Get well Soon " என்பது படத்தில் வரும் ஒரு சிந்திக்க வைக்கும் ஒரு ஒன் லைனர்
2. காந்தி பற்றிய எனது சில "எதிர்மறையான" எண்ணங்களை இப்படம் சற்று விலக்கியது.
3 பின்னூட்டங்கள்/Comments:
Yes. that is a nice movie
நல்ல பதிவு.இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்ற குறைதான்.
ஆமாம் முத்து{தமிழினி} கொஞ்சம் பெரிய பதிவாகப் போட்டு இருக்கலாம்... தம்பி என்பவர் இதைப் பற்றி சற்றேப் பெரிய பதிவு ஒன்று போட்டுள்ளார்.
http://umakathir.blogspot.com/2006/10/blog-post_04.html
Post a Comment