Tuesday, May 02, 2006

டப்பிங் படங்கள்,

எனது 23 வருட சினிமா பார்க்கும் வரலாற்றில் டப்பிங் படங்களக்கு பெரும்பங்கு உண்டு. குறிப்பாக தெலுங்கு டப்பிங் படங்கள். நீண்ட நாள் வரை சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியன தமிழ் படங்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். புஷ்பக விமானம், தமிழில் பேசும்படம், கன்னடத்தில் இருந்து டப் ஆனது. எனது சினிமா ஆர்வத்தை அடுத்த பரிணாமத்துக்கு எடுத்துப் போனப் படம். கடைசியில் கமலஹாசன் அமலாவின் முகவரி எழுதிய தாளை தொலைக்கும் இடம் கனமான முடிவு.
இதயத்தை திருடாதே. இளையராஜாவின் பாடற்களுக்காகப் பார்த்தப் படம். அந்தப் பேய்ப்பாட்டு அன்றைக்கு எனக்கு மிகவும் பயத்தைக் கொடுத்த பாடற்களில் ஒன்று.

இதுதான்ட போலிஸ், வைஜெயந்தி ஐ.பி.எஸ் டப்பிங் படங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்தப் படங்கள்.

ராஜசேகரின் டப்பிங் படங்களின் சாய்குமாரின் வாய்ஸ் மிக பிரபல்யம்.(நம்ம ஆதி வில்லன்)

சாய்குமார் நடித்த தெலுங்கு, கன்னட டப் படங்களுக்கு அவரே வாய்ஸ் கொடுப்பது ஒரு பிளஸ் பாய்ண்ட்.

அந்தப்புரம், பாதி தெலுங்கு, மறுபாதி பார்த்திபனை வைத்து ரீமேக் செய்யப்பட்டு வித்தியாசமான முயற்சியாக வெளிவந்தது.

சிரஞீவியின் கைதி, கேங்லீடர், முரடன் என சிலக்குறிப்பிடத்தக்க படங்கள், எப்போதும் மனதில் நிற்கும்.
தெலுங்கு படங்களில் எல்லா விசயமும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அப்போது தியேட்டரில் பார்த்த டப் படங்கள் இப்போது டீவி சேனலில் அந்த அந்த மொழியிலேயேப் பார்க்கும்போது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.


எனக்குப் பிடித்த டாப் 10 டப்பிங் படங்கள்

1. பேசும்படம்
2. அந்தப்புரம்
3. சலங்கை ஒலி
4. வாலிபன் (திவ்யபாரதி, வெங்கடேஷ் நடித்தது)
5. உண்மை (மலையாள டப்பிங், மம்மூட்டி நடித்த சஸ்பென்ஸ், த்ரில்லர், மம்மூட்டிக்கு அவரே வாய்ஸ்)
6. 4 ஸ்டூடன்ட்ஸ்
7. இதயத்தை திருடாதே.
8. இது தான்ட போலிஸ், மற்றும் 9. ராஜசேகர நடித்த ஒரு திரில்லர், பெயர் மறந்து விட்டது.
10. வைஜெயந்தி ஐ.பி.எஸ்

18 பின்னூட்டங்கள்/Comments:

said...

எனக்கு தெரிந்த டப்பிங் படங்களின் மொத்த எண்ணிக்கையெ அவ்வளவுதான் அய்யா

said...

மாயாபஜார் தெலுங்கு படங்கள்- என். டி. ஆர் கிருஷ்ணனாய் காட்சியளித்தது நான் நிறைய பார்த்திருக்கிறேன், பிறகு
விட்டலாச்சாரியாரின் ஜெகன் மோகினி, தற்கால ரம்யாகிருஷ்ணனின் அம்மன். இதையெல்லாம் விட்டுடீங்களே!
சூப்பர் ஹிட்- மம்முட்டி நடித்த "ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு" அதையும் லிஸ்டுல சேர்த்துக்குங்க

said...

காந்தாராவ் தானே, ஜெயமாலினி யுடன் நடிப்பவர். ஆமாம், அம்மன் குறிப்பிடத்தக்கப் படம், சுரேஷ் கூட அந்தப் படத்தில் இருப்பார். பாலகிருஷ்னா நடித்த டைம் மெஷின் படம் நல்லா இருக்கும். ரஜினி, ராகேஷ் ரோஷன் நடித்த ஹிந்தி டப்பிங் படம் ஒன்று அடிக்கடி ராஜ் டிஜிடல் பிளசில் போடுவான்.

said...

சாய்குமாரின் தமிழ் படங்களுக்கு வாய்ஸ் குடுப்பது அவரது சகோதரர். தூள் படத்தில் வில்லன் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவருக்குமே அவர் வாய்ஸ் குடுத்து பிரபலம் ஆனார்.

said...

எவனாய் இருந்தால் எனக்கென்ன, மீசைக்காரன், ஆட்டோ ராணி, போலிஸ் லாக்கப், இன்டிபெண்டன்ஸ் டே, கமிஷனர் ஆகியன சில குறிப்பிடும்படியான டப் படங்கள்

said...

தமிழில் மணிரத்னம் எடுத்த "பகல் நிலவு" படம் தெலுங்கில் அர்ஜுனை வைத்து ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஷயம் என்னவென்றால் அந்த அர்ஜுனின் படம் மீண்டும் தமிழில் டப் செய்யப்பட்டது. மலையாள ஹிட்லர் படம் தமிழில் மிலிட்டரி என்று ரீமேக் செய்யப் பட்டது. மிலிட்டெரி வருவதற்கு முன் ஹிட்லர் டப் செய்யப்பட்டுவிட்டது

said...

நான் ரசித்து பார்த்தபடம் மம்முட்டியின் உண்மை உங்கள் பட்டியலிலும் இருப்பது மகிழ்ச்சி.

said...

பேசும் படம் எப்படி டப்பிங் படம் ஆகும்??? அதில் தான் எந்த மொழி வசனமும் இல்லயே!! ஆனால் நிறைய பேருக்கு இதே வரிசை தான். உண்மை, டாப் ஆப் த லிஸ்ட்.

said...

பேசும் படம், டப்பிங் படமா??? நல்ல கேள்வி. முதலில் கன்னடத்தில் தான் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.

said...

//எவனாய் இருந்தால் எனக்கென்ன //

இந்த வாக்கியத்தோட ஆரம்பத்தை பாத்தவுடன் திக்னு ஆயிடுச்சு...

படம் பேரை எழுதும்போது பாத்து எழுதறது இல்லையா?

என்னவோ பின்னூட்டம் இடறவனை திட்ற மாதிரியில்ல ஆயிடுச்சு:)))

said...

இரண்டு மிக முக்கியமான படங்களை விட்டுவிட்டேன். ஆனந்த மழை, சிரஞ்சீவி தம்பி பவன் கல்யான் நடித்து நம்ம ஊர் கருனாகரன் டைரக்ட் செய்தது. அப்புறம் "உயிரே" டப்பிங் படத்தில் இதை விட்டு விட முடியுமா

said...

இரண்டு மிக முக்கியமான படங்களை விட்டுவிட்டேன். ஆனந்த மழை, சிரஞ்சீவி தம்பி பவன் கல்யான் நடித்து நம்ம ஊர் கருனாகரன் டைரக்ட் செய்தது. அப்புறம் "உயிரே" டப்பிங் படத்தில் இதை விட்டு விட முடியுமா

said...

நீங்க தூஃபான் மெயில், ரிவால்வர் ரீட்டா போன்ற ஹிந்தி டப்பிங் படங்கள் பார்த்ததில்லையா?

டப்பிங் படம் என்றாலே ஒரு பயத்தோடு பார்க்கவேண்டியதில்லை. சிப்பிக்குள் முத்து போன்ற நல்ல டப்பிங் படங்களும் உண்டு என்பதை மறவாதீர்.

said...

சீனியர் சார்.. எந்த வருட பாஸ்-அவுட் நீங்க... ? (TCE-la)

said...

பேசும் படம் புஷ்பக் என்ற பெரில் கன்னடத்தில் வந்தது.

said...

பாரதிராஜாவின் தெலுங்குப் படமொன்று `நாற்காலிக் கனவுகள்' என்று வெளியானது (1988-89 என நினைக்கிறேன்). இளையராஜாவின் இசையில், வைரமுத்துவின் வசனங்களில், கிருஷ்ணா, ராதா நடித்த அந்தப் படத்தைப் அஷோக் நகர் உதயம் தியேட்டரில் பார்க்க வந்த ரசிகர்கள் சீன் பை சீனாக அடித்த கமெண்டுகள்தான் ரசிப்பிற்குறியதாய் இருந்தது.

மலையாள டப்பிங் படமொன்று, பேபி இயக்கியது - `மைடியர் குட்டிச்சாத்தான்' பல வருடங்களுக்கு முன்னதாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டேன்.

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில், பூ ஒன்று புயலானது படத்தையும் சேர்க்கலாம். விஜயசாந்திக்கு மிகப்பெரிய breakthroughவைக் கொடுத்த படம். சரண்ராஜ் பெரிய அளவில் பிரபலமான படம். இன்னும் சொல்லப்போனால், அது தமிழில் டப் செய்யப்பட்டு வந்த பின்னர், அரசியல் சப்ஜெட் படங்கள் பல தமிழில் வரலாயின...

கமலின் மளையாளப் படமொன்றும் டப் செய்யப்பட்டு வந்தது நினைவுக்குவருகிறது (1987ல்?). IVசசியின் `விரதம்' அது; கீதா, லிசி நடித்தது.

ராம்கோபால் வர்மாவின் `உதயம்' சென்னைத் தியேட்டர்களைக் கலக்கியது ஞாபகத்திற்கு வருகிறது, நாகர்ஜுனாவும் அமலாவும் ஜோடிசேர இளையராஜாவின் டிஸ்கோ இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ பவானி சங்கராக வந்த ரகுவரந்தான்.

கீதாஞ்கலியில் எல்லா பாடல்களையும் SPB பாடியிருப்பார்; தமிழில் (இதையத்தைத் திருடாதே) மனோ பாடியிருப்பார்; இரண்டையும் கேட்கலாம். அதில் நடித்த கிரிஜா, பின்னர் மோகன்லாலோடு வந்தனம் படத்தில் வந்ததோடு சரி என நினைக்கிறேன்.

ஓட்டப்பந்தய வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவை வைத்து `அஸ்வினி' என்ற பெயரில் மௌலி எடுத்த தெலுங்குப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ஓரளவு வெற்றிகண்டது.

1999-2000 வாக்கில், `கண்டேன் சீதையை' என்று ஒரு படம். சௌந்தர்யா, விக்ரம் நடித்தது. தெலுங்கிலிருந்து டப் செய்யப்பட்ட போதிலும், சுவாரஸ்யம் கருதி, விவேக்கின் காமடி ட்ராக்கை இணைத்திருந்தார்கள் (குறட்டை அரங்கம்...ஞாபகம் வருதா?).

ரஜினியின் ஹிந்திப் படங்கள் ஒரு காலகட்டத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு அவர் ரசிகர்களே அதிகம் விரும்பாமல் சீக்கிரமாக தியேட்டரைவிட்டு ஓடியது.

இன்று, விக்ரம் பயப்படுவதும் அதற்குத்தான். எப்போதோ அவர் நடித்த தெலுங்குப் படமொன்று, `மகா' என்ற பெயரில் ரீலிஸ் ஆகப்போகிறதாம். மனிதர் செய்தியறிந்து படுஅப்செட் ஆகியுள்ளார்.

said...

Thank you ModernPrince for your informations. I have seen "Udhayam", kandaen seethaiyai. I like "Subhalekha sudhakars" acting in udhayam.

said...

ஹிரித்திக் ரோஷன் நடித்த "கிரீஷ்" வருகிறது... நம்ம மல்லிகா ஷெராவத் கூட இருக்காங்க்ன்னு நினைக்கிறேன்