நட்சத்திரப் பின்னூட்டம்: முத்து(தமிழினி)க்கு
பதிவுக்கு மட்டும் தான் நட்சத்திர அந்தஸ்தா!! நண்பர் முத்து(தமிழினி) யை மரியாதை செய்யும் வகையில் அவருக்கு அளிக்க இருந்த பின்னூட்டத்தை தனிப்பதிவாகப் போட்டு அவருக்கு வரும் பின்னுட்டங்களையும் என் பக்கமாக பிரிக்க ஒரு திட்டம். (என்னங்க செய்வது, தேர்தல் நேரமல்லவா அதுதான் மூளை இப்படி வேலை செய்கிறது). இது நட்சத்திரப் பின்னூட்டம்.
முத்து(தமிழினி) யின் எழுத்தில் என்னைக் கவர்ந்த விஷயம், அவரது எளிமையான எழுத்து நடை. நுனிப்புல் மேயும் என்னைப் போன்றவர்களுக்கு எளிமையான நடையில் எளிதாக மேய முடிகிறது. .
முத்து(தமிழினி) யின் எழுத்துக்களில் எனது வாழ்க்கை சம்பவங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. அவரின் தந்தையைப் பற்றி எழுதிய ஒரு பதிவு என்னை மிகவும் பாதித்தது. எனது தந்தையும் படுக்க பஞ்சு மெத்தை தரவில்லை ஆனாலும் முள்படுக்கை இல்லாமற் பார்த்துக் கொண்டார். முத்து(தமிழினி) யின் இந்த வாக்கியத்தை எனது சொந்தக் கருத்தாகக் கூறி எனது தந்தையை சந்தோசப் படுத்தினேன். பொதுவாகவே எனக்கு ஆங்கில மீடியத்தில் படிக்க வில்லையே என்ற ஒரு ஆதங்கம் உண்டு. அதன் வெளிப்பாடாக சில சமய்ங்க்ளில் குத்திக் காட்டி பேசிவிடுவேன். இனிமேல் எனது தந்தையிடத்து எனது குத்தல் பேச்சுக்கள் இருக்காது என நம்பலாம்.
சில சமயங்களில் சிலரது வார்த்தைகள் நம்மை வெகுவாகப் பாதித்து நல்ல மனமாற்றங்களை உருவாக்கும். எழுத்தாளனின் வெற்றி உலகில் எந்த மூலையிலாவது ஏதேனும் ஒரு மனிதனிடமாவது மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் தான் இருக்கிறது. அந்த வகையில் முத்து(தமிழினி) ஒரு எழுத்தாளராக வெற்றிப் பெற்று விட்டார்.
மாற்றுக் கருத்து உடையோரையும் மதிக்கும் அவரின் மாண்பையும் பாராட்டி நிச்சயம் ஒரு பல்சுவையான ஒரு நட்சத்திர வாரத்தை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இப்பதிவு அவரை வாழ்த்தி, மேலும் பல சிறப்பு நட்ச்சத்திர பின்னூட்டங்கள் தனியேப் பதிவு செய்யப்படும்.
3 பின்னூட்டங்கள்/Comments:
//நுனிப்புல் மேயும் என்னைப் போன்றவர்களுக்கு எளிமையான நடையில் எளிதாக மேய முடிகிறது. //
NanRi, NanRi, NanRi :-))))))))))))
இந்த ஐடியா நல்லா இருக்கே. முத்து-தமிழினியைப் பெருமைப்படுத்தும் இப்பதிவில் உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்.
நானும் சேர்ந்து கொள்கிறேன், "தமிழினி"க்காக! தருமி, கொஞ்சம் கடையான்ட எட்டி பாக்கறது....
Post a Comment