Monday, May 08, 2006

தி.மு.க விற்கு 40% ஓட்டுக்கள்

தி.மு.க விற்கு 40% ஓட்டுக்கள் கிடைத்தது. அ.தி.மு.க விற்கு 20% ஓட்டுக்கள் மட்டுமேக் கிடைத்தது. அட....இது எப்படின்னு கேட்கிறீங்களா... எங்க வீட்டுலதாங்க... எங்க வீட்டுல மொத்தம் 5 ஓட்டு..அதுல இரண்டு சூரியனுக்கு...ஒன்று இரட்டை இலைக்கு.. பாக்கி இரண்டு பேர் வெளியூர போய் இருக்கிறதுனால ஓட்டுப் போட முடியலா... ஆமாம் அந்த ஒத்த ஓட்டு அ.தி.மு.க விற்கு யார் போட்டாங்க... அட அது நான் தாங்க...

12 பின்னூட்டங்கள்/Comments:

நாமக்கல் சிபி said...

தேர்தல் முடியற வரைக்கும் இந்த மாதிரி அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளதாகத் தகவல்!

Muthu said...

சென்னை மாநகர திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முண்ணனியின் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு அனைத்து பொறுப்பளிலும் இருந்து வினையூக்கி செல்வக்குமார் நீக்கப்பட்டுள்ளார்.

அனைத்து கழக கண்மணிகளும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று வேண்டப்படுகின்றனர்.:)))))))))))))

வினையூக்கி said...

அ.தி.மு.க விலும் "திராவிடம்" இருக்குதப்பா!!!!

krishjapan said...

சத்தியத்துக்கு எதிர்சொல் அசத்யம் தானுங்க? நியாயத்துக்கு அநியாயம்தானுங்க, தர்மத்துக்கு அதர்மம்தானுங்க, அது மாதிரி, திராவிடத்துக்கு எதிர்பதம் அதிமுகதானுங்க

நாமக்கல் சிபி said...

//திராவிடத்துக்கு எதிர்பதம் அதிமுகதானுங்க//

ஓஹோ! அப்ப பசகுணத்துக்கு எதிபதம்தான் அபசகுணமா?

முத்துகுமரன் said...

//திராவிடத்துக்கு எதிர்பதம் அதிமுகதானுங்க//

நெத்தியடி

Sivabalan said...

// அனைத்து கழக கண்மணிகளும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் //

உத்தரவு! தலைவா!

வினையூக்கி said...

"அனைத்து இந்திய" சேர்த்து "திராவிடத்தை" தேசிய நீரோடத்தில் சேர்த்தாச்சுப்பா....

Muthu said...

சித்தி,

பயங்கர காமெடி உங்களுது...

வினையூக்கி said...

ஐயகோ....

Muthu said...

//அ.தி.மு.க விலும் "திராவிடம்" இருக்குதப்பா!!!!//

//"அனைத்து இந்திய" சேர்த்து "திராவிடத்தை" தேசிய நீரோடத்தில் சேர்த்தாச்சுப்பா....//

உடன்பிறப்பே,
என்று ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டவில்லையெனில் எங்கு கட்டுவோம் என்று செல்வி ஜெயலலிதா கூறினாரோ அன்றே திராவிடத்தை குழித்தோண்டி புதைத்துவிட்டார்.( ராமர் திராவிட கடவுள் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

மீண்டும் இரண்டாவது முறையாக கோவில்களில் உயிர்பலிகளை தடுக்கிறேன் என்று சட்டம் போட்டாரே அப்போதே மிச்சம் மீதி இருந்த திராவிடத்தை ஒழித்தே விட்டார் ஜெயலலிதா.

ஆகவே மாற்று முகாமை சேர்ந்த வினையூக்கியின் இந்த விஷம கருத்துக்களை மட்டும் மதியுள்ளம் படைத்தோர் ஒதுக்கி, கட்சி விரோத நடவடிக்கைகளினால் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள திருச்சி சீமையின் சின்னபையன் வினையூக்கியை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற என் அண்ணன் அண்ணாவின் வழியில் மனதை கரைத்து நம் வழிக்கு கொண்டு வா.

படை திரண்டு போ..பகை வென்று வா...

Bharaniru_balraj said...

திராவிடம் அ தி மு க வில் இருக்கு ....தப்பா.