ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்
ஆறு என்றாலே எனக்கு எப்போதும் ஞாபகம் வருவது "கிரிக்கெட் சிக்சர்" தான்... எனக்குப்பிடித்த "சிக்சர்கள்" அதிகம் அடிக்கும் கிரிக்கெட் வீரர்கள்.
1. நம்ம "தோனி".
2. சாகித் அப்ரிடி.
3. கெவின் பீட்டர்சன் (முரளீதரன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் அடித்தவர்)
4. டௌக்லஸ் மெரிலியர். (விக்கெட் கீப்பர் தலைக் மேல் சிக்ஸர் அடித்தவர்)
5. "கில்லி" கில்க்ரிஸ்ட்
6. "தல " கங்குலி.
பிடித்த 6 வாக்கியங்கள்/குறள்கள்
1. Life is pre-programmed.
2. Things are not always as it seems.
3. Known devils are better than Unknown angels.
4. பீலி பாய் சாகாடும் அச்சிறுப் பண்டம்
சால மிகுத்துப் பெயின்
5. Out of sight out of mind.
6. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்
பிடித்த ஆறு பாடற்கள்.
1. காதல் சொனன கணமே (பாய்ஸ்)
2. கடவுள் தந்த அழகிய வாழ்வு (மாயாவி)
3. ஆனந்தம் ஆனந்தம் பாடும் (பூவே உனக்காக)
4. அம்புலி மாமா (பேரழகன்)
5. நல்லதோர் வீணை செய்தே (வறுமையின் நிறம் சிகப்பு)
6. உனக்கென்ன மேலே நின்றாய் ( சிம்லா ஸ்பெஷல்)
பிடித்த ஊர்கள்
1. லால்குடி (நான் இந்த ஊர்ல +2 மட்டும் படிச்சேன்)
2. கொரடாச்சேரி(எங்க அப்பாவொட சொந்த ஊர், தஞ்சை மாவட்டம்)
3. பத்மனாபபுரம்
4. கோயம்புத்தூர்
5. திருப்பரங்குன்றம்
6. பெங்களுரூ (இனிமேல் இங்கே தான் வாசம்)
பிடித்த ஆறு அரசியல் தலைவர்கள்
1. கலைஞர்
2.ஜெயலலிதா
3. வி.பி.சிங்
4. ஜார்ஜ் பெர்ணன்டஸ்
5. சந்திர பாபு நாயுடு
6. விஜயகாந்த்
நான் பார்த்து வியந்த ஆறு மனிதர்கள்
1. திரு. சுரேஷ் காமத்( நான் முன்பு வேலைப் பார்த்த நிறுவன அதிபர்)
2. திரு. ராம்கோபால் (எனது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர்)
3. திரு.முத்து கிருஷ்னன் (எனது +2 பள்ளியின் தலைமையாசிரியர்)
4. திரு.தாமஸ் அடிகளார் (எனது +1 வரை பள்ளியின் தலைமையாசிரியர்)
5. எனது அப்பா
6. நான் (என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், சில சந்தர்ப்பங்களில் எனக்கு நானே ரசிகன்)
27 பின்னூட்டங்கள்/Comments:
வாய்யா வடிவேலு,
வந்து ஒரு நாள் கூட ஆகலை.வேலையை ஆரம்பிச்சாச்சா?
அண்ணே!!!!... அடுத்த வாரம் தான் புது வேலை... இப்போ வேலையை விட்டுட்டு வீட்டுல வெட்டி தான்...
//நான் (என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், சில சந்தர்ப்பங்களில் எனக்கு நானே ரசிகன்//
தன்னம்பிக்கை வரிகள்
//என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், சில சந்தர்ப்பங்களில் எனக்கு நானே ரசிகன்//
சூப்பர் சிக்சர்.
உங்க பிடித்த தலைவர்க்களை பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கிறதே.....
//உங்க பிடித்த தலைவர்க்களை பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கிறதே..... //
சிவா,
நல்லவை எடு அல்லவை விடு அப்படீங்கற எண்ணத்துல பாத்தா குழப்பமே வராதுனு நினைக்கிறேன். சரி தானங்க வினையூக்கி
பொறுமைக்கு கலைஞர்
தைரியத்துக்கு ஜெயலைலிதா.
நம்பிக்கைக்கு விஜயகாந்த்
அரசியல் சாணக்கியத்துக்கு பெர்ணான்டஸ்
நேர்மைக்கு வி,பி,சிங்
முன்னேற்ற திட்டங்களுக்காக நாயுடு
//"தல " கங்குலி.//
அதான் ஆப்படிச்சிட்டாங்களே..நம்ம சிங்கம் பாவம் :((
//உனக்கென்ன மேலே நின்றாய் //
செம பாட்டு தல..
//திருப்பரங்குன்றம்//
5-வது தானா??:((
உண்மையைச் சொல்லனும்னா உங்களைப் பார்த்து வியந்தவங்க நிறைய பேர்...என்னையும் சேர்த்து தான்...
//Life is pre-programmed//
வாழ்க்கையை அப்படியே ஏத்துக்கற மாதிரி இருக்கு இது..
"தல" கங்குலி சிங்கம் "மீண்டு"ம் வரும்...
திருப்பரங்குன்றம் மனதளவில் எப்போதும் முதலிடம்....
////உண்மையைச் சொல்லனும்னா உங்களைப் பார்த்து வியந்தவங்க நிறைய பேர்...என்னையும் சேர்த்து தான்.../////
கப்பி நன்றிகள்...
//நல்லவை எடு அல்லவை விடு //
இதில் நல்லவை எது, அல்லவை எது
அது தானே முக்கியமான மேட்டரு...
வினையூக்கி நீங்கள் கூறுவது போல ஒவ்வொருக்கு தனித்தன்மை உண்டு. மொத்தில் பார்க்கும் போது ஒவ்வொருவம் ஒவ்வொரு விதத்தில் ஏமாற்றத்தை தந்து உள்ளார்க்கள்.
///வாழ்க்கையை அப்படியே ஏத்துக்கற மாதிரி இருக்கு இது..////
குப்புசாமி செல்லமுத்து,
வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளும்போது பெரிய ஏமாற்றங்கள் ஏதும் இருக்காது.
விஜய்காந்த், கொரடாச்சேரி, லால்குடி, 'எனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்'ன்னுல்லாம் சொல்லி ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க.
ஸலீம் துரானி, காட்டடி குந்தரன் ந்னுலாம் கூட ஸிகசர் சிங்கங்கள் இருந்திருக்காங்க, நம்ம ஊரில!
ரசித்த பதிவு.
//வினையூக்கி நீங்கள் கூறுவது போல ஒவ்வொருக்கு தனித்தன்மை உண்டு. மொத்தில் பார்க்கும் போது ஒவ்வொருவம் ஒவ்வொரு விதத்தில் ஏமாற்றத்தை தந்து உள்ளார்க்கள்.//
சிவா நீங்கள் கூறுவது சரிதான்... ஆனால் இவர்களின் சிறப்புகளை மட்டும் "இன்ஸ்பைர்" செய்ய முயல்கிறேன்...
//ஸலீம் துரானி, காட்டடி குந்தரன் ந்னுலாம் கூட ஸிகசர் சிங்கங்கள் இருந்திருக்காங்க, நம்ம ஊரில!//
எஸ்.கே சார்..
லால்குடி, கொரடாச்சேரி எப்படி உங்களுக்கும் அறிமுகம்..தெரிந்து கொள்ள ஆர்வம்
1991 லிருந்து தான் கிரிக்கெட் பார்க்கிறேன்... அப்போ அப்போ கிரிகின்போ வலைதளத்கில் பழைய ஸ்கோர்கள் பார்ப்பது வழக்கம்...
நன்மனம் வருகைக்கு நன்றிகள்
திருச்சியில் ஈ.ஆர். ஹைஸ்கூலில் படித்தேன்.
டவுன் ஸ்டேஷன் ரோட்டில் இருந்தபோது, அந்த லால்குடிக்குச் செல்லும் கோச் ரெயிலைத் தினமும் பார்ப்பது ஒரு ஆனந்தம்.
சமீபத்தில், இந்தியா சென்றபோது, சப்தகிரீஷ்வரையும், ஷ்ரீமதி அம்மனையும் தரிசித்து வந்தேன்.
அன்பிலில் எனது உறவுக்காரர் ஒருவர் மருத்துவராக ரொம்ப காலம் பணி புரிந்தார்.
அவருடன் லால்குடிக்கு அடிக்கடி சென்றிருக்கிறேன்.
ரோடு இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது!
கொரடாச்சேரி என் தாய்வழி ஊர்.
ஒருவகையில் எனக்கும் பூர்வீகம்.
அதிகம் போனதில்லை.
Thank you S.K sir.
நன்றி எஸ்.கே சார். எனக்கு லால்குடி - திருச்சி பாசஞ்ஜர் ரயில் பயணம் பிடிக்கும்... சப்த்ஷ்ரீவர் கோயிலுக்கு அடிக்கடி செல்வது உண்டு.. லால்குடி அருமையான நகர் சார்ந்த கிராமம்...
இந்த கொரடாச்சேரி எங்க இருக்கு? லால்குடி பக்கத்துல வருமா?
மத்தபடி உங்களுக்குப் பிடிச்ச ஆறு அரசியல்வாதிகளுக்கான விளக்கம் நல்லா இருக்கு.
அப்படியே அந்த பத்மனாபபுரம் எங்க இருக்குன்னு சொன்னாலும் நல்லா இருக்கும்.. கேள்விப்பட்ட ஊரா இருக்கு :)
பொன்ஸ்,
கொரடாச்சேரி தஞ்சாவூருக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ளது.
லால்குடி திருச்சியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. வளமையான பெரிய கிராமம். பத்மனாப புரம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது. பி.ஜே.பி முதன் முறையாக தமிழகத்தில் வெற்றி பெற்ற இடம். பத்மனாபபுரம் அரண்மனை பேர் பெற்றது.
பொன்ஸ்,
டைப் செய்ததில் விளைந்த தவறு... மன்னிக்கவும். நேர்த்தியாக சுட்டியமைக்கு நன்றி.
"பீலி பெய் சாகாடும்" என்று இருக்க வேண்டும் நண்பர்களே..தவறுக்கு மன்னிக்கவும்.
தஞ்சாவூர்க்கும் நாகைக்கும் நடுவில் உள்ளது கொராட்சேரி.(சரியாக 42வது கிலோமீட்டர் - இருபக்கம் இருந்தும்)
எஸ்.கே., தாங்களும் சோழ மண்டலத்தை சார்ந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
வினையூக்கி, இந்த சப்தஷ் ரீவர் கோவிலை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்.
பொன்ஸ் பதிப்பிக்கப் படாத அந்த பின்னூட்டத்திற்கும் நன்றி... ஹி ஹீ
நாகை சிவா,
சப்த்ஷ்ரீஷ்வர் ஆலயத்தைப் பற்றி திரு.எஸ்.கே அவர்கள் கூறக் கேட்டால் நல்லா இருக்கும். எஸ்.கே அவர்களே தாங்கள் எழுத முடியுமா?
//பொன்ஸ் பதிப்பிக்கப் படாத அந்த பின்னூட்டத்திற்கும் நன்றி... ஹி ஹீ //
நான் போட்ட எல்லா பின்னூட்டத்தையும் பதிப்பிச்சிடுங்க தலைவா.. ஏதாச்சும் உள் நாட்டுச் சதி பண்றேன்னு மக்கள் நினைக்கப் போறாங்க :))
//திருப்பரங்குன்றம் மனதளவில் எப்போதும் முதலிடம்.... //
அது!!!!
Post a Comment