டோண்டு சார் நான் பிரென்சு பாஸாயிட்டேன்
அடிப்படை ஆங்கில இலக்கணத்தைப் புரிந்து கொள்ள எனக்குப் பத்து வருடங்கள் ஆனது. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் தான் எனது "அதிரடி" ஆங்கில ஆசிரியர்கள் திருவாளர் ஃபிரான்க், திருவாளர் இருதய குமார் மூலம் ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழில் இருந்து மனதளவில் மொழி பெயர்த்த பிறகுதான் பேச முடிகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், என்னால் பிரென்சு அடிப்படை இலக்கணத்தை 6 மாதங்களில் கற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கு மிகப்பெரும் காரணம் எனது பிரென்சு ஆசிரியை.
லெவல் ஒன்று முடித்தாகி விட்டது. டோண்டு சார், நான் த்ரே பியான் எடுத்து பாஸாயிட்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன் முத்து(தமிழினி) விடம் தொலைபேசியில் பேசி ஆச்சு. பேசிய பின் தான் புரிந்தது அவர் நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல , நல்ல பேச்சாளரும் கூட.
நல்ல பதிவுகளை உருவாக்குவதற்கு சில குறிப்புகளை அளித்தார்.
சிறப்பான ஒரு அனுபவம் அவரிடம் பேசியது. நன்றி முத்து(தமிழினி)
6 பின்னூட்டங்கள்/Comments:
கவுத்துட்டயே பரட்டை!!!
//லெவல் ஒன்று முடித்தாகி விட்டது.//
congrats....
வாழ்த்துக்கள் வினையூக்கி அவர்களே. அல்லயன்ஸில் ஃபேர்வல் பார்ட்டி கொடுப்பார்களே. முடிந்ததா?
அடுத்த வகுப்பு ஜூலை மாதம்தானே ஆரம்பிக்கிறார்கள்? அடுத்த ஆண்டுக்கான புத்தகத்தை இப்போதே வாங்கி அதன் இலக்கண பயிற்சிகளை இப்போதே செய்து முடித்து விடவும். பிறகு வகுப்பில் விளையாடலாம். நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து படிக்கவும்.
இப்படியே டிப்ளோம் சுப்பெரியோரையும் முடித்து விடவும். அதற்கு முன்னால் ஓய்வு எடுக்காதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்படியே டிப்ளோம் சுப்பெரியோரையும் முடித்து விடவும். அதற்கு முன்னால் ஓய்வு எடுக்காதீர்கள்//
டோண்டுவின் முரட்டு வைத்தியம்??? :)
வாழ்த்துக்கள்!!
ஆம் முரட்டு வைத்தியம்தான். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_22.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment